2
அவரது குரலின் இடியோசையையும் அவர் வாயினின்று வரும் முழக்கத்தையும் கவனமுடன் கேளுங்கள்.
3
விசும்பின்கீழ் மின்னலை மிளிரச் செய்கின்றார்: மண்ணகத்தின் எல்லைவரை செல்ல வைக்கின்றார்.
4
அதனை அடுத்து அதிரும் அவர் குரல்: பேரொலியில் அவர் முழங்கிடுவாரே: மின்னலை நிறுத்தார் அவர்தம் குரல் ஒலிக்கையிலே.
5
கடவுள் வியத்தகு முறையில் தம் குரலால் முழங்குகின்றார்: நம் அறிவுக்கு எட்டாத பெரியனவற்றைச் செய்கின்றார்.
6
ஏனெனில், உறைபனியை 'மண்மிசை விழு" என்பார்: மாரியையும் பெருமழையையும் 'உரத்துப் பெய்க" என்பார்.
7
எல்லா மனிதரும் அவரது கைத்திறனை அறிய, எல்லா மாந்தரின் கையையும் கட்டிப்போடுவார்.
8
பின்னர் விலங்கு தன் பொந்தினுள் நுழையும்: தம் குகைக்குள் அது தங்கும்.
9
அவர்தம் கிடங்கிலிருந்து சுழற்காற்றும் வாடைக்காற்றிலிருந்து குளிரும் கிளம்பும்.
10
கடவுளின் மூச்சால் பனிக்கட்டி உறையும்: பரந்த நீர்நிலை உறைந்து போகும்.
11
அவர் முகிலில் நீர்த்துளிகளைத் திணிப்பார்: கொண்டல் அவர் ஒளியைத் தெறிக்கும்.