19
அரசுகளில் சிறப்புமிகு கல்தேயரின் மேன்மையும் பெருமையுமான பாபிலோன் கடவுள் அழித்த சோதோம் கொமோராவைப்போல ஆகிவிடும்.
20
இனி எவரும் அதில் ஒருபோதும் குடியிருக்க மாட்டார்: அதுவும் தலைமுறை தலைமுறையாகக் குடியற்று இருக்கும்: அரேபியர் அங்கே கூடாரம் அமைக்கமாட்டார்: ஆயர்கள் தம் மந்தையை அங்கே இளைப்பாற விடுவதில்லை.
21
ஆனால், காட்டு விலங்குகள் அங்கே படுத்துக் கிடக்கும்: ஊளையிடும் குள்ளநரிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும்: தீக்கோழிகள் அங்கே தங்கியிருக்கும்: வெள்ளாட்டுக் கிடாய்கள் அங்கே துள்ளித் திரியும்.
22
அவர்கள் கோட்டைகளில் ஓநாய்கள் அலறும்: அரண்மனைகளில் குள்ளநரிகள் ஊளையிடும்: அதற்குரிய நேரம் நெருங்கிவிட்டது: அதற்குரிய நாள்கள் அண்மையில் உள்ளன.