சங்கீதம் 40:1-5 - WCV
1
நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்: அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.
2
அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார். சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்: கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்: என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.
3
புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்: பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்:
4
ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்: அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்: பொய்யானவற்றைச் சாராதவர்.
5
ஆண்டவரே! எண்ணிறந்தவற்றை நீர் எமக்கெனச் செய்துள்ளீர்: உமக்கு நிகரானவர் எவரும் இலர்: என் கடவுளே! உம் அருஞ்செயல்களும் திட்டங்களும் எங்களுக்காகவே: அவற்றை நான் எடுத்துரைக்க விரும்புவேனாகில் அவை எண்ணிலடங்கா.