சங்கீதம் 106:43-45 - WCV
43
பன்முறை அவர் அவர்களை விடுவித்தார்: அவர்களோ திட்டமிட்டே அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்: தங்கள் தீச்செயல்களினால் அவர்கள் தாழ்நிலை அடைந்தனர்.
44
எனினும் அவர் அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து, அவர்களது துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார்.
45
அவர்களுக்கு உதவுமாறு, அவர் தமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்: தமது பேரன்பிற்கேற்பக் கழிவிரக்கம் கொண்டார்: