12
அந்நாளில் புலம்பவும், ஓலமிட்டுக் கதறி அழவும் தலையை மொட்டை அடித்துக்கொள்ளவும் சாக்கு உடை உடுத்தவும் படைகளின் ஆண்டவரான எம் தலைவர் ஆணையிட்டார்.
13
நீங்களோ, மகிழ்ந்து களிப்படைகின்றீர்கள்: எருதுகளை அடித்து, ஆடுகளை வெட்டி, இறைச்சியை உண்டு, திராட்சை இரசத்தைக் குடிக்கின்றீர்கள். “உண்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்கின்றீர்கள்.
14
படைகளின் ஆண்டவர் நான் என் காதால் கேட்குமாறு வெளிப்படுத்தியது: “நீங்கள் சாகும்வரை இத் தீச்செயலின் கறை கழுவப்படவேமாட்டாது,” என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.