விதைப்பவனைப் பாபிலோனினின்று அழித்துப் போடுங்கள்: அறுவடைக் காலத்தில் அரிவாள் எடுப்பவனையும் வீழ்த்தி விடுங்கள்: கொடுங்கோலனின் வாளை முன்னிட்டு, அவர்கள் ஒவ்வொருவனும் தன் சொந்த மக்களிடம் திரும்பிப் போகட்டும்: அவர்கள் எல்லாரும் தங்கள் சொந்த நாட்டுக்கே தப்பியோடட்டும்.