16
ஆனால், எம் தலைவரே! உம்முடைய நீதிச் செயல்களுக்கேற்ப உமது நகரமும் உமது திருமலையுமாகிய எருசலேமைவிட்டு உம் சினமும் சீற்றமும் விலகுவதாக! ஏனெனில் எங்கள் பாவங்கள் தந்தையரின் கொடிய செயல்களில் காரணமாக, எருசலேமும் உம் மக்களும் எங்களைச் சுற்றி வாழும் மக்களிடையே நிந்தைப் பொருளாக மாறிவிட்டனர்.
17
ஆகையால், எங்கள் கடவுளே! இப்பொழுது உம் அடியானின் வேண்டுதலையும் விண்ணப்பங்களையும் ஏற்றுக்கொள்ளும். பாழாய்க் கிடக்கிற உமது தூயகத்தின்மீது தலைவராகிய உம்மை முன்னிட்டே உமது முகத்தை ஒளிரச் செய்வீராக!
18
என் கடவுளே! செவி சாய்த்துக் கேட்டருளும்: உம் கண்களைத் திறந்து எங்கள் பாழிடங்களையும் உமது பெயர் தாங்கிய நகரையும் நோக்கியருளும். நாங்கள், எங்கள் நேர்மையை நம்பாமல், உமது பேரிரக்கத்தையே நம்பி, எங்கள் மன்றாட்டுகளை உமது முன்னிலையில் சமர்ப்பிக்கிறோம்.
19
என் தலைவரே! கேளும்: என் தலைவரே! செவிகொடுத்துச் செயலாற்றும்: என் கடவுளே! உம்மை முன்னிட்டுக் காலம் தாழ்த்தாதேயும்: ஏனெனில் உமது நகரமும் உம் மக்களும் உமது பெயரையே தாங்கியுள்ளனர்.”