14
பின்னர், பசும் பொன்னால் பின்னல் வடிவில் இரு சங்கிலிகள் செய்து, சங்கிலிகளைப் பதக்கங்களில் பொருத்துவாய்.
15
தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டை, ஏப்போது போலவே, கலை வேலைப்பாட்டுடன் அமையவேண்டும்.அதைப் பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்வாய்.
16
அது இரண்டாக மடிந்ததாயும், நீளம் ஒரு சாண், அகலம் ஒரு சாண் என்று சதுர வடிவமானதாயும் இருக்க வேண்டும்.
17
அதை நிரப்புமாறு அதன்மேல் கற்களை நான்கு வரிசையாகப் பதிப்பாய்.முதல் வரிசையில் பதுமராகம், புட்பராகம், மரகதம்:
18
இரண்டாம் வரிசையில் மாணிக்கம், நீலமணி, வைரம்:
19
மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், செவ்வந்திக்கல்:
20
நான்காம் வரிசையில் படிகப் பச்சை, கோமேதகம், கடல்வண்ணக்கல்-இவை யாயும் பொன்னிழைப் பின் புலத்தில் பதிக்கப்படட்டும்.
21
இந்தக் கற்கள் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களுக்கேற்பப் பன்னிரண்டு பெயர்களைக் கொண்டிருக்கும்.அவை ஒவ்வொன்றிலும் ஒரு பெயர் வீதம், பன்னிரண்டு குலங்கங்களுக்காகப் பன்னிரன்டு பெயர்களும் பொறிக்கப்பட்டு முத்திரைபோல் விளங்கும்.
22
மார்புப் பட்டைமேல் பொருத்த, பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த சங்கிலிகளைப் பசும்பொன்னால் செய்யவேண்டும்.