எனவே காட்டுச் சிங்கம் அவர்களைக் கொல்லும், பாலைநிலத்து ஓநாய் அவர்களை அழிக்கும், சிறுத்தை அவர்கள் நகர்கள் மேல் கண்வைத்திருக்கும்: அவற்றிலிருந்து வெளியேறும் அனைவரும் பீறிக் கிழித்தெறியப்படுவர். ஏனெனில், அவர்கள் வன்செயல்கள் பல செய்தனர்: என்னை விட்டுப் பன்முறை விலகிச் சென்றனர்.