6
நான் என் மக்கள் மீது சினமுற்றிருந்தேன்: என் உரிமைச் சொத்தைக் களங்கப்படுத்தினேன்: அவர்களை உன் கையில் ஒப்படைத்தேன்: நீயோ அவர்களுக்குக் கருணை காட்டவில்லை: முதியோராய் இருந்தோர் மீதும் மிகப் பளுவான நுகத்தைப் பூட்டினாய்.
7
“என்றும் தலைவி நானே, என்றாய் நீ: இவற்றை நீ உன் சிந்தையில் கொள்ளவில்லை: பின் விளைவுபற்றி எண்ணிப் பார்க்கவுமில்லை.
8
இன்ப நாட்டம் கொண்டவளே, போலிப் பாதுகாப்புடன் வாழ்பவளே, “எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை: நான் கைம்பெண் ஆகமாட்டேன்: பிள்ளை இழந்து தவிக்கமாட்டேன்” என்று தனக்குள் சொல்லிக் கொள்பவளே, இப்பொழுது இதைக் கேள்:
9
இவை இரண்டும் திடீரென ஒரே நாளில் உனக்கு நேரிடும்: பில்லி சூனியங்கள் பலவற்றை நீ கையாண்டாலும், ஆற்றல்மிகு மந்திரங்களை உச்சரித்தாலும், பிள்ளை இழப்பும் கைம்மையும் முழுவடிவில் உன் மேல் வந்தே தீரும்.