எரேமியா 37:7-10 - WCV
7
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் அறிவுரையை நாடி உங்களை என்னிடம் அனுப்பிவைத்த யூதா அரசனிடம் நீங்கள் சொல்லவேண்டியது: இதோ, உனக்குத் துணை புரிய வந்துள்ள பார்வோனின் படை தன் சொந்த நாடான எகிப்துக்கே திரும்பிப் போகும்.
8
கல்தேயர் மீண்டும் வந்து இந்நகரைத் தாக்குவர்: அதனைக் கைப்பற்றித் தீக்கிரையாக்குவர்.
9
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கல்தேயர் நம்மை விட்டுத் திரும்பிப் போவது உறுதி என்று சொல்லி உங்களையே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். ஏனெனில் அவர்கள் திரும்பிப் போகவேமாட்டார்கள்.
10
உங்களை எதிர்த்துப் போரிட்டு வரும் கல்தேயரின் படை முழுவதையும் நீங்கள் முறியடித்தாலும், அவர்களுள் தாக்குண்ட வீரர் மட்டுமே தம் கூடாரங்களில் எஞ்சியிருந்தாலும், அவர்களே கிளர்ந்தெழுந்து இந்நகரைத் தீக்கிரையாக்குவர்.