1ஐயோ! பொன் இப்படி மங்கிப் போயிற்றே! பசும்பொன் இப்படி மாற்றுக் குறைந்து போயிற்றே! திருத்தலக் கற்கள் தெருமுறை எங்கும் சிதறிக் கிடக்கின்றனவே!2இரா 25:9 2இரா 25:10 ஏசா 1:21 ஏசா 14:12 எசே 7:19-22 2பசும்பொன்னுக்கு இணையான சீயோனின் அருமை மைந்தர் இன்று குயவனின் கைவினையாம் மண்பாண்டம் ஆயினரே!ஏசா 51:18 சகரி 9:13 3குள்ளநரிகளும் பாலூட்டித் தம் குட்டிகளைப் பேணிக்காக்கும்! பாலைநிலத் தீக்கோழியென என் மக்களாம் மகள் கொடியவள் ஆயினளே!புலம் 2:20 புலம் 4:10 லேவி 26:29 உபா 28:52-57 2இரா 6:26-29 ஏசா 49:15 எரே 19:9 எசே 5:10 லூக் 23:28 லூக் 23:29 4பால்குடி மறவாத மழலைகளின் நாவு தாகத்தால் அண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும்! பச்சிளங் குழந்தைகள் கெஞ்சுகின்ற உணவுதனை அளித்திடுவார் யாருமிலர்!சங் 22:15 சங் 137:6 5சுவையுணவு அருந்தினோர் நடுத்தெருவில் நலிகின்றனர்! பட்டுடுத்தி வளர்ந்தோர் குப்பைமேட்டில் கிடக்கின்றனர்!உபா 28:54-56 ஏசா 3:16-26 ஏசா 24:6-12 ஏசா 32:9-14 எரே 6:2 எரே 6:3 ஆமோ 6:3-7 லூக் 7:25 1தீமோ 5:6 வெளிப் 18:7-9 6ஒருவரும் கை வைக்காமல் நொடிப்பொழுதில் வீழ்ச்சியுற்ற சோதோமின் பாவத்தைவிட, என் மக்களாம் மகளின் குற்றம் பெரிதாமே!ஏசா 1:9 ஏசா 1:10 எசே 16:48-50 மத் 11:23 மத் 11:24 லூக் 10:12 லூக் 12:47 7அவள் இளவரசர் பனியினும் தூயவராய்ப் பாலினும் வெண்மையராய்ப் பவளத்தினும் சிவந்த மேனியராய் நீல மணிக் கட்டழகராய் இருந்தனர்!எண் 6:2-21 நியா 13:5 நியா 13:7 நியா 16:17 ஆமோ 2:11 ஆமோ 2:12 லூக் 1:15 8இப்பொழுதோ, அவர்கள் தோற்றம் கரியினும் கருமை ஆனது: அவர்களைத் தெருக்களில் அடையாளம் காண இயலவில்லை! அவர்கள் தோல் எலும்போடு ஒட்டியிருந்தது. காய்ந்த மரம்போல் அது உலர்ந்து போனது!புலம் 5:10 யோபு 30:17-19 யோபு 30:30-19 யோவே 2:6 நாகூ 2:10 9பசியினால் மாண்டவர்களினும் வாளினால் மாண்டோர் நற்பேறு பெற்றோர்! ஏனெனில், முன்னையோர் வயல் தரும் விளைச்சலின்றிக் குத்துண்டவர் போல் மாய்ந்தனர்!லேவி 26:39 எசே 24:23 எசே 33:10 10இரங்கும் பெண்டிரின் கைகள் தம் குழந்தைகளை வேகவைத்தன! என் மக்களாகிய மகள் அழிவுற்றபோது பிள்ளைகளே அன்னையர்க்கு உணவாயினர்!புலம் 4:3 புலம் 2:20 2இரா 6:26-29 11ஆண்டவர் தம் சீற்றத்தைத் தீர்த்துக் கொண்டார்: தம் கோபக் கனலைக் கொட்டினார்: சீயோனில் நெருப்பை மூட்டினார்: அது அதன் அடித்தளங்களை விழுங்கிற்று.புலம் 4:22 புலம் 2:8 புலம் 2:17 உபா 32:21-25 எரே 6:11 எரே 6:12 எரே 7:20 எரே 9:9-11 எரே 13:14 எரே 14:15 எரே 14:16 எரே 15:1-4 எரே 19:3-11 எரே 23:19 எரே 23:20 எரே 24:8-10 எசே 20:47 எசே 20:48 எசே 22:31 தானி 9:12 சகரி 1:6 லூக் 21:22 12பகைவரும் எதிரிகளும் எருசலேம் வாயில்களில் நுழைவர் என்று மண்ணுலகின் மன்னரோ பூவுலகில் வாழ்வோரோ நம்பவில்லை.உபா 29:24-28 1இரா 9:8 1இரா 9:9 சங் 48:4-6 13நகரின் நடுவே நீதிமானின் இரத்தம் சிந்திய இறைவாக்கினரின் பாவமும் குருக்களின் குற்றமுமே இதற்குக் காரணமாம்!புலம் 2:14 எரே 5:31 எரே 6:13 எரே 14:14 எரே 23:11-21 எசே 22:26-28 மீகா 3:11 மீகா 3:12 செப் 3:3 செப் 3:4 14அவர்கள் குருடரெனத் தெருக்களில் தடுமாறினர்: அவர்கள்மீது இரத்தக் கறை எவ்வளவு படிந்திருந்ததெனில், அவர்கள் ஆடைகளைக்கூட எவராலும் தொட இயலவில்லை.உபா 28:28 உபா 28:29 ஏசா 29:10-12 ஏசா 56:10 ஏசா 59:9-11 மீகா 3:6 மீகா 3:7 மத் 15:14 எபே 4:18 15விலகுங்கள்! தீட்டு! விலகுங்கள்! தொடாதீர்கள்! என்று அவர்களைப் பார்த்துக் கூவினார்கள்: அவர்கள் அகதிகளாய் அலைந்து திரிந்தார்கள். 'இனி நம்மிடம் குடியிரார்,' 'இனி எம்மிடையே தங்கக்கூடாது' என்று வேற்றினத்தார் கூறினர்.16ஆண்டவரே தம் முன்னிலையினின்று அவர்களைச் சிதறடித்தார்: இனி அவர்களைக் கண்ணோக்கமாட்டார். குருவை மதிப்பார் இல்லை: முதியோர்க்கு இரங்குவார் இல்லை.ஆதி 49:7 லேவி 26:33-39 உபா 28:25 உபா 28:64 உபா 28:65 உபா 32:26 எரே 15:4 எரே 24:9 17உதவியை வீணில் எதிர்பார்த்து எம் கண்கள் பூத்துப்போயின! எம்மை விடுவிக்க இயலாத நாட்டினர்க்காய்க் கண் விழித்துக் காத்திருந்தோம்!புலம் 1:19 2இரா 24:7 ஏசா 20:5 ஏசா 30:1-7 ஏசா 31:1-3 எரே 2:18 எரே 2:36 எரே 8:20 எரே 37:7-10 எசே 29:6 எசே 29:7 எசே 29:16 18எம் நடமாட்டம் கவனிக்கப்பட்டது: எம் தெருக்களில் கூட எம்மால் நடக்க முடியவில்லை: எம் முடிவு நெருங்கிவிட்டது: எம் நாள்கள் முடிந்துவிட்டன: எம் முடிவு வந்து விட்டது.புலம் 3:52 1சாமு 24:14 2இரா 25:4 2இரா 25:5 யோபு 10:16 சங் 140:11 எரே 16:16 எரே 39:4 எரே 39:5 எரே 52:7-9 19வானத்துப் பருந்துகளிலும் விரைவாய் எம்மைத் துரத்துவோர் வருகின்றனர்: மலைகளில் எங்களைத் துரத்தி வந்தார்கள்: பாலையில் எங்களுக்காய்ப் பதுங்கி இருந்தார்கள்.உபா 28:49 ஏசா 5:26-28 ஏசா 30:16 ஏசா 30:17 எரே 4:13 ஓசி 8:1 ஆபகூ 1:8 மத் 24:27 மத் 24:28 20ஆண்டவரின் திருப்பொழிவு பெற்று எம் உயிர் மூச்சாய்த் திகழ்ந்தவர், அவர்கள் வெட்டிய குழியில் வீழ்ந்தனர்! “அவரது நிழலில் வேற்றினத்தார் நடுவில் நாம் வாழ்வோம்” என்று அவரைக் குறித்தே எண்ணியிருந்தோம்!புலம் 2:9 ஆதி 2:7 ஆதி 44:30 2சாமு 18:3 21ஊசு நாட்டில் வாழும் மகளே! ஏதோம்! அகமகிழ்ந்து அக்களித்திடு! கிண்ணம் உன்னையும் வந்தடையும்! நீ குடிவெறி கொண்டு ஆடையின்றிக் கிடப்பாய்!சங் 83:3-12 சங் 137:7 பிரச 11:9 எசே 25:6 எசே 25:8 எசே 26:2 எசே 35:11-15 ஒபதி 1:10-16 22மகளே! சீயோன்! உன் குற்றப்பழி நீங்கிவிட்டது: உன் அடிமைத்தனம் இனியும் தொடராது: மகளே! ஏதோம்! உன் குற்றத்திற்காக நீ தண்டிக்கப்படுவாய்! உன் பாவங்கள் வெளிப்படுத்தப்படும்!புலம் 4:6 ஏசா 40:2 எரே 46:27 எரே 46:28 எரே 50:20