| 1 | ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனுக்கும் கல்தேயாவின் குடிமகளுக்கும் எதிராக அழிவுக் காற்றை எழுப்பி விடுவேன். | எரே 50:9 எரே 50:14-16 எரே 50:21-16 ஏசா 13:3-5 ஆமோ 3:6 |
| 2 | புடைப்போரைப் பாபிலோனுக்கு அனுப்பிவைப்பேன்: அவர்கள் அதைச் சலித்தெடுப்பார்கள்: தண்டனை நாளில் அவர்கள் எப்பக்கத்தினின்றும் அதற்கு எதிராக எழுந்து வருவார்கள்: அந்த நாட்டை வெறுமையாக்குவார்கள். | எரே 15:7 ஏசா 41:16 எசே 5:12 மத் 3:12 |
| 3 | வில்வீரன் வில்லை நாணேற்ற விடாதீர்கள்! தன் கவசத்தை அணிந்து நிற்க விடாதீர்கள்! அதன் இளைஞர்கள் யாரையும் விட்டுவைக்காதீர்கள்: அதன் படையை முற்றிலும் அழித்துப்போடுங்கள். | எரே 50:14 எரே 50:41 எரே 50:42 |
| 4 | கொலையுண்டோர் கல்தேயரின் நாட்டில் வீழ்ந்து கிடப்பர். காயமடைந்தோர் அதன் தெருக்களில் கிடப்பர். | எரே 49:26 எரே 50:30 எரே 50:37 ஏசா 13:15 ஏசா 14:19 |
| 5 | தங்கள் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இஸ்ரயேலையும் யூதாவையும் கைவிட்டுவிடவில்லை. இஸ்ரயேலின் தூயவருக்கு எதிராகக் கல்தேயரின் நாடு குற்றங்களால் நிறைந்துள்ளது. | எரே 33:24-26 எரே 46:28 எரே 50:4 எரே 50:5 எரே 50:20 1சாமு 12:22 1இரா 6:13 எஸ்றா 9:9 சங் 94:14 ஏசா 44:21 ஏசா 49:14 ஏசா 49:15 ஏசா 54:3-11 ஏசா 62:12 ஓசி 1:10 ஆமோ 9:8 ஆமோ 9:9 ரோம 11:1 ரோம 11:2 |
| 6 | பாபிலோன் நடுவினின்று தப்பியோடுங்கள்: ஒவ்வொருவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளட்டும்: அதன் குற்றகளுக்காக நீங்கள் அழிந்து போகாதீர்கள்: இது ஆண்டவர் பழிவாங்கும் காலம், அவரே அதற்குத் தகுந்த தண்டனை வழங்குவார்: | எரே 51:9 எரே 51:45 எரே 51:50 எரே 50:8 எரே 50:28 ஏசா 48:20 சகரி 2:6 சகரி 2:7 வெளிப் 18:4 |
| 7 | பாபிலோன் ஆண்டவரின் கையில் பொற்கிண்ணம்போல் இருந்தது: அது மண்ணுலகு முழுவதற்கும் போதை ஊட்டியது: மக்களினங்கள் அதன் திராட்சை இரசத்தைப் பருகின: நாடுகள் வெறிகொண்டன. | ஏசா 14:4 தானி 2:32 தானி 2:38 வெளிப் 17:4 |
| 8 | பாபிலோன் திடீரென்று விழுந்து நொறுங்கிற்று: அதற்காகப் புலம்பியழுங்கள்: அதன் காயத்துக்கு மருந்து கொண்டு வாருங்கள்: ஒருவேளை அது நலம் பெறலாம்! | எரே 51:41 எரே 50:2 ஏசா 21:9 ஏசா 47:9 வெளிப் 14:8 வெளிப் 18:2 வெளிப் 18:8 |
| 9 | நாங்கள் பாபிலோனைக் குணப்படுத்த முயன்றோம்: அதுவோ நலம் அடைவதாயில்லை! அதைக் கைவிட்டுவிடுங்கள்: நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த நாட்டுக்குப் போவோம்: பாபிலோனுக்குரிய தண்டனைத் தீர்ப்பு விண்ணுலகை எட்டியுள்ளது: அது வானத்தைச் சென்றடைந்துள்ளது. | எரே 8:20 எரே 46:16 எரே 46:21 எரே 50:16 ஏசா 13:14 ஏசா 47:15 மத் 25:10-13 |
| 10 | ஆண்டவர் நமக்கு நீதி வழங்கியுள்ளார்: வாருங்கள்! நம் கடவுளான ஆண்டவரின் செயலைச் சீயோனில் பறைசாற்றுவோம். | சங் 37:6 மீகா 7:9 மீகா 7:10 |
| 11 | அம்புகளைக் கூர்மையாக்குங்கள்: கேடயங்களைக் கையிலெடுங்கள்: ஆண்டவர் மேதிய அரசர்களைக் கிளர்ந்தெழச் செய்துள்ளார்: பாபிலோனை அழிப்பதே அவரது திட்டம்: இவ்வாறு தம் கோவிலை முன்னிட்டு ஆண்டவர் பழிவாங்குவார். | எரே 46:4 எரே 46:9 எரே 50:9 எரே 50:14 எரே 50:25 எரே 50:28 எரே 50:29 ஏசா 21:5 |
| 12 | பாபிலோன் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள்: காவலை வலுப்படுத்துங்கள்: இரவுக் காவலாளரை நிறுத்துங்கள்: கண்ணிகளைத் தயார் செய்யுங்கள்: பாபிலோனின் குடிகளுக்கு எதிராக ஆண்டவர் உரைத்திருந்ததைத் தமது திட்டப்படியே நிறைவேற்றுவார். | எரே 46:3-5 நீதி 21:30 ஏசா 8:9 ஏசா 8:10 ஏசா 13:2 யோவே 3:2 யோவே 3:9-14 நாகூ 2:1 நாகூ 3:14 நாகூ 3:15 |
| 13 | நீர்வளம் கொண்டனே! செல்வம் மிகுந்தவனே! உனக்கு முடிவு வந்துவிட்டது: உன் வாழ்நாளின் இழை துண்டிக்கப்பட்டுவிட்டது. | எரே 51:36 வெளிப் 17:1 வெளிப் 17:15 |
| 14 | வெட்டுக்கிளிகளைப் போன்று எண்ணற்ற மனிதரால் உன்னைத் திண்ணமாய் நிரப்புவேன்: அவர்கள் உனக்கு எதிராக வெற்றி முழக்கம் செய்வார்கள், என்று படைகளின் ஆண்டவர் தம்மேல் ஆணையிட்டுக் கூறியுள்ளார். | எரே 49:13 ஆமோ 6:8 எபிரெ 6:13 |
| 15 | அவரே தம் ஆற்றலால் மண்ணுலகைப் படைத்தார்: தம் ஞானத்தால் பூவுலகை நிலைநாட்டினார்: தம் கூர்மதியால் விண்ணுலகை விரித்தார். | எரே 10:12-16 எரே 32:17 ஆதி 1:1-6 சங் 107:25 சங் 146:5 சங் 146:6 சங் 148:1-5 ஏசா 40:26 அப் 14:15 அப் 17:24 ரோம 1:20 கொலோ 1:16 கொலோ 1:17 எபிரெ 1:2 எபிரெ 1:3 வெளிப் 4:11 |
| 16 | அவர் குரல் கொடுக்க, வானத்து நீர்த்திரள் முழக்கமிடுகின்றது: மண்ணுலகின் எல்லையினின்று முகில்கள் எழச் செய்கின்றார்: மழை பொழியுமாறு மின்னல் வெட்டச் செய்கிறார்: தம் கிடங்குகளினின்று காற்று வீசச்செய்கிறார். | எரே 10:12 எரே 10:13 யோபு 37:2-11 யோபு 40:9 சங் 18:13 சங் 29:3-10 சங் 46:6 சங் 68:33 சங் 104:7 எசே 10:5 |
| 17 | மனிதர் யாவரும் மூடர்கள், அறிவிலிகள்: கொல்லர் எல்லாரும் தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்: அவர்களின் வார்ப்புப் படிமங்கள் பொய்யானவை: அவற்றிற்கு உயிர் மூச்சே இல்லை. | எரே 10:14 சங் 14:2 சங் 53:1 சங் 53:2 சங் 92:5 சங் 92:6 சங் 115:5 சங் 115:8 சங் 135:18 ஏசா 44:18-20 ரோம 1:20-23 1கொரி 1:19-21 |
| 18 | அவை பயனற்றவை, ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்: தம் தண்டனையின் காலத்தில் அவை அழிந்துவிடும். | எரே 10:8 எரே 10:15 யோனா 2:8 அப் 14:15 |
| 19 | யாக்கோபின் பங்காய் இருப்பவரோ இவற்றைப் போன்றவர் அல்லர்: அவரே அனைத்தையும் உருவாக்கியவர்: தம் உரிமைச் சொத்தாகிய இனத்தை உருவாக்கியவரும் அவரே: படைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயராகும். | எரே 10:16 சங் 16:5 சங் 73:26 சங் 115:3 புலம் 3:24 |
| 20 | நீ என் சம்மட்டியும் படைக்கருவியும் ஆவாய்: நான் உன்னைக்கொண்டு மக்களினங்களை நொறுக்குவேன்: உன்னைக்கொண்டு அரசுகளை அழித்தொழிப்பேன். | எரே 50:23 ஏசா 10:5 ஏசா 10:15 ஏசா 13:5 ஏசா 14:5 ஏசா 14:6 ஏசா 37:26 ஏசா 41:15 ஏசா 41:16 மீகா 4:13 சகரி 9:13 சகரி 9:14 மத் 22:7 |
| 21 | உன்னைக்கொண்டு குதிரையையும் குதிரைவீரனையும் நொறுக்குவேன்: உன்னைக்கொண்டு தேரையும் தேரோட்டியையும் நொறுக்குவேன். | எரே 50:37 யாத் 15:1 யாத் 15:21 சங் 46:9 சங் 76:6 எசே 39:20 மீகா 5:10 நாகூ 2:13 ஆகா 2:22 சகரி 10:5 சகரி 12:4 வெளிப் 19:18 |
| 22 | உன்னைக்கொண்டு ஆணையும் பெண்ணையும் நொறுக்குவேன்: உன்னைக்கொண்டு முதியோனையும் சிறுவனையும் நொறுக்குவேன்: உன்னைக்கொண்டு இளைஞனையும் இளம்பெண்ணையும் நொறுக்குவேன்: | எரே 6:11 உபா 32:25 1சாமு 15:3 2நாளா 36:17 ஏசா 20:4 புலம் 2:11 எசே 9:6 |
| 23 | உன்னைக்கொண்டு ஆயனையும் அவனது மந்தையையும் நொறுக்குவேன்: உன்னைக்கொண்டு உழவனையும் அவன் காளைகளையும் நொறுக்குவேன்: உன்னைக்கொண்டு ஆளுநர்களையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன்: |
| 24 | பாபிலோனும் கல்தேயாவின் குடிகள் எல்லாரும் சீயோனில் செய்த தீச்செயல் அனைத்தின் பொருட்டு, உங்கள் கண்முன்னால் அவர்களைப் பழிவாங்குவேன், என்கிறார் ஆண்டவர். | எரே 51:11 எரே 51:35 எரே 51:49 எரே 50:15 எரே 50:17 எரே 50:18 எரே 50:28 எரே 50:29 எரே 50:33 எரே 50:34 சங் 137:8 சங் 137:9 ஏசா 47:6-9 ஏசா 51:22 ஏசா 51:23 ஏசா 61:2 ஏசா 63:1-4 ஏசா 66:6 1தெச 2:15 1தெச 2:16 வெளிப் 6:10 வெளிப் 18:20 வெளிப் 18:24 வெளிப் 19:2-4 |
| 25 | அழிவைக் கொணரும் மலையே, மண்ணுலகு முழுவதையும் அழிப்பவனே, நான் உனக்கு எதிராய் இருப்பேன், என்கிறார் ஆண்டவர். நான் உனக்கு எதிராய் என் கையை நீட்டுவேன்: உன்னைப் பாறை முகடுகளினின்று உருட்டிவிடுவேன்: உன்னை எரிந்துபோன மலை ஆக்குவேன். | எரே 50:31 |
| 26 | மூலைக்கல் என்றோ, அடிக்கல் என்றோ, உன்னிடமிருந்து கல் எடுக்கப்படாது: நீ என்றும் பாழடைந்தே கிடப்பாய், என்கிறார் ஆண்டவர். | எரே 51:37 எரே 51:43 எரே 50:12 எரே 50:13 ஏசா 13:19-22 ஏசா 14:23 |
| 27 | மண்ணுலகின்மேல் கொடி ஏற்றுங்கள்: மக்களினங்கள் நடுவில் எக்காளம் ஊதுங்கள்: அதனை எதிர்த்துப் போரிட மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்: அதனை எதிர்க்குமாறு அரராத்து, மின்னி, அஸ்கனாசு ஆகிய அரசுகளுக்கு அழைப்பு விடுங்கள்: அதற்கு எதிராய்த் தானைத் தலைவனை ஏற்படுத்துங்கள். வெட்டுக்கிளிக் கூட்டம்போல் குதிரைகளைக் கொணருங்கள். | எரே 51:12 எரே 6:1 எரே 50:2 எரே 50:41 ஏசா 13:2-5 ஏசா 18:3 ஆமோ 3:6 சகரி 14:2 |
| 28 | அதனை எதிர்த்துப் போரிட மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்: மேதிய மன்னர்கள், ஆளுநர்கள், அதிகாரிகளையும் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட எல்லா நாடுகளையும் கூப்பிடுங்கள். | எரே 51:11 எரே 25:25 ஆதி 10:2 1நாளா 1:5 |
| 29 | மண்ணுலகு நடுநடுங்கி, வேதனையால் பதைபதைக்கிறது: பாபிலோன் நாட்டை மக்கள் குடியிருப்பில்லாத பாழ்நிலம் ஆக்கும் பொருட்டு அதற்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டங்கள் நிலைக்கும். | எரே 8:16 எரே 10:10 எரே 50:36 எரே 50:43 ஏசா 13:13 ஏசா 13:14 ஏசா 14:16 யோவே 2:10 ஆமோ 8:8 |
| 30 | பாபிலோனின் படைவீரர்கள் போரிடுவதைக் கைவிட்டார்கள்: அவர்கள் தங்கள் கோட்டைகளுக்குள்ளேயே தங்கியிருக்கிறார்கள்: அவர்களின் வலிமை குன்றிப்போயிற்று. அவர்கள் பேடிகளாய் மாறிவிட்டார்கள். அதன் உறைவிடங்கள் எரிந்துபோயின: அதன் தாழ்ப்பாள்கள் உடைந்து போயின. | எரே 51:32 எரே 51:57 எரே 48:41 எரே 50:36 எரே 50:37 சங் 76:5 ஏசா 13:7 ஏசா 13:8 ஏசா 19:16 நாகூ 3:13 வெளிப் 18:10 |
| 31 | ஓர் அஞ்சற்காரன் அடுத்த அஞ்சற்காரனைச் சந்திக்க ஓடுகின்றான்: ஒரு தூதன் அடுத்த தூதனைச் சந்திக்க ஓடுகின்றான்: “நகர் எல்லாப் பக்கங்களிலும் கைப்பற்றப்பட்டது: | எரே 4:20 எரே 50:24 1சாமு 4:12-18 2சாமு 18:19-31 2நாளா 30:6 எஸ்தர் 3:13-15 எஸ்தர் 8:10 எஸ்தர் 8:14 யோபு 9:25 |
| 32 | கடவுத் துறைகள் பிடிப்பட்டன: கோட்டை, கொத்தளங்கள் தீக்கிரையாயின: படைவீரர்கள் பீதியடைந்துள்ளனர்”, எனப் பாபிலோனிய மன்னனிடம் அறிவிக்க அவர்கள் ஓடுகிறார்கள். | எரே 50:38 ஏசா 44:27 |
| 33 | இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: புணையடிக்கும் காலக் களத்துக்கு மகள் பாபிலோன் ஒப்பாவாள்: இன்றும் சிறிது காலத்தில் அதன் அறுவடைக் காலம் வரும். | ஏசா 21:10 ஏசா 41:15 ஏசா 41:16 ஆமோ 1:3 மீகா 4:13 ஆபகூ 3:12 |
| 34 | பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் என்னை விழுங்கிவிட்டான்: அவன் என்னைக் கசக்கிப் பிழிந்து விட்டான்: வெறுமையான பாத்திரம்போல் என்னை ஆக்கிவிட்டான்: அரக்கன் போன்று என்னை விழுங்கிவிட்டான்: என் அருஞ்சுவை உணவுகளால் தன் வயிற்றை நிரப்பிக்கொண்டான். என்னைக் கொப்பளித்துத் துப்பிவிட்டான். | எரே 51:49 எரே 39:1-8 எரே 50:7 எரே 50:17 புலம் 1:1 புலம் 1:14 புலம் 1:15 |
| 35 | “எனக்கும் என் உறவினர்க்கும் இழைக்கப்பட்ட கொடுமை பாபிலோன் மேல் வரட்டும்” என்று சீயோன் குடிகள் கூறட்டும்: “என் இரத்தப் பழி கல்தேயக் குடிகள்மீது வந்துவிழட்டும்,” என்று எருசலேம் சொல்லட்டும். | எரே 50:29 நியா 9:20 நியா 9:24 நியா 9:56 நியா 9:57 சங் 9:12 சங் 12:5 சங் 137:8 சங் 137:9 ஏசா 26:20 ஏசா 26:21 சகரி 1:15 மத் 7:2 யாக் 2:13 வெளிப் 6:10 வெளிப் 16:6 வெளிப் 18:6 வெளிப் 18:20 |
| 36 | எனவே ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே உனக்காக வழக்காடுவேன்: உன் பொருட்டுப் பழிவாங்குவேன்: அதன் கடல் வற்றிப் போகச் செய்வேன்: அதன் நீரூற்றுகள் காய்ந்துபோகச் செய்வேன். | எரே 50:33 எரே 50:34 சங் 140:12 நீதி 22:23 நீதி 23:11 ஏசா 43:14 ஏசா 47:6-9 ஏசா 49:25 ஏசா 49:26 மீகா 7:8-10 ஆபகூ 2:8-17 |
| 37 | பாபிலோன் பாழ்மேடு ஆகும்: குள்ளநரிகளின் உறைவிடமாக மாறும். அது குடியிருப்பாரற்றுப் பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும் உள்ளாகும். | எரே 51:25 எரே 51:26 எரே 51:29 எரே 25:9 எரே 25:12 எரே 25:18 எரே 50:12 எரே 50:13 எரே 50:23-26 எரே 50:38-40 ஏசா 13:19-22 ஏசா 14:23 ஏசா 34:8-17 வெளிப் 18:2 வெளிப் 18:21-23 |
| 38 | அவர்கள் சிங்கங்களைப்போல் சேர்ந்து கர்ச்சிப்பார்கள்: சிங்கக் குட்டிகளைப்போல் சீறுவார்கள். | எரே 2:15 யோபு 4:10 யோபு 4:11 சங் 34:10 சங் 58:6 ஏசா 35:9 நாகூ 2:11-13 சகரி 11:3 |
| 39 | அவர்கள் கொதித்தெழுந்தபொழுது நான் அவர்களுக்கு விருந்து அளிப்பேன்: அவர்கள் மயங்கி மகிழுமாறு போதையுறும்வரை குடிக்கச் செய்வேன்: அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்: துயில் எழவே மாட்டார்கள், என்கிறார் ஆண்டவர். | எரே 25:27 ஏசா 21:4 ஏசா 21:5 ஏசா 22:12-14 தானி 5:1-4 தானி 5:30-4 நாகூ 1:10 நாகூ 3:11 |
| 40 | செம்மறிக்குட்டிகள், ஆட்டுக்கிடாய்கள், வெள்ளாட்டுக் கிடாய்களைப் போன்று, நான் அவர்களைக் கொலைக் களத்திற்குக் கொண்டுபோவேன். | எரே 50:27 சங் 37:20 சங் 44:22 ஏசா 34:6 எசே 39:18 |
| 41 | சேசாக்கு இப்படிப் பிடிபட்டுப் போயிற்றே! மண்ணுலகு முழுவதன் சிறப்பிடம் இப்படிக் கைப்பற்றப் பட்டுவிட்டதே! மக்களினங்கள் நடுவே பாபிலோன் பாழடைந்துபோனது எவ்வாறு? | எரே 25:26 தானி 5:1-3 |
| 42 | கடலானது பாபிலோன்மீது கொந்தளித்து வந்துள்ளது: ஆர்ப்பரிக்கும் அலைகளால் அது மூடப்பட்டுவிட்டது. | சங் 18:4 சங் 18:16 சங் 42:7 சங் 65:7 சங் 93:3 ஏசா 8:7 ஏசா 8:8 எசே 27:26-34 தானி 9:26 லூக் 21:25 வெளிப் 17:15 வெளிப் 17:16 |
| 43 | அதன் நகர்கள் பாழடைந்துவிட்டன: அது வறண்ட பாலைநிலமாய் மாறிவிட்டது: அந்நாட்டில் குடியிருப்போர் யாரும் இல்லை: எவரும் அதனைக் கடந்து செல்லமாட்டார். | எரே 51:29 எரே 51:37 எரே 50:39 எரே 50:40 |
| 44 | நான் பாபிலோனில் பேலைத் தண்டிப்பேன்: அது விழுங்கினதை அதன் வாயினின்று கக்கச்செய்வேன்: மக்களினங்கள் இனி ஒருபோதும் அங்குக் செல்லமாட்டா: பாபிலோன் மதிலும் தரைமட்டமாக்கப்படும். | எரே 51:18 எரே 51:47 எரே 50:2 ஏசா 46:1 ஏசா 46:2 |
| 45 | என் மக்களே, அதனின்று வெளியேறுங்கள்: ஆண்டவரின் வெஞ்சினத்தினின்று ஒவ்வொருவனும் தன் உயிரைக் காத்துக்கொள்ளட்டும். | எரே 51:6 எரே 51:9 எரே 51:50 எரே 50:8 ஏசா 48:20 சகரி 2:7 வெளிப் 14:8-11 வெளிப் 18:4 |
| 46 | உங்கள் உள்ளம் தளாரதிருக்கட்டும்: நாட்டில் உலவும் வதந்திகளைத் கேட்டுக் கலங்காதீர்கள்: ஓராண்டில் ஒரு வதந்தி உலவும்: மறு ஆண்டில் மற்றொரு வதந்தி உருவெடுக்கும்: நாட்டில் வன்முறை மலியும்: ஆளுநன் ஆளுநனுக்கு எதிராய் எழுவான். | 2இரா 19:7 மத் 24:6-8 மாற் 13:7 மாற் 13:8 லூக் 21:9-19 லூக் 21:28-19 |
| 47 | எனவே நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் பாபிலோன் சிலைகளைத் தண்டிப்பேன். அந்த நாடு முழுவதும் சிறுமையுறும்: கொலையுண்டோர் அனைவரும் அதன் நடுவே வீழ்ந்துகிடப்பர். | எரே 51:52 எரே 50:2 ஏசா 21:9 ஏசா 46:1 ஏசா 46:2 |
| 48 | விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அனைத்தும் பாபிலோனைக் குறித்து மகிழ்ச்சிக் குரல் எழுப்பும்: வடக்கினின்று “அழிப்போர்” அதை எதிர்த்து வருவர், என்கிறார் ஆண்டவர். | எரே 51:10 சங் 58:10 சங் 58:11 நீதி 11:10 ஏசா 44:23 ஏசா 48:20 ஏசா 49:13 வெளிப் 15:1-4 வெளிப் 16:4-7 வெளிப் 18:20 வெளிப் 19:1-7 |
| 49 | பாபிலோனை முன்னிட்டு மண்ணுலகு எங்கும் மக்கள் கொலையுண்டு வீழ்ந்தனர்: இஸ்ரயேலில் கொலையுண்டோரை முன்னிட்டு இப்போது பாபிலோன் வீழ்ச்சியுற வேண்டும். | எரே 51:10 எரே 51:11 எரே 51:24 எரே 51:35 எரே 50:11 எரே 50:17 எரே 50:18 எரே 50:29 எரே 50:33 எரே 50:34 நியா 1:7 சங் 137:8 சங் 137:9 மத் 7:2 யாக் 2:13 வெளிப் 18:5 வெளிப் 18:6 |
| 50 | வாளுக்குத் தப்பியவர்களே, போய்விடுங்கள், நிற்காதீர்கள்: தொலையிலிருந்து ஆண்டவரை நினைவுகூருங்கள்: உங்கள் இதயத்தில் எருசலேம் இடம்பெறட்டும். | எரே 51:6 எரே 51:45 எரே 31:21 எரே 44:28 எரே 50:8 ஏசா 48:20 ஏசா 51:11 ஏசா 52:2 ஏசா 52:11 ஏசா 52:12 சகரி 2:7-9 வெளிப் 18:4 |
| 51 | பழிமொழி கேட்டதால் நாங்கள் வெட்கத்துக்கு உள்ளானோம்: ஆண்டவரது இல்லத்தின் திருஇடங்களுக்குள் அன்னியர் நுழைந்துவிட்டதால், மானக்கேடு எங்கள் முகங்களை மூடிக்கொண்டது. | எரே 3:22-25 எரே 31:19 சங் 74:18-21 சங் 79:4 சங் 79:12 சங் 123:3 சங் 123:4 சங் 137:1-3 புலம் 2:15-17 புலம் 5:1 எசே 36:30 |
| 52 | ஆகவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். நான் அதன் சிலைகளைத் தண்டிப்பேன்: அந்நாடு எங்கணும் காயம்பட்டோர் குமுறியழுவர். | எரே 51:47 எரே 50:38 |
| 53 | பாபிலோன் வானம்வரை தன்னை உயர்த்திக் கொண்டாலும், தன் உயர்ந்த கோட்டை கொத்தளங்களை வலுப்படுத்திக் கொண்டாலும், அழிப்போரை நான் அதன் மீது அனுப்புவேன், என்கிறார் ஆண்டவர். | எரே 51:25 எரே 51:58 எரே 49:16 ஆதி 11:4 சங் 139:8-10 ஏசா 14:12-15 ஏசா 47:5 ஏசா 47:7 எசே 31:9-11 தானி 4:30 ஆமோ 9:4 ஒபதி 1:3 ஒபதி 1:4 |
| 54 | பாபிலோனிலிருந்து கூக்குரல் கேட்கிறது: கல்தேயரின் நாட்டிலிருந்து பேரழிவின் இரைச்சல் கேட்கிறது. | எரே 48:3-5 எரே 50:22 எரே 50:27 எரே 50:43 எரே 50:46 ஏசா 13:6-9 ஏசா 15:5 செப் 1:10 வெளிப் 18:17-19 |
| 55 | ஆண்டவர் பாபிலோனை அழிக்கிறார்: அதன் பெரும் ஆரவாரத்தை அடக்குகிறார்: அவர்களின் அலைகள் பெரும் வெள்ளம்போல் முழங்கும். அவர்கள் உரத்த குரலில் ஆரவாரம் செய்வர். | எரே 51:38 எரே 51:39 எரே 25:10 எரே 50:10-15 ஏசா 15:1 ஏசா 24:8-11 ஏசா 47:5 வெளிப் 18:22 வெளிப் 18:23 |
| 56 | “அழிப்போன்” பாபிலோன் மீதே வந்துவிட்டான். அதன் படைவீரர்கள் பிடிபட்டார்கள். அவர்கள் அம்புகள் முறித்தெறியப்பட்டன. ஆண்டவர் பழிவாங்கும் கடவுள்: அவர் திண்ணமாய்ப் பதிலடி கொடுப்பார். | எரே 51:48 எரே 50:10 ஏசா 21:2 ஆபகூ 2:8 வெளிப் 17:16 |
| 57 | அதன் தலைவர்கள், ஞானிகள், ஆளுநர்கள், படைத்தலைவர்கள், படைவீரர்கள் ஆகிய எல்லாரையும் நான் குடிவெறி கொள்ளச்செய்வேன். அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்: துயில் எழவே மாட்டார்கள், என்கிறார் “படைகளின் ஆண்டவர்” என்னும் பெயர் கொண்ட மன்னர். | எரே 51:39 எரே 25:27 ஏசா 21:4 ஏசா 21:5 தானி 5:1-4 தானி 5:30-4 தானி 5:31-4 நாகூ 1:10 ஆபகூ 2:15-17 வெளிப் 18:6 வெளிப் 18:7 வெளிப் 18:9 |
| 58 | படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனின் அகன்ற மதில்கள் முற்றிலும் தரைமட்டமாக்கப்படும்: அதன் உயர்ந்த வாயில்கள் தீக்கிரையாகும்: மக்களின் உழைப்பு வீணாகும்: மக்களினங்களின் முயற்சிகள் தீயோடு தீயாகும். | எரே 51:44 எரே 50:15 |
| 59 | யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனும் அரசப் பயணவிடுதிப் பொறுப்பாளருமான செராயா செதேக்கியாவோடு பாபிலோனுக்குச் சென்றபொழுது, இறைவாக்கினர் எரேமியா அவருக்குக் கொடுத்த கட்டளை: | எரே 32:12 எரே 36:4 எரே 45:1 |
| 60 | பாபிலோன் மேல் வரவிருந்த தண்டனைகள் அனைத்தையும், அதாவது பாபிலோன் மேல் குறித்து மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் எரேமியா ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைத்தார். | எரே 30:2 எரே 30:3 எரே 36:2-4 எரே 36:32-4 ஏசா 8:1-4 ஏசா 30:8 தானி 12:4 ஆபகூ 2:2 ஆபகூ 2:3 வெளிப் 1:11 வெளிப் 1:19 |
| 61 | எரேமியா செராயாவிடம் கூறியது: நீ பாபிலோனை அடைந்தபின், இச்சொற்களை எல்லாம் கண்டிப்பாக வாசி. | மத் 24:1 மாற் 13:1 |
| 62 | 'ஆண்டவரே, மனிதரோ விலங்கோ எதுவும் வாழாதபடி என்றும் பாழடைந்து கிடக்கும் அளவுக்கு நீர் அந்த இடத்தை அழிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறீர்' எனச் சொல். | எரே 51:25 எரே 51:26 எரே 51:29 எரே 51:37 எரே 50:3 எரே 50:13 எரே 50:39 எரே 50:40 ஏசா 13:19-22 ஏசா 14:22 ஏசா 14:23 வெளிப் 18:20-23 |
| 63 | இச்சுருளை வாசித்து முடித்த பின்னர், அதை ஒரு கல்லில் கட்டி, யூப்பிரத்தீசு நடுவே எறிந்துவிடு. | எரே 19:10 எரே 19:11 வெளிப் 18:21 |
| 64 | “நான் பாபிலோனுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைக்குப் பின்னர், அது மீண்டும் தலைதூக்க முடியாமல், இவ்வாறே மூழ்கிப்போகும்” என்று சொல். எரேமியாவின் சொற்கள் இத்துடன் முற்றும். | எரே 51:42 எரே 25:27 நாகூ 1:8 நாகூ 1:9 வெளிப் 14:8 வெளிப் 18:2 வெளிப் 18:21 |