ஆபகூக் 2:15-17 - WCV
15
அடுத்திருப்பவர் மீது கொண்ட சினத்தினால் அவர்களைக் குடிவெறியர்களாக்கி அவர்களது திறந்த மேனியின் அலங்கோலத்தைக் காணும்வரை குடிக்கச் செய்பவனுக்கு ஐயோ கேடு!
16
நீ மேன்மை அடையாது ஏளனத்துக்கு ஆளாக்கப்பட்டிருப்பாய்: நீயும் குடி, குடித்துவிட்டுத் தள்ளாடு: ஆண்டவரின் வலக்கையிலுள்ள தண்டனைக்கலம் உன்னிடம் திரும்பிவரும்: அப்போது உன் மேன்மை மானக்கேடாய் மாறும்.
17
லெபனோனுக்கு நீ செய்த கொடுமை உன் மீது வந்து விழும்: நீ வெட்டி வீழ்த்திய விலங்குகளே உன்னை நடுக்கமுறச் செய்யும்: ஏனெனில் நீ மனித இரத்தத்தைச் சிந்தினாய்: நாட்டுக்கும் நகர்க்கும் அங்குக் குடியிருப்போர் அனைவர்க்கும் கொடுமைகள் செய்தாய்.