19
தங்கள் வெள்ளியை வீதிகளில் எறிவர்: பொன் அவர்களுக்குத் தீட்டுள்ள பொருள் போல் இருக்கும்: ஆண்டவரது சீற்றம் பொங்கும் அந்நாளில் அவர்களின் வெள்ளியாலும் பொன்னாலும் அவர்களை விடுவிக்க இயலாது: அவர்கள் மனநிறைவு பெறுவதும் இல்லை: அவர்களின் வயிறு நிரம்புவதும் இல்லை: ஏனெனில் அவர்களது குற்றப்பழியே அவர்களுக்கு முட்டுக்கட்டையாக ஆகிவிட்டது.
20
அழகிய அணிகலன்களைப் பகட்டுக்காகப் பயன்படுத்தினர்: அவற்றால் தங்கள் அருவருக்கத்தக்க சிலைகளையும் வெறுக்கத்தக்க பொருள்களையும் செய்துகொண்டனர்: எனவே அவற்றை அவர்களுக்குத் தீட்டான பொருளாக மாறச் செய்தேன்.
21
மேலும் அதை அன்னியர் கையில் கொள்ளைப் பொருளாகவும் உலகின் தீயோர் சூறையாடும் பொருளாகவும் கொடுப்பேன்: அவர்கள் அதைக் கறைப்படுத்துவார்கள்.
22
அவர்கள் செய்வதைக் கண்டுகொள்ள மாட்டேன்: அவர்களும் என் அரும்பொருளைத் தீட்டுப்படுத்துவார்கள்: கள்வரும் அதனுள் நுழைந்து கறைப்படுத்துவர்.