10
அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.
11
பிறகு மற்றத் தோழிகளும் வந்து, “ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும் “ என்றார்கள்.
12
“அவர் மறுமொழியாக, “உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: எனக்கு உங்களைத் தெரியாது “என்றார்.
13
எனவே விழிப்பாயிருங்கள்: ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.