14
நான் பிறந்த நாள் சபிக்கப்படட்டும்: என் அன்னை என்னைப் பெற்றெடுத்த நாள் ஆசி பெறாதிருக்கட்டும்.
15
“உனக்கோர் ஆண் குழந்தை பிறந்துள்ளது” என்ற செய்தியை என் தந்தையிடம் சொல்லி அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய அந்த மனிதன் சபிக்கப்படுக!
16
அவன், ஆண்டவர் இரக்கமின்றி வீழ்த்திய நகர்களுக்கு ஒப்பாகட்டும். அவன் காதில் காலையில் அழுகைக் குரலும் நண்பகலில் போர் இரைச்சலும் ஒலிக்கட்டும்!
17
தாய் வயிற்றில் நான் இருந்தபோதே, அவள் ஏன் என்னைக் கொல்லவில்லை? என் தாயே எனக்குக் கல்லறையாய் இருந்திருப்பாளே! அவள் கருவறையிலேயே என்றும் இருந்திருப்பேனே!
18
கருவறைவிட்டு ஏன்தான் வெளிவந்தேன்? துன்ப துயரத்தை அனுபவிக்கவும் என் வாழ்நாள்களை வெட்கத்தில் கழிக்கவும்தான் வந்தேனோ?