13
எம் தீச்செயல்களினாலும் எமது பெரும் பாவத்தினாலுமே இவையெல்லாம் எங்கள்மீது வந்தன. ஆனால் எங்கள் கடவுளாகிய நீர் எங்கள் குற்றத்திற்கு ஈடாக தண்டியாமல் எங்களை எஞ்சியிருக்கச் செய்தீர்.
14
நாங்கள் மீண்டும் உமது கட்டளைகளை மீறுவோமா? இவ்வாறு வெறுப்பானவைகளைச் செய்கின்ற மக்களோடு இனி கலப்பு மணம் செய்து கொள்வோமா? அப்படிச் செய்தால், எஞ்சியுள்ள எங்களுள் எவரும் இல்லாதபடி, யாரும் தப்பாதபடி, நீர் எம்மை அழிக்கும்வரை எம்மீது சினம் கொள்வீர் அன்றோ?
15
இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! நீர் நீதியுள்ளவர். ஏனெனில், இன்று நாங்களே எஞ்சியுள்ளோராய் விடப்பட்டிருக்கிறோம். இதோ நாங்கள் உம்முன் குற்றவாளிகளாய் இருக்கிறோம். இதனால் எங்களில் யாரும் உம்முன் நிற்க இயலாது.”