2
ஏனெனில், உம் அம்புகள் என்னுள் பாய்ந்திருக்கின்றன: உமது கை என்னை அழுத்திக் கொண்டிருக்கின்றது.
3
நீர் கடுஞ்சினங்கொண்டதால் என் உடலில் நலமே இல்லை: என் பாவத்தால் என் எலும்புகளில் வலுவே இல்லை.
4
என் குற்றங்கள் தலைக்குமேல் போய்விட்டன: தாங்கவொண்ணாச் சுமைபோல அவை என்னை வெகுவாய் அழுத்துகின்றன.
5
என் புண்கள் அழுகி நாற்றமெடுக்கின்றன: என் மதிகேடுதான் இதற்கெல்லாம் காரணம்.
6
நான் மிகவும் ஒடுங்கிப்போனேன்: நாளெல்லாம் துயருற்றுத் திரிகின்றேன்.
7
என் குடல் முற்றிலும் வெந்து போயிற்று: என் உடலில் சற்றேனும் நலம் இல்லை.
8
நான் வலுவற்றுப் போனேன்: முற்றிலும் நொறுங்கிப்போனேன்: என் உள்ளக் கொதிப்பினால் கதறுகின்றேன்.