சகரியா 7:3-5 - WCV
3
படைகளின் ஆண்டவரது கோவிலில் இருக்கும் குருக்களையும் இறைவாக்கினர்களையும் கண்டு, “நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் செய்துவந்தது போல் ஐந்தாம் மாதத்தில் நோன்பிருந்து புலம்ப வேண்டுமா?” என்று கேட்டு வரவும் இவர்களை அனுப்பினார்கள்.
4
அப்போது படைகளின் ஆண்டவரது வாக்கு எனக்கு அருளப்பட்டது:
5
நாட்டின் எல்லா மக்களுக்கும் குருக்களுக்கும் நீ கூறவேண்டியது: “இந்த எழுபது ஆண்டுகளாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் நோன்பிருந்து ஓலமிட்டு அழுதீர்களே, எனக்காகவா நோன்பிருந்தீர்கள்?