நீர் வெளியே வரவேண்டாம். ஏனெனில் நாங்கள் புறமுதுகாட்டி ஓடினால், அவர்கள் எங்களைப் பற்றிக் கவலைப்படமட்டார்கள். எங்களுள் பாதிப்போர் மடிந்தாலும் எங்களைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். நீர் ஒருவர் எங்களுள் பத்தாயிரம் பேருக்குச் சமம். தற்போது நீர் எங்களுக்கு நகரிலிருந்தே உதவி செய்வது நல்லது” என்று வீரர்கள் அவரிடம் சொன்னார்கள்.