18
ஆண்டவரின் நாளைப் பார்க்க விரும்புவோரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஆண்டவரின் நாளுக்காக நீங்கள் ஏங்குவது ஏன்? அது ஒளிமிக்க நாளன்று: இருள் சூழந்த நாளாகத் தான் இருக்கும்.
19
அந்த நாள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடிய ஒருவனைக் கரடி ஒன்று எதிர்கொண்டாற்போலும், அவன் தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து, சுவரில் கைவைத்துச் சாய்ந்த போது, பாம்பு ஒன்று கடித்தாற்போலும் இருக்கும்!
20
ஆண்டவரின் நாள் ஒளியின் நாள் அன்று: அது இருள் கவிந்தது அல்லவா? வெளிச்சமில்லாத காரிருள் அல்லவா?