சங்கீதம் 69:13-18 - WCV
13
ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்: துணை செய்வதில் நீர் மாறாதவர்.
14
சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து என்னைக் காத்தருளும்: என்னை வெறுப்போரிடமிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் என்னை விடுவித்தருளும்.
15
பெருவெள்ளம் என்னை அடித்துக் கொண்டு போகாதிருப்பதாக! ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக! படுகுழி தன்வாய் திறந்து என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக!
16
ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்: உம் பேரன்பு நன்மை மிக்கது: உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும்.
17
உமது முகத்தை அடியேனக்கு மறைக்காதேயும்: நான் நெருக்கடியான நிலையிலிருக்கிறேன்: என் மன்றாட்டுக்கு விரைவில் பதில்மொழி தாரும்.
18
என்னை நெருங்கி, என்னை விடுவித்தருளும்: என் எதிரிகளிடமிருந்து என்னை மீட்டருளும்.