பின்னர் தாவீது இங்கே சவுலின் கையில் ஒருநாள் மடிவது திண்ணம். ஆதலால் பெலிஸ்தியர் நாட்டுக்குச் சென்று தப்பித்துக் கொள்வதைவிட எனக்கு வேறு வழியில்லை: அப்பொழுது தான் இஸ்ரயேலின் எல்லைக்குள் என்னைக் கண்டு பிடிக்கலாமென்ற நம்பிக்கை அற்றுப் போகும்: நானும் அவர் கையிலிருந்து தப்பி விடுவேன் “ என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.