3
என் மனம் சோர்வுற்றிருந்தது: நான் செல்லும் வழியை அவர் அறிந்தேயிருக்கின்றார்: நான் செல்லும் வழியில் அவர்கள் எனக்குக் கண்ணி வைத்துள்ளார்கள்.
4
வலப்புறம் கவனித்துப் பார்க்கின்றேன்: என்னைக் கவனிப்பார் எவருமிலர்: எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று: என் நலத்தில் அக்கறை கொள்வார் எவருமிலர்.
5
ஆண்டவரே! உம்மை நோக்கிக் கதறுகின்றேன்: 'நீரே என் அடைக்கலம்: உயிர் வாழ்வோர் நாட்டில் நீரே என் பங்கு'.
6
என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்: ஏனெனில், நான் மிகவும் தாழ்த்தப்பட்டுள்ளேன்: என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்: ஏனெனில், அவர்கள் என்னைவிட வலிமைமிக்கோர்.
7
சிறையினின்று என்னை விடுவித்தருளும்: உமது பெயருக்கு நான் நன்றி செலுத்துவேன்: நீதிமான்கள் என்னைச் சூழ்ந்து நிற்பார்கள்: ஏனெனில், நீர் எனக்குப் பெரும் நன்மை செய்கின்றீர்.