| 1 | ஆண்டவரது சினத்தின் கோலால் வேதனை அனுபவித்த ஒருவன் நான்! | புலம் 1:12-14 யோபு 19:21 சங் 71:20 சங் 88:7 சங் 88:15 சங் 88:16 ஏசா 53:3 எரே 15:17 எரே 15:18 எரே 20:14-18 எரே 38:6 |
| 2 | அவர் என்னைத் துரத்தியடித்து, ஒளியினுள் அன்று, இருளினுள் நடக்கச் செய்தார்! | புலம் 3:53-55 புலம் 2:1 உபா 28:29 யோபு 18:18 யோபு 30:26 ஏசா 59:9 எரே 13:16 ஆமோ 5:18-20 யூதா 1:6 யூதா 1:13 |
| 3 | உண்மையில் அவர் என்மீது தம் கையை ஓங்குகிறார்! நாள் முழுதும் ஓங்குகிறார்! மீண்டும் மீண்டும் என்னை வதைக்கிறார்! | புலம் 2:4-7 உபா 29:20 யோபு 31:21 ஏசா 1:25 ஏசா 63:10 |
| 4 | அவர் என் சதையையும் தோலையும் சிதைத்துவிட்டார்! என் எலும்புகளை நொறுக்கி விட்டார்! | யோபு 16:8 யோபு 16:9 சங் 31:9 சங் 31:10 சங் 32:3 சங் 38:2-8 சங் 102:3-5 |
| 5 | அவர் கசப்பாலும் துயராலும் என்னை முற்றுகையிட்டு வளைத்துக்கொண்டார்! | புலம் 3:7-9 யோபு 19:8 |
| 6 | பண்டைக் காலத்தில் இறந்தோர் போல, இருள் சூழ்ந்த இடத்தில் அவர் என்னை வாழச் செய்தார்! | சங் 88:5 சங் 88:6 சங் 143:3 சங் 143:7 |
| 7 | நான் தப்பிச் செல்ல இயலாதவாறு என்னைச் சுற்றிலும் அவர் மதில் எழுப்பினார்! பளுவான தளைகளால் என்னைக் கட்டினார்! | புலம் 3:9 யோபு 3:23 யோபு 19:8 சங் 88:8 எரே 38:6 ஓசி 2:6 |
| 8 | துணை வேண்டி நான் கூக்குரல் எழுப்பியபோதும், அவர் என் மன்றாட்டைக் கேட்க மறுத்துவிட்டார்! | புலம் 3:44 யோபு 19:7 யோபு 30:20 சங் 22:2 சங் 80:4 ஆபகூ 1:2 மத் 27:46 |
| 9 | செதுக்கிய கற்களால் என் வழிகளில் தடைச் சுவர் எழுப்பினார்! என் பாதைகளைக் கோணாலாக்கினார்! | புலம் 3:11 ஏசா 30:28 ஏசா 63:17 |
| 10 | பதுங்கியிருக்கும் கரடி போன்றும் மறைந்திருக்கும் சிங்கம் போன்றும், அவர் எனக்கு ஆனார்! | யோபு 10:16 ஏசா 38:13 ஓசி 5:14 ஓசி 6:1 ஓசி 13:7 ஓசி 13:8 ஆமோ 5:18-20 |
| 11 | என் வழிகளினின்று இழுத்துச் சென்று, என்னைப் பீறிக் கிழித்தார்! என்னை முற்றிலும் பாழாக்கினார்! | யோபு 16:12 யோபு 16:13 சங் 50:22 எரே 5:6 எரே 51:20-22 தானி 2:40-44 தானி 7:23 மீகா 5:8 ஓசி 6:1 |
| 12 | அவர் தமது வில்லை நாணேற்றினார்! அவர் தமது அம்புக்கு என்னை இலக்கு ஆக்கினார்! | யோபு 6:4 யோபு 7:20 யோபு 16:12 யோபு 16:13 சங் 7:12 சங் 7:13 சங் 38:2 |
| 13 | அவர் தமது அம்புக் கூட்டின் அம்புகளை என் நெஞ்சுள் பாய்ச்சினார்! | உபா 32:23 யோபு 6:4 யோபு 41:28 |
| 14 | நாள் முழுதும் நான் என் மக்கள் அனைவரின் நகைப்புக்கு உள்ளானேன்! அவர்களது வசைப்பாடலின் பொருள் ஆனேன்! | புலம் 3:63 நெகே 4:2-4 யோபு 30:1-9 சங் 22:6 சங் 22:7 சங் 35:15 சங் 35:16 சங் 44:13 சங் 69:11 சங் 69:12 சங் 79:4 சங் 123:3 சங் 123:4 சங் 137:3 எரே 20:7 எரே 48:27 மத் 27:39-44 1கொரி 4:9-13 |
| 15 | அவர் கசப்புணவால் என்னை நிரப்பினார்! எட்டிக் காடியால் எனக்கு வெறியூட்டினார்! | புலம் 3:19 ரூத் 1:20 யோபு 9:18 சங் 60:3 ஏசா 51:17-22 எரே 9:15 எரே 23:15 எரே 25:15-18 எரே 25:27-18 |
| 16 | கற்களால் என் பற்களை நொறுக்கினார்! என்னைப் புழுதியில் போட்டு அவர் மிதித்தார்! | யோபு 4:10 சங் 3:7 சங் 58:6 |
| 17 | அமைதியை நான் முழுக்கச் செய்தீர்! நலமென்பதையே நான் மறந்துவிட்டேன்! | புலம் 1:16 சங் 119:155 ஏசா 38:17 ஏசா 54:10 ஏசா 59:11 எரே 8:15 எரே 14:19 எரே 16:5 சகரி 8:10 |
| 18 | “என் வலிமையும் ஆண்டவர்மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையும் மறைந்துபோயின!” என்று நான் சொல்லிக் கொண்டேன். | 1சாமு 27:1 யோபு 6:11 யோபு 17:15 சங் 31:22 சங் 116:11 எசே 37:11 |
| 19 | என் துயரத்தையும் அலைச்சலையும், எட்டிக் காடியையும் கசப்பையும் நினைத்தருளும்! | நெகே 9:32 யோபு 7:7 சங் 89:47 சங் 89:50 சங் 132:1 |
| 20 | அதை நினைந்து நினைந்து என் உள்ளம் கூனிக் குறுகுகின்றது! | யோபு 21:6 |
| 21 | இதை என் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன்: எனவே நான் நம்பிக்கை கொள்கின்றேன். | சங் 77:7-11 |
| 22 | “ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை! | எஸ்றா 9:8 எஸ்றா 9:9 எஸ்றா 9:13-15 நெகே 9:31 சங் 78:38 சங் 106:45 எசே 20:8 எசே 20:9 எசே 20:13 எசே 20:14 எசே 20:21 எசே 20:22 மல்கி 3:6 |
| 23 | காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!” | சங் 30:5 ஏசா 33:2 செப் 3:5 |
| 24 | “ஆண்டவரே என் பங்கு” என்று என் மனம் சொல்கின்றது! எனவே நான் அவரில் நம்பிக்கை கொள்கின்றேன். | சங் 16:5 சங் 73:26 சங் 119:57 சங் 142:5 எரே 10:16 எரே 51:19 |
| 25 | ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும், அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்! | புலம் 3:26 ஆதி 49:18 சங் 25:8 சங் 27:14 சங் 37:7 சங் 37:34 சங் 39:7 சங் 40:1-5 சங் 61:1 சங் 61:5 சங் 130:5 சங் 130:6 ஏசா 25:9 ஏசா 30:18 ஏசா 40:31 ஏசா 64:4 மீகா 7:7 மீகா 7:8 செப் 3:8 1தெச 1:10 யாக் 5:7 |
| 26 | ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்! | சங் 52:9 சங் 54:6 சங் 73:28 சங் 92:1 கலா 4:18 |
| 27 | இளமையில் நுகம் சுமப்பது மனிதருக்கு நலமானது! | சங் 90:12 சங் 94:12 சங் 119:71 பிரச 12:1 மத் 11:29 மத் 11:30 எபிரெ 12:5-12 |
| 28 | அவரே அதை அவர்கள்மேல் வைத்தார்: எனவே, தனிமையில் அமைதியாய் அவர்கள் அமரட்டும். | புலம் 2:10 சங் 39:9 சங் 102:7 எரே 15:17 |
| 29 | அவர்களின் வாய் புழுதியைக் கவ்வட்டும்: நம்பிக்கைக்கு இன்னும் இடம் இருக்கலாம்! | 2நாளா 33:12 யோபு 40:4 யோபு 42:5 யோபு 42:6 எசே 16:63 ரோம 3:19 |
| 30 | தங்களை அறைபவர்களுக்குக் கன்னத்தைக் காட்டட்டும்! அவர்கள் நிந்தைகளால் நிரப்பப்படட்டும்! | யோபு 16:10 ஏசா 50:6 மீகா 5:1 மத் 5:39 மத் 26:67 லூக் 6:29 2கொரி 11:20 |
| 31 | என் தலைவர் என்றுமே கைவிட மாட்டார்! | 1சாமு 12:22 சங் 77:7 சங் 94:14 சங் 103:8-10 ஏசா 54:7-10 ஏசா 57:16 எரே 31:37 எரே 32:40 எரே 33:24 மீகா 7:18 ரோம 11:1-6 |
| 32 | அவர் வருத்தினாலும், தம் பேரன்பால் இரக்கம் காட்டுவார். | புலம் 3:22 யாத் 2:23 யாத் 3:7 நியா 10:16 2இரா 13:23 சங் 30:5 சங் 78:38 சங் 103:11 சங் 106:43-45 எரே 31:20 ஓசி 11:8 லூக் 15:20 |
| 33 | மனமார அவர் மானிடரை வருத்துவதுமில்லை: துன்புறுத்துவதுமில்லை. | ஏசா 28:21 எசே 18:32 எசே 33:11 எபிரெ 12:9 எபிரெ 12:10 |
| 34 | நாட்டில் சிறைப்பட்டோர் அனைவரும் காலால் மிதிக்கப்படுவதையோ, | ஏசா 51:22 ஏசா 51:23 எரே 50:17 எரே 50:33 எரே 50:34 எரே 51:33-36 |
| 35 | உன்னதரின் திருமுன் மனிதருக்கு நீதி மறுக்கப்படுவதையோ, |
| 36 | வழக்கில் ஒருவர் வஞ்சிக்கப்படுவதையோ, என் தலைவர் காணாது இருப்பாரோ? | 2சாமு 11:27 ஏசா 59:15 ஆபகூ 1:13 |
| 37 | என் தலைவர் கட்டளையிடாமல், யார் தாம் சொல்லியரை நிறைவேற்றக்கூடும்? | சங் 33:9-11 நீதி 16:9 நீதி 19:21 நீதி 21:30 ஏசா 46:10 தானி 4:35 ரோம 9:15 எபே 1:11 யாக் 4:13-15 |
| 38 | நன்மையும் தீமையும் புறப்படுவது, உன்னதரின் வாயினின்று அன்றோ? | யோபு 2:10 சங் 75:7 நீதி 29:26 ஏசா 45:7 ஆமோ 3:6 |
| 39 | உயிருள்ள மனிதர் முறையிடுவது ஏன்? மானிடர் அடைவது தம் பாவத்தின் விளைவை அன்றோ? | புலம் 3:22 எண் 11:11 நீதி 19:3 ஏசா 38:17-19 |
| 40 | நம் வழிகளை ஆய்ந்தறிவோம்! ஆண்டவரிடம் திரும்புவோம்! | 1நாளா 15:12 1நாளா 15:13 யோபு 11:13-15 யோபு 34:31 யோபு 34:32 சங் 4:4 சங் 119:59 சங் 139:23 சங் 139:24 எசே 18:28 ஆகா 1:5-9 1கொரி 11:28 1கொரி 11:31 2கொரி 13:5 |
| 41 | விண்ணக இறைவனை நோக்கி நம் இதயத்தையும் கைகளையும் உயர்த்துவோம்! | சங் 25:1 சங் 86:4 சங் 143:6-8 |
| 42 | நாங்கள் குற்றம் புரிந்து கலகம் செய்தோம்! நீரோ எம்மை மன்னிக்கவில்லை! | புலம் 1:18 புலம் 5:16 நெகே 9:26 யோபு 33:27 யோபு 33:28 எரே 3:13 தானி 9:5-14 லூக் 15:18 லூக் 15:19 |
| 43 | நீர் சினத்தால் உம்மை மூடிக்கொண்டு எம்மைப் பின்தொடர்ந்தீர்! இரக்கமின்றி எம்மைக் கொன்றழித்தீர்? | புலம் 2:1 சங் 44:19 |
| 44 | எங்கள் மன்றாட்டு உம்மை வந்தடையாதபடி, மேகத்தால் உம்மை மூடிக்கொண்டீர்! | சங் 97:2 |
| 45 | மக்களினங்கள் இடையே எம்மை குப்பைக் கூளம் ஆக்கிவிட்டீர்! | புலம் 3:14 புலம் 2:15 புலம் 4:14 புலம் 4:15 உபா 28:13 உபா 28:37 உபா 28:44 1கொரி 4:13 |
| 46 | எங்கள் பகைவர் அனைவரும் எங்களுக்கு எதிராக வாய் திறந்தனர்! | புலம் 2:16 யாத் 11:7 யோபு 30:9-11 சங் 22:6-8 சங் 44:13 சங் 44:14 சங் 79:4 சங் 79:10 மத் 27:38-45 |
| 47 | திகிலும் படுகுழியும் எம்முன் உள்ளன! சிதைவும் சீரழிவும் எம்மேல் வந்தன! | ஏசா 24:17 ஏசா 24:18 ஏசா 51:19 எரே 48:43 எரே 48:44 லூக் 21:35 |
| 48 | என் மக்களாகிய மகளின் அழிவைக் கண்டு என் கண்கள் குளமாயின! | புலம் 2:11 புலம் 2:18 சங் 119:136 எரே 4:19 எரே 9:1 எரே 9:18 எரே 13:17 ரோம 9:1-3 |
| 49 | வற்றாத ஓடையென என் கண்கள் நீர் சொரிகின்றன: | புலம் 1:16 சங் 77:2 எரே 14:17 |
| 50 | ஆண்டவர் வானினின்று கண்ணோக்கும் வரை, ஓய்வின்றிக் கண்ணீர் சொரிகின்றன! | புலம் 2:20 புலம் 5:1 சங் 80:14-16 சங் 102:19 சங் 102:20 ஏசா 62:6 ஏசா 62:7 ஏசா 63:15 ஏசா 64:1 தானி 9:16-19 |
| 51 | என் நகரின் புதல்வியர் அனைவர் நிலை கண்டு, என் உள்ளம் புலம்புகின்றது! | ஆதி 44:34 1சாமு 30:3 1சாமு 30:4 எரே 4:19-21 எரே 14:18 லூக் 19:41-44 |
| 52 | காரணமின்றி என் பகைவர், பறவையை வேட்டையாடுவது போன்று, என்னை வேட்டையாடினர்! | எரே 37:15 எரே 37:16 எரே 38:4-6 |
| 53 | உயிரோடு என்னைக் குழியில் தள்ளி, என்மேல் கற்களை எறிந்தார்கள்! | எரே 37:20 எரே 38:6 எரே 38:9 |
| 54 | வெள்ளம் என் தலைக்குமேல் போயிற்று! “நான் தொலைந்தேன்” என்றேன். | சங் 18:4 சங் 69:1 சங் 69:2 சங் 69:15 சங் 124:4 சங் 124:5 யோனா 2:3-5 |
| 55 | படுகுழியினின்று ஆண்டவரே! உம் திருப்பெயரைக் கூவியழைத்தேன். | 2நாளா 33:11 2நாளா 33:12 சங் 18:5 சங் 18:6 சங் 40:1 சங் 40:2 சங் 69:13-18 சங் 116:3 சங் 116:4 சங் 130:1 சங் 130:2 சங் 142:3-7 எரே 38:6 யோனா 2:2-4 அப் 16:24-28 |
| 56 | என் குரலை நீர் கேட்டீர்: என் விம்மலுக்கும் வேண்டுதலுக்கும் உம் செவியை மூடிக்கொள்ளாதீர்! | 2நாளா 33:13 2நாளா 33:19 யோபு 34:28 சங் 3:4 சங் 6:8 சங் 6:9 சங் 34:6 சங் 66:19 சங் 116:1 சங் 116:2 ஏசா 38:5 |
| 57 | உம்மை நோக்கி நான் கூவியழைத்த நாளில், என்னை அணுகி, “அஞ்சாதே” என்றீர்! | சங் 69:18 சங் 145:18 ஏசா 58:9 யாக் 4:8 |
| 58 | என் தலைவரே! என் பொருட்டு வாதாடினீர்! என் உயிரை மீட்டருளினீர்! | 1சாமு 25:39 சங் 35:1 எரே 51:36 |
| 59 | ஆண்டவரே! எனக்கு இழைக்கப்பட்ட தீங்கைக் கண்டீர்! எனக்கு நீதி வழங்கும்! | எரே 11:19-21 எரே 15:10 எரே 18:18-23 எரே 20:7-10 எரே 37:1-38 |
| 60 | அவர்களின் பழிவாங்கும் திட்டத்தையும் எனக்கு எதிரான அவர்களின் சூழ்ச்சிகள் அனைத்தையும் கண்டீர்! | புலம் 3:59 சங் 10:14 எரே 11:19 எரே 11:20 |
| 61 | ஆண்டவரே! அவர்களின் வசைமொழிகளையும் எனக்கு எதிரான அவர்களின் சூழ்ச்சிகள் அனைத்தையும் கேட்டீர்! | புலம் 3:30 புலம் 5:1 சங் 74:18 சங் 89:50 செப் 2:8 |
| 62 | என் பகைவர் நாள் முழுவதும் எனக்கெதிராக, முணுமுணுத்துத் திட்டமிடுகின்றனர். | சங் 59:7 சங் 59:12 சங் 140:3 எசே 36:3 |
| 63 | பாரும்! அவர்கள் அமர்ந்தாலும் எழுந்தாலும் என்னைப் பற்றியே வசைபாடுகிறார்கள்! | சங் 139:2 |
| 64 | ஆண்டவரே! அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கைம்மாறு அளித்தருளும்! | சங் 28:4 எரே 11:20 எரே 50:29 2தீமோ 4:14 வெளிப் 6:10 வெளிப் 18:6 |
| 65 | நீர் அவர்கள் மனதைக் கடினப்படுத்தும்! உம் சாபம் அவர்கள்மேல் விழச் செய்யும்! | உபா 2:30 ஏசா 6:10 |
| 66 | ஆண்டவரே, சினம் கொண்டு அவர்களைப் பின்தொடரும்! வானத்தின்கீழ் இல்லாதவாறு அவர்களை அழித்தொழியும்! | புலம் 3:43 சங் 35:6 சங் 73:15 |