யோனா 2:3-5 - WCV
3
நடுக் கடலின் ஆழத்திற்குள் என்னைத் தள்ளினீர்: தண்ணீர்ப் பெருக்கு என்னைச் சூழந்துகொண்டது. நீர் அனுப்பிய அலை திரை எல்லாம் என்மீது புரண்டு கடந்து சென்றன.
4
அப்பொழுது நான், “உமது முன்னிலையிலிருந்து இனி எவ்வாறு உமது கோவிலைப் பார்க்கப் போகிறேன்” என்று சொல்லிக்கொண்டேன்.
5
மூச்சுத் திணறும்படி தண்ணீர் என்னை அழுத்திற்று: ஆழ்கடல் என்னைச் சூழ்ந்தது: கடற்பாசி என் தலையைச் சுற்றிக் கொண்டது.