3
நீ அவனுடைய கைக்குத் தப்பமாட்டாய்: மாறாகத் திண்ணமாய்ப் பிடிபட்டு, அவன் கையில் ஒப்புவிக்கப்படுவாய். பாபிலோனிய மன்னனை நீ முகத்துக்குமுகம் பார்ப்பாய்: அவனோடு நேருக்கு நெர் பேசுவாய்: நீ பாபிலோனுக்குப் போவாய்.
4
ஆயினும், யூதாவின் அரசனே! செதேக்கியா! ஆண்டவரின் வாக்கைக் கேள். உன்னைப் பற்றி ஆணடவர் கூறுவது இதுவே: நீ வாளால் மடியமாட்டாய்:
5
ஆனால் அமைதியாகவே சாவாய். உனக்குமுன் வாழ்ந்த பண்டைய அரசர்களான உன் மூதாதையரின் நினைவாக மக்கள் நறுமணப் பொருள்களை எரித்தது போன்று, உன் நினைவாகவும் எரிப்பார்கள்: “ஐயோ, தலைவா!” எனச் சொல்லி உன்பொருட்டுப் புலம்புவார்கள்! இது உறுதி, என்கிறார் ஆண்டவர்.