பாவச் சேற்றில் வீழ்ந்த என்னை, பாசத்தோடு தூக்கும் தேவா! கறைபடிந்த என் நெஞ்சத்தை, கல்வாரி இரத்தத்தால் கழுவுமையா!
உடைந்த உள்ளம் உமக்கு பிரியம், உருகும் கண்ணீர் உமக்குப் பலி; என்னை விட்டு விலகாதிரும், உம் தூய ஆவியை என்னில் தாரும்!
தேவ கோபம் தணிக்கும் கிருபை, தேடி வந்தேன் இயேசு நாதா! பழைய வாழ்வை வெறுக்கின்றேன், பரிசுத்தத்தை நாடுகின்றேன்.
உலக இன்பம் தேடி ஓடி, உம்மை மறந்தேன் என் இயேசுவே! சிலுவை அன்பை உணர்ந்த பின்னே, சிதைந்து நின்றேன் என் ராஜானே!
நீதிமானாய் என்னை மாற்ற, நிந்தனைகள் நீரே ஏற்றீர்; என் பாவத்தின் பாரம் தீர்க்க, உம் ஜீவனைச் சிலுவையில் ஈந்தீர்!
மனந்திரும்பி வருகின்றேன், மன்னிப்பினை வேண்டுகின்றேன்; இனி என் வாழ்வு எனக்கல்ல, எனக்காக மரித்த உமக்கே சொந்தம்!
தூர தேசம் சென்ற பிள்ளை, துன்பம் கண்டு திரும்பினாற்போல்; தந்தையே உம் பாதம் தேடி, தயங்கி நின்றேன் பாவியாக!
தகுதியற்ற என்னை நோக்கி, ஓடி வந்தீர் அன்பினாலே; முத்தமிட்டு அணைத்துக் கொண்டீர், முழுமையாய் என்னை மாற்றிவிட்டீர்!
பாவம் செய்தேன் உமக்கு விரோதமாய், பரலோகத்துக்கு முன்பாக; இனி உம் சித்தம் மட்டுமே, என் வாழ்வின் ஒரே நோக்கமே!
காணாமல் போன மேய்ப்பன்....
ஆசிரியர்: டேவிட் தன்ராஜ்
கர்த்தர் தந்த கருவிகளை...
ஆசிரியர்: டேவிட் தன்ராஜ்
"நாடார் என்றும் இல்லை, பிராமணர் என்றுமில்லை,
பள்ளர் என்றுமில்லை, பறையர் என்றுமில்லை,
தேவர் என்றுமில்லை, கௌண்டர் என்றுமில்லை,
உடையார் என்றுமில்லை, செட்டியார் என்றுமில்லை,
பணக்காரன் என்றுமில்லை, ஏழை என்றுமில்லை,
பிரபலாமானவன் என்றுமில்லை, அறியப்படாதவன் என்றுமில்லை!"
தகுதியற்ற என்னைத் தேடிவந்த கிருபை, கல்வாரி சிலுவையில் வெளிப்பட்ட அன்பை! என் சுய கிரியையால் அல்ல, ஈவாக வந்த ரட்சிப்பு, இயேசுவின் இரத்தமே என் ஆத்துமாவின் மீட்பு. பாவத்தின் பிடியிலிருந்து விடுவித்த தேவன், பரலோக வாழ்வை எனக்களித்த ராஜன்!
வேதமே என் வாழ்வின் வெளிச்சம், காரிருள் நீக்கும் திவ்விய தீபம்! காலங்கள் மாறினும் மாறாத சத்தியம், கர்த்தரின் வாயின் நித்திய ஜீவன். புயலடித்தாலும் அசையாத கன்மலை, என் பாதைகளுக்கு இதுவே செம்மையான பாதை!
உடைந்த உள்ளத்தோடு வருகிறேன் தேவா, உம் பாதம் தஞ்சம் என்றே விழுகிறேன் நாதா! உலகத்தின் மேன்மைகள் வெறுமையாய் போனது, உம் தூய ஆவியே என் துணையாய் நின்றது. கண்ணீரைத் துடைத்து காயங்கள் ஆற்றுவீர், கல்நெஞ்சை மாற்றி உம் சாயலைத் தருவீர்!
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.