3
உம் மக்களுக்கு எதிராக வஞ்சகமாயச் சதி செய்கின்றார்கள்: உம் பாதுகாப்பில் உள்ளோர்க்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றார்கள்.
4
அவர்கள் கூறுகின்றார்கள்: 'ஓர் இனமாக அவர்களை இல்லாதவாறு ஒழித்திடுவோம்: இஸ்ரயேலின் பெயரை எவரும் நினையாதவாறு செய்திடுவோம்.
5
அவர்கள் ஒருமனப்பட்டுச் சதி செய்கின்றார்கள்: உமக்கு எதிராக உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.
6
ஏதோமின் கூடாரத்தார், இஸ்மயேலர், மோவாபியர், அக்ரியர்,
7
கெபாலியர், அம்மோனியர், அமலேக்கியர், பெலிஸ்தியர் மற்றும் தீர்வாழ் மக்களே அவர்கள்.
8
அவர்களோடு அசீரியரும் சேர்ந்துகொண்டு, லோத்தின் மைந்தருக்கு வலக் கையாய் இருந்தனர்.
9
மிதியானுக்கும், கீசோன் ஆற்றின் அருகே சீசராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போல, அவர்களுக்கும் செய்தருளும்.
10
அவர்கள் ஏந்தோரில் அழிக்கப்பட்டார்கள்: அவர்கள் மண்ணுக்கு உரமானார்கள்.
11
ஓரேபுக்கும் செயேபுக்கும் செய்தது போல் அவர்களின் உயர்குடி மக்களுக்கும் செய்தருளும்! செபாருக்கும் சல்முன்னாவுக்கும் செய்ததுபோல் அவர்களின் தலைவர்களுக்கும் செய்தருளும்.
12
ஏனெனில், 'கடவுளின் மேய்ச்சல் நிலத்தை நமக்கு உரிமையாக்கிக் கொள்வோம்' என்று அவர்கள் கூறினார்கள்.