ஆகாய் 1:5-9 - WCV
5
ஆதலால், இப்பொழுது படைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: 'உங்களுக்கு நிகழ்ந்திருப்பதை நினைத்துப் பாருங்கள்.
6
நீங்கள் விதைத்தது மிகுதி, அறுத்ததோ குறைவு. நீங்கள் உண்கிறீர்கள்: ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை. நீங்கள் குடியிருக்கிறீர்கள்: ஆனால் நீங்கள் நிறைவடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள்: ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தான் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான்.
7
உங்களுக்கு நேர்ந்துள்ளதை நினைத்துப் பாருங்கள்' என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர்.
8
'எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள்: என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்: அது எனக்கு உகந்ததாய் இருக்கும்: அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்' என்று சொல்கிறார் ஆண்டவர். மிகுதியான அறுவடைக்காகக் காத்திருந்தீர்கள்.
9
ஆனால் கிடைத்தது சிறிதளவே. நீங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தபோது அதையும் நான் ஊதித் தள்ளிவிட்டேன். ஏன்? ஏனெனில், எனது இல்லம் பாழடைந்து கிடக்கும் போது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டைக் கட்டுவதிலேயே கருத்தாய் இருக்கிறீர்கள்.