| 1 | செதேக்கியா அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். லிப்னாவைச் சார்ந்த எரேமியாவின் மகள் அமுற்றாள் என்பவோ அவன் தாய். | 2இரா 24:18 2நாளா 36:11 |
| 2 | யோயாக்கிம் செய்தது போல, செதேக்கியாவும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்ட அனைத்தையும் செய்தான். | 1இரா 14:22 2இரா 24:19 2இரா 24:20 2நாளா 36:12 2நாளா 36:13 எசே 17:16-20 எசே 21:25 |
| 3 | ஆண்டவர் எருசலேமையும் யூதாவையும் தம் முன்னிலையினின்று தள்ளிவிடும் அளவுக்கு அவற்றின்மீது சினம் கொண்டார்: செதேக்கியா பாபிலோனிய மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான். | 2சாமு 24:1 1இரா 10:9 நீதி 28:2 பிரச 10:16 ஏசா 3:4 ஏசா 3:5 ஏசா 19:4 |
| 4 | அவனது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு, பத்தாம் மாதம், பத்தாம் நாளில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தன் எல்லாப் படைகளோடும் எருசலேமுக்கு எதிராக வந்து, பாளையம் இறங்கி, அதைச் சுற்றிலும் முற்றுகைத் தளம் எழுப்பினான். | எரே 39:1 2இரா 25:1-27 எசே 24:1 எசே 24:2 |
| 5 | இவ்வாறு, அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற பதினொன்றாம் ஆண்டு வரை, நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது. |
| 6 | நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை. | எரே 39:2 2இரா 25:3 சகரி 8:19 |
| 7 | அப்பொழுது நகர மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது. போர்வீரர் அனைவரும் அரசப் பூங்காவின் இரு மதில்களுக்கிடையே அமைந்த வாயில் வழியாக இரவோடு இரவாய் நகரைவிட்டு வெளியேறி, அராபாவை நோக்கித் தப்பியோடினர். கல்தேயரோ நகரைச் சுற்றி முற்றுகையிட்டவண்ணம் இருந்தனர். | எரே 34:2 எரே 34:3 2இரா 25:4 |
| 8 | கல்தேயப்படையினர் அரசன் செதேக்கியாவைப் பின்தொடர்ந்து, எரிகோ சமவெளியில் அவனைப் பிடித்தனர்: அவனது படை முழுவதும் அவனை விட்டுச் சிதறி ஓடிற்று. | எரே 21:7 எரே 32:4 எரே 34:21 எரே 37:18 எரே 38:23 எரே 39:5 ஏசா 30:16 ஏசா 30:17 புலம் 4:19 புலம் 4:20 எசே 12:12-14 எசே 17:20 எசே 17:21 ஆமோ 2:14 ஆமோ 2:15 ஆமோ 9:1-4 |
| 9 | அவர்கள் அரசனைப் பிடித்து, ஆமாத்து நாட்டின் இரிப்பலாவில் இருந்த பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் கொண்டு சென்றார்கள். | எரே 32:4 எரே 32:5 2நாளா 33:11 எசே 21:25-27 |
| 10 | பாபிலோனிய மன்னன் இரிப்லாவில் செதேக்கியாவின் புதல்வர்களை அவன் கண் முன்னே கொன்றான்: மேலும், யூதாவின் தலைவர்கள் அனைவரையும் கொன்றான். | எரே 22:30 எரே 39:6 எரே 39:7 ஆதி 21:16 ஆதி 44:34 உபா 28:34 2இரா 25:7 |
| 11 | பாபிலோனிய மன்னன் செதேக்கியாவின் கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச் சென்றான்: அவன் சாகும்வரை அவனைச் சிறையில் அடைத்தான். | எரே 34:3-5 எசே 12:13 |
| 12 | பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற பத்தொன்பதாம் ஆண்டு, ஐந்தாம் மாதம், பத்தாம் நாளன்று, அவனுக்குப் பணிசெய்து வந்த மெயக்காப்பாளர் தலைவன் நெபுசரதான் எருசலேமுக்குள் நுழைந்தான். | 2இரா 25:8 சகரி 7:3-5 சகரி 8:19 |
| 13 | ஆண்டவரின் இல்லத்தையும் அரச அரண்மனையையும் எருசலேமில் இருந்த எல்லா வீடுகளையும் அவன் தீக்கிரையாக்கினான்: பெரிய வீடுகளை எல்லாம் தீயிலிட்டுப் பொசுக்கினான். | எரே 7:14 2இரா 25:9 2நாளா 36:19 சங் 74:6-8 சங் 79:1 ஏசா 64:10 ஏசா 64:11 புலம் 2:7 எசே 7:20-22 எசே 24:21 மீகா 3:12 சகரி 11:1 மத் 24:2 அப் 6:13 அப் 6:14 |
| 14 | மெய்க்காப்பாளர் தலைவனுடன் இருந்து கல்தேயப் படையினர் அனைவரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களை எல்லாம் தகர்த்தெறிந்தனர். | 2இரா 25:10 நெகே 1:3 |
| 15 | மெய்க்காப்பாளர் தலைவர் நெபுசரதான் ஏழை மக்களுள் சிலரையும், நகரில் எஞ்கியிருந்த மக்களையும், பாபிலோனிய மன்னிடம் சரணடைந்திருந்தவர்களையும், விடப்பட்டிருந்த கைவினைஞரோடு சேர்த்து நாடுகடத்தினான். | எரே 15:1 எரே 15:2 சகரி 14:2 |
| 16 | ஆனால் மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவைத்தான். | எரே 39:9 எரே 39:10 எரே 40:5-7 2இரா 25:12 எசே 33:24 |
| 17 | ஆண்டவரின் இல்லத்தில் இருந்த வெண்கலத் தூண்களையும் தள்ளுவண்டிகளையும் வெண்கலக் கடலையும் கல்தேயர் தூள்தூளாக்கி, வெண்கலத்தை எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர். | எரே 52:21-23 எரே 27:19-22 1இரா 7:15-22 1இரா 7:27-22 1இரா 7:50-22 2இரா 25:13-17 2நாளா 4:12 2நாளா 4:13 2நாளா 36:18 புலம் 1:10 தானி 1:2 |
| 18 | சாம்பல்சட்டிகள், அள்ளு கருவிகள், அணைப்பான்கள், பலிக் கிண்ணங்கள், தூபக்கலசங்கள், திருப்பணிக்குப் பயன்பட்டவெண்கலப் பாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு போனார்கள். | யாத் 27:3 யாத் 38:3 2இரா 25:14-16 எசே 46:20-24 |
| 19 | மேலும் பொன், வெள்ளியாலான கிண்ணங்கள், நெருப்புச் சட்டிகள், பலிக்கிண்ணங்கள், சாம்பல் சட்டிகள், விளக்குத் தண்டுகள், தூபக்கலசங்கள், நீர்மப்படையல் கிண்ணங்கள ஆகிய எல்லாவற்றையும் மெய்காப்பாளர் தலைவன் எடுத்துச் சென்றான். | லேவி 26:12 எண் 16:46 வெளிப் 8:3-5 |
| 20 | சாலமோன் அரசர் ஆண்டவர் இல்லத்திற்கென்று செய்திருந்த இரு தூண்கள், வெண்கலக் கடல், அதன் அடியில் இருந்த பன்னிரு வெண்கலக் காளைகள், தள்ளுவண்டிகள் ஆகிய இவற்றின் வெண்கலம் நிறுத்து மாளாது. | 1இரா 7:47 2இரா 25:16 1நாளா 22:14 2நாளா 4:18 |
| 21 | தூண் ஒவ்வொன்றின் உயரம் பதினெட்டு முழம்: சுற்றளவு பன்னிரண்டு முழம்: வெண்கலக் கன அளவு நான்கு விரற்கடை. உள்ளே கூடாய் இருந்தது. | 1இரா 7:15-21 2இரா 25:17 2நாளா 3:15-17 |
| 22 | தூணின் உச்சியில் ஐந்து முழ உயரமுள்ள வெண்கலப் போதிகை ஒன்று இருந்தது. போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலும் மாதுளம்பழ வடிவங்களும் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன. மாதுளம்பழ வடிவங்கள் கொண்ட மறு தூணும் அவ்வாறே செய்யப்பட்டிருந்தது. | யாத் 28:14-22 யாத் 28:25-22 யாத் 39:15-18 1இரா 7:17 2நாளா 3:15 2நாளா 4:12 2நாளா 4:13 |
| 23 | வலைப் பின்னலைச் சுற்றிலும் அமைக்கப் பெற்றிருந்த மொத்தம் நூறு மாதுளம் பழ வடிவங்களுள், தொண்ணூற்றாறு பக்கவாட்டில் தெரிந்தன. | 1இரா 7:20 |
| 24 | மெய்க்காப்பாளர் தலைவன், தலைமைக் குரு செராயாவையையும் துணைக் குரு செப்பனியாவையும் வாயிற்காவலர் மூவரையும் சிறைப்பிடித்தவன். | எரே 52:12 எரே 52:15 2இரா 25:18 |
| 25 | போர்வீரர்களின் தலைமை அதிகாரியையும், நகரில் இருந்த அரசவையோருள் எழுவரையும், படைத் தேர்வு மற்றும் பயிற்சி அலுவலரின் செயலரையும், நகருள் கண்ட பொது மக்களுள் அறுபது பேரையும் அவன் நகரினின்று கடத்தினான். | 2இரா 25:19 |
| 26 | மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதோன் இவர்களைப் பிடித்து, இரிப்லாவில் இருந்த பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றான். |
| 27 | ஆமாத்து நாட்டின் இரிப்லாவில் பாபிலோனிய மன்னன் இவர்களை வதைத்துக் கொன்றான். இவ்வாறு யூதா மக்கள் தங்கள் சொந்த நாட்டினின்று கடத்தப்பட்டார்கள். | எரே 6:13-15 2இரா 25:20 2இரா 25:21 எசே 8:11-18 எசே 11:1-11 |
| 28 | நெபுகத்னேசர் நாடுகடத்திய மக்களின் எண்ணிக்கை வருமாறு: அவன் ஆட்சியேற்ற ஏழாம் ஆண்டில் யூதா நாட்டினர் மூவாயிரத்து இருபத்து மூன்று பேர்: | 2இரா 24:2 2இரா 24:3 2இரா 24:12-16 தானி 1:1-3 |
| 29 | அவன் பதினெட்டாம் ஆண்டில் எருசலேமினின்று நாடுகடத்தப்பட்டோர் எண்ணூற்று முப்பத்திரண்டு பேர்: | எரே 52:12 எரே 39:9 2இரா 25:11 2நாளா 36:20 |
| 30 | அவன் இருபத்து மூன்றாம் ஆண்டில் மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் நாடுகடத்திய யூதா நாட்டினர் எழுநூற்று நாற்பத்தைந்து பேர். ஆக, நாடு கடத்தப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நாலாயிரத்து அறுநூறு. | எரே 52:15 எரே 6:9 |
| 31 | யூதாவின் அரசன் யோயாக்கினுடைய அடிமைத்தனத்தின் முப்பத்தேழாம் ஆண்டு பயன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் நாளன்று, அதாவது பாபிலோனிய மன்னன் எவில்மெரதாக்கு ஆட்சிபெற்ற ஆண்டில், அவன் யூதாவின் அரசன் யோயாக்கினைத் தலைநிமிரச் செய்து, சிறையினின்று விடுவித்தான். | 2இரா 25:27-30 |
| 32 | அவன் யோயாக்கினுடன் கனிவாய்ப் பேசி, பாபிலோனில் தன்னோடு இருந்த அரசர்களுக்கு இல்லாத சிறப்பை அவனுக்கு அளித்தான். | நீதி 12:25 |
| 33 | எனவே யோயாக்கின் தன் சிறை உடைகளைக் களைந்தெறிந்தான்: தன் வாழ்நாள் எல்லாம் அரசனுடன் தவறாது விருந்துண்டுவந்தான். | ஆதி 41:14 ஆதி 41:42 சங் 30:11 ஏசா 61:1-3 சகரி 3:4 |
| 34 | அவனுடைய அன்றாடத் தேவைகளுக்காக, அவன் சாகுமட்டும், அதாவது அவன் வாழ்நாள் முழுவதும், பாபிலோனிய மன்னன் அவனுக்கு உதவித் தொகையை ஒவ்வொரு நாளும் ஒழுங்காகக் கொடுத்து வந்தான். | 2சாமு 9:10 மத் 6:11 |