10
ஏனெனில் ஆழ்ந்த தூக்கம் தரும் ஆவியை ஆண்டவர் உங்கள் மீது அனுப்பியுள்ளார்: இறைவாக்கினராகிய உங்கள் கண்களை மூடியுள்ளார்: திருக்காட்சியாளராகிய உங்கள் பார்வையை மறைத்துள்ளார்.
11
ஆதலால் ஒவ்வொரு காட்சியும் உங்களுக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஏட்டுச்சுருளின் வார்த்தைகள் போலாகும். எழுத்தறிந்த ஒருவரிடம் “இதைப்படியும்” என்றால், அவர் “என்னால் இயலாது: இது மூடி முத்திரையிடப்பட்டுள்ளதே” என்பார்.
12
எழுத்தறியா ஒருவரிடம் ஏட்டுச் சுருளைக் கொடுத்து “இதைப்படியும்” என்றால் அவர் “எனக்குப் படிக்கத் தெரியாதே” என்பார்.