எரேமியா 50:23-26 - WCV
23
மண்ணுலகு முழுவதற்கும் சம்மட்டியாய்த் திகழ்ந்தது நொறுங்கித் தூள்தூளானது எப்படி! மக்களினங்கள் நடுவே பாபிலோன் பாழடைந்துபோனது எவ்வாறு!
24
பாபிலோனே, நான் உனக்குக் கண்ணி வைத்தேன்: தெரியாமலே நீ அதில் மாட்டிக் கொண்டாய்: நீ கண்டுபிடிக்கப்பட்டுப் பிடிபட்டாய்: ஏனெனில் நீ ஆண்டவரை எதிர்த்தாய்.
25
ஆண்டவர் தம் படைக்கலக் கொட்டிலைத் திறந்து விட்டார்: தம் கடுங்கோபத்தின் படைக்கருவிகளை வெளிக்கொணர்ந்தார்: கல்தேயர் நாட்டில் படைகளின் ஆண்டவராகிய கடவுள் ஆற்றவேண்டிய அலுவல் இதுவே.
26
எல்லாத் திக்குகளினின்றும் அதை எதிர்த்து வாருங்கள்: அதன் களஞ்சியங்களை உடைத்துத்திறங்கள்: தானியக் குவியல்போல அதைக் குவித்து வையுங்கள்: அதை முற்றிலும் அழித்துப் போடுங்கள்: அதில் எதுவும் எஞ்சியிருக்க வேண்டாம்.