என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே, என்கிறார் ஆண்டவர். நான் உன்னோடு இருக்கிறேன்: எந்த மக்களினத்தாரிடையே உன்னைத் துரத்தியடித்தேனோ, அவர்கள் அனைவரையும் முற்றிலும் அழித்தொழிப்பேன்: உன்னையோ முற்றிலும் அழிக்க மாட்டேன்: உன்னை நீதியோடு தண்டிப்பேன்: உன்னை எவ்வகையிலேனும் தண்டியாது விடேன்.