19
சாதோக்கின் மகனாகிய அகிமாசு,”நான் ஓடி அரசரிடம் சென்று ஆண்டவர் தன் எதிரிகளிடமிருந்து விடுவித்துள்ளார் என்ற செய்தியை அறிவிக்க அனுமதி தாரும்” என்று சொன்னான்.
20
அதற்கு யோவாபு,”இன்று நீ செய்தியை எடுத்துச் செல்ல வேண்டாம்: இளவரசர் இறந்து விட்டதால் இன்று வேண்டாம்: வேறொரு நாள் செய்தியை எடுத்துச் செல்லலாம்”என்று சொன்னார்.
21
ஆனால், யோவாபு ஒரு கூசியனிடம் நீ சென்று கண்டவை அனைத்தையும் அரசரிடம் சொல், என்று சொல்ல, அவனும் யோவாபை வணங்கிட்டு ஓடிச் சென்றான்.
22
சாதோக்கின் மகன் அகிமாசு மீண்டும் யோவாபிடம், என்ன நேரிடினும் நானும் கூசியனின் பின் ஓட எனக்கு அனுமதி தாரும். என்று கேட்டான்.”மகனே! இச்செய்தியை சொல்வதனால், உனக்கு எப்பரிசும் கிடைக்கப்போவதில்லை. பின் ஏன் நீ ஓட வேண்டும்? என்று யோவாபு பதில் கூறினார்.
23
”நடப்பது நடக்கட்டும். நான் ஓட விரும்புகிறேன்”என்று அவன் மீண்டும் சொல்ல,”சரி ஓடு” என்று யோவாபு மறுமொழி கூறினார். அகிமாசு குறுக்குப்பாதையில் ஓடி கூசியனை முந்திச் சென்றான்.
24
அப்போது தாவீது இரு வாயில்களுக்குமிடையே அமர்ந்துக்கொண்டிருந்தார். காவலன் மதிலின் வாயிலுக்கு மேல் ஏறிச் சென்று கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். ஓர் ஆள் தனியாக ஓடி வருவதைக் கண்டான்.
25
காவலன் குரலெழுப்பி அரசரிடம் கூற, அரசர்,”தனியாக வந்தால் அவனிடம் நற்செய்தியுள்ளது”என்றார். அந்த ஆள் இன்னும் அருகில் வந்துக்கொண்டிருந்தான்.
26
காவலன் இன்னொரு ஆளும் ஓடிவருவதைக் கண்டான். கண்டு அவன் குரலெழுப்பி வாயில் காப்பானிடம்.”இதோ, இன்னொருவன் தனியாக ஓடிவருகிறான்”என்று கூற அரசர்,”இவனும் நற்செய்தி கொண்டு வருகிறான்”என்றார்.
27
”முதலில் வருகிறவனின் ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசின் ஓட்டத்தைப்போல் உள்ளது” என்று காவலன் உரைக்க, அதற்கு அரசர்,”இவன் நல்லவன், இவன் நற்செய்தியோடு வருகிறான்”என்றான்.
28
அப்போது அகிமாசு குரலெழுப்பி,”நலம் உண்டாகுக! என்று அரசரிடம் சொன்னான். அவன் முகம் குப்புற தரையில் வீழ்ந்து அரசரை வணங்கி,”என் தலைவராம் அரசருக்கு எதிராகக் கையோங்கியவர்களை ஒப்படைத்த உம் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! என்றான்.
29
”இளைஞன் அப்சலோம் நலமா? என்று அரசர் வினவ, அகிமாசு,”அரச பணியாளனும் உம் அடியானுமாகிய என்னை யோவாபு அனுப்பும் போது அங்கு பெரும் குழப்பமாக இருந்தது. ஆனால் அது என்ன வென்று எனக்கு தெரியாது”என்றான்.
30
அரசர் அவனை நோக்கி,”விலகி, அங்கே நில்” என்று கூற அவனும் விலகி நின்றான்.
31
அப்போது கூசியனும் வந்து,”என் தலைவராம் அரசே! நற்செய்தி! இன்று ஆண்டவர் உமக்கு எதிராக எழுபவர்களின் காத்தினின்று உம்மை விடுவித்துள்ளார்” என்று கூறினான்.