3
ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது: மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றார்: ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார்.
4
ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது: ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது.
5
ஆண்டவரின்குரல் கேதுருமரங்களை முறிக்கின்றது: ஆண்டவர் லெபனோன் கேதுரு மரங்களை முறித்துவிடுகின்றார்.
6
லெபனோனின் மலையைக் கன்றுக் குட்டியெனத் துள்ளச் செய்கின்றார்: சிரியோன் மலையைக் காட்டெருமைக் கன்றெனக் குதிக்கச் செய்கின்றார்.
7
ஆண்டவரின் குரல் மின்னலைத் தெறிக்கச் செய்கின்றது:
8
ஆண்டவரின் குரல் பாலைவனத்தை அதிரச் செய்கின்றது: ஆண்டவர் காதேசு பாலைவனத்தை நடுங்கச் செய்கின்றார்.
9
ஆண்டவரின் குரல் கருவாலி மரங்களை முறித்து விடுகின்றது: காடுகளை வெறுமை ஆக்குகின்றது: அவரது கோவிலில் உள்ளஅனைவரும்”இறைவனுக்கு மாட்சி” என்று ஆர்ப்பரிக்கின்றனர்.
10
ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்: ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார்.