7
அவள் தன்னையே பெருமைப்படுத்தி இன்பம் துய்த்து வாழ்ந்ததற்கு ஏற்ப அவள் வேதனையுற்றுத் துயரடையச் செய்யுங்கள். ஏனெனில், “நான் அரசியாக வீற்றிருக்கிறேன்: நான் கைம்பெண் அல்ல: நான் ஒருபோதும் துயருறேன்” என்று அவள் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாள்.
8
இதன்பொருட்டுச் சாவு, துயரம், பஞ்சம் ஆகிய வாதைகள் ஒரே நாளில் அவள்மீது வந்து விழும்: நெருப்பு அவளைச் சுட்டெரித்துவிடும்: ஏனெனில் அவளுக்குத் தீர்ப்பு வழங்கும் ஆண்டவராகிய கடவுள் வலிமை வாய்ந்தவர்.”
9
அந்நகரோடு பரத்தைமையில் ஈடுபட்டு இன்பம் துய்த்து வாழ்ந்த மண்ணுலக அரசர்கள் அவள் எரியும் போது எழும் புகையைப் பார்த்து அழுது மாரடித்துப் புலம்புவார்கள்.