20
“விண்ணகமே, இறைமக்களே, திருத்தூதர்களே, இறைவாக்கினர்களே, அவளைமுன்னிட்டு மகிழ்ந்து கொண்டாடுங்கள்: கடவுள் உங்கள் சார்பாக அவளுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கிவிட்டார்.
21
பின்னர் வலிமை வாய்ந்த ஒரு வானதூதர் பெரிய எந்திரக்கல் போன்ற ஒரு கல்லைத் தூக்கிக் கடலில் எறிந்து பின்வருமாறு கூறினார்: “பாபிலோன் மாநகரே, நீ இவ்வாறு வீசி எறியப்படுவாய்: நீ இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடுவாய்.
22
யாழை மீட்டுவோர், பாடகர், குழல் ஊதுவோர், எக்காளம் முழக்குவோர் ஆகியோர் எழுப்பும் இசை இனி உன் நடுவே எழவே எழாது: தொழில் செய்யும் கைவினைஞர் அனைவரும் இனி உன் நடுவே குடியிருக்கவே மாட்டார்கள்: எந்திரக்கல் எழுப்பும் ஒலி இனி உன் நடுவே எழவே எழாது.
23
விளக்கின் ஒளி இனி உன்னகத்தே ஒளிரவே ஒளிராது: மணமக்களின் மங்கல ஒலி இனி உன்னகத்தே எழவே எழாது: ஏனெனில் உன் வணிகர்கள் மண்ணுலகில் பெருங்குடி மக்களாய் விளங்கினார்கள்: உன் பில்லிசூனியம் எல்லா நாடுகளையும் ஏமாற்றிவிட்டது.