எரேமியா 40:5-7 - WCV
5
நீர் இங்கேயே தங்க விரும்பினால், யூதாவின் நகர்களுக்கு ஆளுநராய்ப் பாபிலோனிய மன்னன் ஏற்படுத்தியிருக்கும் சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவிடம் போய், அவனோடு மக்களிடையே வாழும். இல்லையெனில் எங்குப் போக உனக்கு விருப்பமோ, அங்கேயே செல்லும்” என்று கூறினார். பின்னர் மெய்க்காப்பாளரின் தலைவர் உணவுப் பொருள்களும் அன்பளிப்பும் எரேமியாவுக்கு அளித்து, அவரை அனுப்பிவைத்தார்.
6
எரேமியா மிஸ்பாவுக்குச் சென்று, நாட்டில் எஞ்சியிருந்த மக்களிடையே அகிக்காமின் மகன் கெதலியாவுடன் வாழ்ந்துவந்தார்.
7
அகிக்காம் மகன் கெதலியாவைப் பாபிலோனிய மன்னன் ஆளுநராக ஏற்படுத்தியிருக்கிறான் என்றும், பாபிலோனுக்கு நாடு கடத்தப்படாத ஏழைகளான ஆண், பெண், சிறுவர்களை அவரது பொறுப்பில் விட்டுள்ளான் என்றும் நாட்டில் ஆங்காங்கே இருந்த படைத்தலைவர்கள் எல்லாரும் அவர்களுடைய ஆள்களும் கேள்வியுற்றனர்.