முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

பாடல் பிறந்த கதை

1. நான் தூதனாக வேண்டும்
விண் தூதரோடேயும்;
பொற்கிரீடம் தலைமேலும்
நல் வீணை கையிலும்
நான் வைத்துப் பேரானந்தம்
அடைந்து வாழுவேன்;
என் மீட்பரின் சமுகம்
நான் கண்டு களிப்பேன்.
 
2. அப்போது சோர்வதில்லை,
கண்ணீரும் சொரியேன்;
நோய், துக்கம், பாவம், தொல்லை
பயமும் அறியேன்;
மாசற்ற சுத்தத்தோடும்
விண் வீட்டில் தங்குவேன்;
துதிக்கும் தூதரோடும்
நான் என்றும் பாடுவேன்.
 
3. பிரகாசமுள்ள தூதர்
நான் சாகும் நேரத்தில்
என்னைச் சுமந்து போவார்
என் இயேசுவண்டையில்;
நான் பாவியாயிருந்தும்
என் மீட்பர் மன்னித்தார்;
எண்ணில்லாச் சிறியோரும்
என்னோடு வாழுவார்.
 
4. மேலான தூதரோடும்
நான் தூதன் ஆகுவேன்;
பொற்கிரீடம் தலை மேலும்
தரித்து வாழுவேன்;
என் மீட்பர்முன் ஆனந்தம்
நான் பெற்று வாழ்வதே
வாக்குக் கெட்டாத இன்பம்
அநந்த பாக்கியமே.

''அக்கா ! நானும் ஆண்டவருக்குப் பணிசெய்யும் தூதனாக மாற வேண்டும்!'' 

என உற்சாகத்துடன் கூச்சலிட்டாள் ஒரு அழகிய சிறுபெண்.  ஞாயிறு பள்ளியின் வகுப்பு நேரத்தில், தேவ தூதர்களைப் பற்றி, வேதபாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஆசிரியை, சிட்னி ட. ஜில், மகிழ்வுடன் சத்தமிட்ட மாணவியைப் பார்த்துப் புன்னகை செய்தாள்.  அவள் அமெரிக்காவின் பிலடெல்பியாவிலுள்ள, டாக்டர் ஜோயல் பார்க்கர்  ஆலய ஞாயிறு பள்ளி ஆசிரியையாக, உத்தமமாய் ஊழியம் செய்து வந்தாள்.

சில நாட்கள் சென்றபின், தேவதூதனாக மாற விரும்பிய அச்சிறுமி, வியாதிப்பட்டு மரித்துப்போனாள்.  இதைச் சற்றும் எதிர்பாராத சிட்னியின் உள்ளத்தில், அன்று அந்த மாணவி உற்சாகமாய்க் கூறிய வார்த்தைகள், மறக்கமுடியாமல் தொனித்துக் கொண்டேயிருந்தன.  அச்சிறுமியின் வாஞ்சை, சிட்னியின் உள்ளத்தில் பாடலாக உருவெடுத்தது.

இப்பாடலைத் தன் ஞாயிறுபள்ளிப் பிள்ளைகள் பாடுவதற்கென்றே, சிட்னி எழுதினாள்.  ஆனால், நாளடைவில், பெரியவர்களும் கூட விரும்பிப் பாடும் பாடலாக அது மாறியது.  பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பல நாடுகளில் இன்றும் இப்பாடல் பாடப்பட்டு வருகிறது.

கட்டுரைகள்
More articles ...
More articles ...
More articles ...
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
ஜூலை 24, 2026
வியாதி என்ற முக்கியமான விஷயத்தைப் பற்றி நாம் இப்போது சிந்திக்கப்போகிறோம். இதிலிருந்து யாராலும்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்படும் சர்தை சபையானது, வெளியில் உயிரோடிருப்பதாகப் பெயர்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
சார்லஸ் ஸ்பர்ஜன் அவர்கள், சங்கீதம் 110:3-ஐ அடிப்படையாகக் கொண்டு முழங்கிய இந்த உன்னதமான பிரசங்கம்,...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
சுவிசேஷப் பணி என்பது மனிதத் திட்டங்களாலோ அல்லது நிறுவனங்களின் பலத்தினாலோ நடைபெறுவது அல்ல; அது...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
நாம் எவ்வளவு பிரயாசப்பட்டாவது பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய காரியம் இது. இந்தப்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
மே 09, 2026
இன்று அநேக பெற்றோர்கள் குழந்தைகளின் மீது மிகவும் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத்...

தெடர்ந்து வாசிக்க ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.