யோபு 30:1-9 - WCV
1
ஆனால், இன்று என்னை, என்னைவிட இளையோர் ஏளனம் செய்கின்றனர்: அவர்களின் தந்தையரை என் மந்தையின் நாய்களோடு இருத்தவும் உடன் பட்டிரேன்.
2
எனக்கு அவர்களின் கைவன்மையால் என்ன பயன்? அவர்கள்தாம் ஆற்றல் இழந்து போயினரே?
3
அவர்கள் பட்டினியாலும் பசியாலும் மெலிந்தனர்: வறண்டு, இருண்டு அழிந்த பாலைக்கு ஓடினர்.
4
அவர்கள் உப்புக்கீரையைப் புதரிடையே பறித்தார்கள்: காட்டுப் பூண்டின் வேரே அவர்களின் உணவு.
5
மக்கள் அவர்களைத் தம்மிடமிருந்து விரட்டினர்: கள்வரைப் பிடிக்கத் கத்துவதுபோல் அவர்களுக்குச் செய்தனர்.
6
ஓடைகளின் உடைப்புகளிலும் நிலவெடிப்புகளிலும் பாறைப்பிளவுகளிலும் அவர்கள் வாழ்ந்தனர்.
7
புதர்களின் நடுவில் அவர்கள் கத்துவர்: முட்செடியின் அடியில் முடங்கிக் கிடப்பர்.
8
மடையனின் மக்கள் பெயரில்லாப் பிள்ளைகள்: அவர்கள் நாட்டிலிருந்து விரட்டப்பட்டனர்.
9
இப்பொழுதோ, அவர்களுக்கு நான் வசைப்பாட்டு ஆனேன்: அவர்களுக்கு நான் பழமொழியானேன்.