நெகேபிலிருக்கும் காட்டு வெளிக்குச் சொல். ஆண்டவரின் வாக்கைக் கேள். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! நான் உனக்குத் தீ வைப்பேன். அது உன்னிலிருக்கும் எல்லாப் பச்சை மரங்களையும் பட்ட மரங்களையும் எரித்து விடும். கொழுந்து விட்டெரியும் அப்பிழம்பு அணைக்கப்படாது. தென்திசைமுதல் வடதிசைவரை இருக்கும் எல்லா முகங்களும் அதனால் கருகிப் போகும்.