ஏசாயா 51:17-22 - WCV
17
விழித்தெழு, விழித்தெழு, ஆண்டவர் கையினின்று, சினக் கிண்ணத்தைக் குடித்தவளே, மதியை மயக்கும் அக்கிண்ணத்தை அடிமண்டிவரை குடித்தவளே, எருசலேமே, எழுந்து நில்.
18
அவள் பெற்றெடுத்த புதல்வருள் அவளுக்கு வழிகாட்டுவார் எவருமில்லை: அவள் வளர்த்துவிட்ட ஆண் மக்களுள் அவளுக்குக் கைகொடுப்பார் யாருமில்லை!
19
இருவகைத் தீங்குகள் உனக்கு நேரிட்டன, உனக்காகப் புலம்பியழுபவன் எவன்? வீழ்ச்சி-அழிவு, பஞ்சம்-வாள் இவை உன்னை வாட்டின: யார் உன்னைத் தேற்றுவார்?
20
உன் பிள்ளைகள் மயக்கமுற்றனர்: வலையில் சிக்கிய கலைமான் போல் அவர்கள் ஒவ்வொரு தெருமுனையிலும் வீழ்ந்துகிடக்கின்றனர்: ஆண்டவரின் சினத்திற்கும் உன் கடவுளின் கண்டிப்புக்கும் உள்ளாயினர்.
21
ஆதலால், சிறுமையுற்றவளே, திராட்சை இரசம் இன்றியே குடிவெறி கொண்டவளே, இதைக் கேள்.
22
தம் மக்கள் சார்பாக வழக்காடும் உன் கடவுளாகிய ஆண்டவர், உன் தலைவர் கூறுவது இதுவே: “இதோ, உன்னை மதிமயக்கும் கிண்ணத்தை உன் கையினின்றும் அகற்றிவிட்டேன்: என் சினக் கிண்ணத்தினின்று நீ இனிக் குடிக்கவேமாட்டாய்.”