இரட்சிப்பு

ஆசிரியர்: A.W. பிங்க்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 11 நிமிடங்கள்

நாம் பெற்றுக்கொண்ட இரட்சிப்பை வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்கலாம், மேலும் வெவ்வேறு விதங்களாகப் பிரித்து சிந்திக்கலாம். ஆனால் நாம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், "இரட்சிப்பு கர்த்தருடையதே" தொடர்ந்து வாசிக்க...

 

The experience of salvation

     நாம் பெற்றுக்கொண்ட இரட்சிப்பை வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்கலாம், மேலும் வெவ்வேறு விதங்களாகப் பிரித்து சிந்திக்கலாம். ஆனால் நாம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், "இரட்சிப்பு கர்த்தருடையதே" என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ளவேண்டும். உலக தோற்றத்துக்கு முன்பே தேவன் முன்குறிக்கப் பட்டவர்களுக்காகவே இந்த இரட்சிப்பை ஏற்ப்படுத்தினார். மனிதரூபமாய் இந்த பூமிக்கு வந்து பாவமில்லாத பரிசுத்த வாழ்கையை வாழ்ந்து, முன்குறிக்கப் பட்டவர்களுக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்தெழுந்த, அவருடைய நேசகுமாரன் மூலமாக இந்த இரட்சிப்பை ஏற்ப்படுத்தினார். அப்படிப்பட்ட இரட்சிப்பை முன்குறிக்கப் பட்டவர்கள் பெற்றுக்வதற்கு பரிசுத்த ஆவியானவர் செயல்படுகிறார். அவர்கள் வேதவாக்கியங்களைப் படிப்பதன் மூலம் உணரப்பட்டு, விசுவாசத்தினால் அந்த இரட்சிப்பு நடைமுறைப் படுத்தப்படுகிறது, மேலும் திரித்துவ தேவனுடன் உறவு கொள்வதன் மூலம் நித்திய மகிழ்ச்சியை பெறுகிறார்கள்.

இங்கு நாம் பயப்பட வேண்டிய காரியம் என்னவென்றால், இன்றைய கிறிஸ்தவ உலகில் பலர் தாங்கள் இரட்சிக்கப் பட்டிருக்கிறோம் என்று மனபுர்வமாக நம்புகிறார்கள், ஆனால் உண்மையாகவே அவர்கள் தேவனின் கிருபைக்கு முற்றிலும் புறம்பாகவே இருக்கிறார்கள். தேவனைக் குறித்து சொல்லப்பட்ட சத்தியத்திற்கு தெளிவான அறிவார்ந்த புரிதல் ஒரு விஷயமென்றால், அந்த சத்தியத்தைப் பற்றிய தனிப்பட்ட அனுபவத்தைப் பெறுவது மற்றொரு விஷயம். பாவம் எவ்வளவு கொடிதானது என்று தேவனுடைய வசனம் சொல்லுகிறதை நம்புவது ஒரு விஷயமென்றால், உள்ளுக்குள் அதை குறித்த பரிசுத்தமான பயமும், வெறுப்பும் இருப்பது மற்றொரு விஷயம். தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது மனந்திரும்புதல் மட்டுமே என்று நம்புவது ஒரு விஷயமென்றால், நாம் பாவத்திற்காக உண்மையாகவே துக்கப்படுவதும், புலம்புவதும் மற்றோரு விஷயம். பாவிகளின் மீட்பர் இயேசுகிறிஸ்து ஒருவர் மட்டுமே என்று நம்புவது ஒரு விஷயமென்றால் அவரை முழு மனதுடன் விசுவாசிப்பது மற்றொரு விஷயம்.

இயேசுகிறிஸ்து உன்னதமானவர் என்று நம்புவது ஒரு விஷயமென்றால், மற்ற எல்லாரையும் காட்டிலும் அவரை அதிகமாக நேசிப்பது மற்றொரு விஷயம். கர்த்தர் பெரியவர், பரிசுத்தர் என்று நம்புவது ஒரு விஷயமென்றால், தேவனிடம் பயபக்தியோடு இருப்பது மற்றொரு விஷயம். இரட்சிப்பு கர்த்தருடையதே என்று நம்புவது ஒரு விஷயமென்றால், அவருடைய கிருபையான செயல்களின் மூலம் அந்த இரட்சிப்பில் நாம் பங்கு கொள்வது மற்றொரு விஷயம், பரிசுத்த வேதத்தில் மனிதனின் பொறுப்பை வலியுறுத்துவது எவ்வளவு உண்மையோ! வேதம் முழுவதிலும் உள்ள பாவிகளுடன் கணக்குக் கேட்பவராகவே இருந்தாரென்பது எவ்வளவு உண்மையோ, ஆதாமின் தலைமுறையினர் அனைவரும் தங்கள் பொறுப்பையும், கடமையையும் நிறைவேற்றத் தவறிவிட்டனர். என்று தேவனுடைய வார்த்தை மீண்டும் மீண்டும் சொல்லுவதும், மற்றும் எல்லோரும் பொறுப்போடு இல்லத்தினால் பாவத்தில் வீழ்ந்தார்கள் என்று சொல்லுவதும் மிக முக்கியம். எனவே ஒரு பாவி தனக்கு தானே செய்துகொள்ள முடியாது என்பதால், மனிதனுக்கு தேவனுடைய அவசியம் தேவை ஏற்படுகிறது. "மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள" (ரோமர். 8:8), நாம் பெலனற்றவர்களாய் இருக்கிறோம். (ரோமர். 5:6), எனனையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. (யோவான் 15:5)

சுவிசேஷத்தை கேட்கும் அனைவருக்கும் அந்த வசனம் ஒரு அழைப்பையும், கட்டளையையும் வெளிப்படுத்துவது உண்மையாக இருந்தாலும், அனைவரும் அந்த சுவிசேஷ அழைப்பைப் புறக்கணித்து தேவனுடைய கட்டளையை மீறுகிறார்கள் என்பதும் "அவர்களெல்லோரும் போக்குச்சொல்ல்த் (பொய் சொல்ல) தொடங்கினார்கள்." (லூக்கா 14:18) தேவன் ஒரு பாவியின் தேவைகளை அறிந்து அவனுக்கு ஏற்ற ஒரு இரட்சகரை கொடுத்தாலும், அந்த பாவி  மிகவும் கோரமான பாவத்தையே செய்கிறான். “அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்” (ஏசாயா 53:3). பாவியாய் இருக்கிற மனிதன் தன்னை ஒருபோதும் திருத்த முடியாத முரடனைப்போல் இருந்து, நித்திய நரகத்திற்கு தகுதியானவன் என்று நிரூபிக்கிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தேவன் தன்னுடைய பண்புமிக்க இறையாண்மையை வெளிப்படுத்துகிறார். தேவன் தாம் முன்குறிக்கப் பட்டவர்களுக்கு இரட்சிப்பை ஏற்ப்படுத்தியது மட்டுமல்லாமல், தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இரட்சிப்பை தேவனே அவர்களுக்கு அதை கொடுக்கிறார்.

இவ்விதமாக இரட்சிப்பு வழங்கப் படுவதென்றால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் இரட்சிப்பு இருக்கிறது என்று பகிரங்கமாக அறிவிப்பது மட்டுமல்ல; கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக விசுவாசிக்க பாவிகளுக்கு இது ஒரு அழைப்பல்ல. தேவன் தம்முடைய மக்களை உண்மையாகவே இரட்சிப்பதற்க்கு, எந்தவித தகுதியும் இல்லாத, ஒரு அடிக்கூட எடுத்து வைக்காத, மற்றும் எடுத்து வைக்க முடியாத மனிதனின் வீழ்ச்சியடைந்த நிலையை அறிந்த தேவன், அவர்களை இரட்சித்தது அவருடைய கருணையுள்ள கிருபையின் வெளிப்பாடாகும். உண்மையாகவே இரட்சிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய கற்பனைக்கும் அதிகமாக தேவனுடைய கிருபைக்கு கடனாளிகளாக இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து அவர்களின் பாவங்களுக்கு பரிகாரமாக மாரித்தார் என்பதற்காக மட்டுமல்ல, அந்த இரட்சிப்பை அவர்களுடைய வாழ்வில் நிகழ்த்திய பரிசுத்த ஆவியானவரின் செயலுக்காகவும் அவர்கள் தேவனுக்கு கடமைப்பட்தவர்களாக இருக்கிறார்கள். சரியாக சொன்னால் பல போதகர்கள் இந்த மென்மையான சத்தியத்தை சொல்வதற்கு தவறிய இடம் இதுதான்.

இயேசுகிறிஸ்து மட்டுமே! பாவிகளின் மெய்யான மீட்பர் என்று அவர்களில் பலர் சரியாக போதித்தாலும், நாம் நமக்குள் இடமாளித்ததால் தான் ஆதாவது நாம் ஏற்றுக்கொண்டதால் மட்டுமே, இயேசுகிறிஸ்து நம்முடைய இரட்சகராக மாறுகிறார் என்று அவர்கள் கற்பிக்கிறார்கள். மேலும் மனிதனின் சம்மதத்தால் மட்டுமே! இரட்சிப்பு என்று அவர்களுக்கு போதிக்கிறார்கள், அதே சமயம் பாவத்தைக் ஒத்துகொள்ள வைப்பது பரிசுத்த ஆவியானவரின் செயல் என்றும், அவர் மட்டுமே நமது இழந்த நிலையைப் பற்றியும், கிறிஸ்து நமக்கு எவ்வளவு தேவை என்பத்தை பற்றியும் நமக்குத் தெரிவித்துக் கொண்டே, இரட்சிப்பில் மனிதனுடைய பங்காளிப்பு உண்டு என்றும் சொல்கிறார்கள்.  ஆனால், “இரட்சிப்பு கர்த்தருடையதே” (சங்கீதம் 3:8) என்று பரிசுத்த வேதம் நமக்குக் கற்பிக்கிறது. தேவனிடமிருந்து தோன்றியதைத் தவிர வேறு எதுவும் தேவனுக்குப் பிரியமானதல்ல. ”ஒரு பாவி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன் இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிப்பு என்பது தனிப்பட்ட முறையில் அந்த பாவிக்குக் கொடுக்கப்படுகிறது” என்பது உண்மைதான். ஆனால் பரிசுத்த ஆவியானவரே இரட்சிப்புக்கு ஏற்ற விசுவாசத்தை அவனிடத்தில் உருவாக்குகிறார். “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;” (எபேசியர் 2:8).

இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால், பாவ சுபாவம் கொண்ட மனிதன் கிறிஸ்துவில் "விசுவாசம்" வைக்கிறான், ஆனால் அது இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அல்ல. அது எப்படிப்பட்ட விசுவாசமென்றால் பௌத்தர்கள் புத்தரை எப்படி நம்புகிறார்களோ அப்படியே, கிறிஸ்தவ உலகில் கூட பலர் கிறிஸ்துவை நம்புகிறார்கள். மேலும், அப்படிப்பட்ட "விசுவாசம்" அறிவுசர்ந்தது அல்ல. அந்த "விசுவாசம்" அடிக்கடி கவனத்தையும், மற்றும் உணர்ச்சிகளையும் ஈர்க்கும் படியாக மட்டும் இருக்கிறது. விதைப்பவனின் உவமையில் நாம் பார்க்கிறோம், "ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்;" (மத்தேயு 13:21) என்று கர்த்தர் கூறினார்.

இது இன்றும் தொடருகிற நிதரசமான உண்மை. ஏரோது மன்னன் யோவானின் வார்த்தைகளை "மகிழ்ச்சியுடன் கேட்டான்" என்று வேதம் கூறுகிறது. எனவே, பிரியமான வாசகரே! ஒரு நபர் தலைச்சிறந்த சுவிசேஷகரின் போதனைகளைக் கேட்பதால், மட்டும் அந்த நபர் மறுபிறப்பு அடைந்தவர் என்று பொருளல்ல, யோவான் ஸ்நானகன் பரிசேயர்களிடம், "சிறிது காலம் நீங்கள் அவருடைய ஒளியை அனுபவிக்க விரும்பினீர்கள்" என்று அவர் சொன்னார், ஆனால் அவர்களில் கிருபையின் செயல்பாடு ஒன்றுமில்லை என்பதை நாம் தெளிவாகக் காண்கிறோம். ஆனால், மேற்வாசித்த அனைத்தும் பரிசுத்த வேதத்தில் உறுதியுடனும் நம்முடைய எச்சரிக்கையாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்கூறிய இரண்டு வேதவசன பகுதிகளை பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. மாற்கு 6:20-ம் வசனத்தில் யோவானிடம் பேசும்போது தனிப்பட்ட பெயரை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதைக் கவனியுங்கள், “அதேனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான்” இந்த வசனப்பகுதில் ஏரோது “யோவானுக்கு பயந்து” என்று உள்ளதே தவிர, தேவனுக்கு பயந்தாவனாக இல்லை. மேலும், யோவானுடைய வார்த்தைகளைக் கேட்டதும், என்ன செய்வது என்று தெரியாமல் மகிழ்ச்சியுடன் கேட்டான்". யோவானின் தனிப்பட்ட குணம் ஏரோதை ஈர்த்தது. இன்றைய நாட்களில் இது எவ்வளவு உண்மையாக உள்ளது. போதகனின் தனிப்பட்ட ஆளுமையாயாலும், நடை, உடை, பாவனை ஆகியவைகளால் மக்கள் மிகவும் ஈர்க்கப் படுகிறார்கள். மற்றும் ஆத்துமாக்களை ஆதயாப்படுத்தும் காரியத்தில் அவரது சுய நேர்மையால் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால், இதற்கு மேல் அவர்களை சொல்வதற்கு எதுவும் இல்லை, அவர்கள் எல்லோரும் ஒரு நாள் தூக்கத்திலிருந்து திடீரென விழித்தெழும் நாள் வரும்.

சத்திய வசனத்தை போதிக்கும் போதகர்களை நேசிப்பது அல்ல, சத்தியத்தை நேசிப்பது தான் முக்கியம். இந்த வித்தியாசம் மட்டும் தான் உண்மையான தேவ மக்களுக்கும், நவீன போதகர்களுடன் எப்போதும் பழகும் “கலப்புக் கொண்ட புறஜாதிகளுக்கும்” உள்ள தனித்துவமான வித்தியாசம் இதுதான். யோவான் 5:35-ல், யோவான் ஸ்நானகனை குறித்து இயேசுகிறிஸ்து பரிசேயர்களிடம் இவ்விதமாக சொன்னார்; “நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்திங்கள்” "உண்மையான ஒளியில்" அல்ல "அவனுடைய ஒளியில்" அதேபோல், தான் இன்றைய நாட்களிலும் பலர் தேவனுடைய வார்த்தையின் இரகசியங்களையும், அற்புதங்களையும் தெளிவாக விளக்கும் திறமையுள்ள பிரசங்கிமார்கள் பலர் இருளில் இருந்தாலும், அவர்களையே மக்கள் பின்தொடருகிரார்கள். இதற்கு கரணம் "அவருடைய ஒளி" அவர்கள் தனிப்பட்ட முறையில் "தேவனால் அபிஷேகம் செய்யப்படவில்லை" நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள். (1யோவான் 2:20) சத்தியத்தை விசுவாசிப்பவர்கள் யாரென்றால் தேவனுடைய கிருபையை பெற்றவர்களே! (2தெசலோனிக்கேயர் 2:11) “ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப் படும்படிக்கு,” அவர்கள் அடைவது வேத வசனத்தின் படியானது அல்ல, (எரேமியா 15:16) “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது;” அவர்கள் வேதத்தைப் விரும்புகிறவர்கள் எனவே சத்தியமாக இல்லாததை ஒரு கொடிய விஷமாக வெறுபார்கள். வேத வசனத்தை அருளிய அவரை தேடுகிறவர்கள், வசனத்தை போதிக்கும் போதகனை மேன்மையாக எண்ணமாட்டர்கள். தன்னுடைய எதிர்கால நிலையை அவர்களே வசனத்தினால் சரிசெய்துக் கொள்வதால் மனிதனுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். “கர்த்தாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே.” (ஏசாயா 26:12). உண்மையான தேவனுடைய மக்களான நேர்மையானவர்களின் வாக்குமூலம் இங்கே காணப்படுகிறது. "எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே” இந்த வசனத்தை கவனியுங்கள். இது ஒரு உண்மையான ஒரு விசுவாசியின் இருதயத்தில் தேவ கிருபையின் செயல்ப்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்த சத்தியத்தை வெளிபடுத்தும் ஒரு வேதவசன பகுதி மட்டுமல்ல. பின்வரும் வசனத்தை கவனமாக சிந்தியுங்கள்! "அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது" (கலாத்தியர் 1:15, 16), "நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, (எபேசியர் 3:20) “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி," (பிலிப்பியர் 1:4), " ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்." (பிலிப்பியர்). 2:13). என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். (எபிரேயர் 10:16) “சமாதானத்தின் தேவன், இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படி செய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; (எபிரேயர் 16:20,21) தேவனுடைய கிருபை எவ்வாறு செயல்படுகிறதை மேல் குறிப்பிட்ட ஏழு வசனங்கள் நமக்கு தெளிவாக்குகிறது. வேறுவிதமாகக் சொன்னால், அவை இரட்சிப்பின் அனுபவத்தை தெரியப்படுத்துக்கின்றன.

"கர்த்தாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே." (ஏசாயா 26:12). பிரியமான வாசகரே! இந்த வார்த்தைகளுக்கு உன் இருததத்தில் எவ்விதமான பதில் இருகிறது. உன்னுடைய மந்திரும்புதல் கண்ணீருடன் உள்ளதா? அல்லது உண்மையான துக்கமா? அதனுடைய தொடக்கம் பரிசுத்த ஆவியானவர் உன் உள்ளத்தில் உண்டாக்கிய தேவ கிருபையா? கிறிஸ்துவின் மீதுள்ள உனது நம்பிக்கை அறிவுபுர்வமனதா? உன்னோடு அவருக்கு ஏற்ப்பட்ட உறவு அவரால் கிடைத்த நன்மையின் அடிப்படையில் உண்டானதா? அல்லது பரிசுத்த ஆவியானவரின் செயல்பாட்டினால் கிடைத்ததா? கிறிஸ்துவின் மீதுள்ள உனது அன்பு எப்படிபட்டது? தேவன் உன்னில் புதிதாக பிறந்த இருதயம் உனக்கு உண்டா? பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.” என்று சங்கீதகரனோடு சேர்ந்து நீ சொல்ல முடியுமா? (சங்கீதம் 73:25). நீ செய்கிற பணி உண்மையாகவே அமைதலோடும், தாழ்மையோடும் உள்ளதா? நான் ஒரு அயோக்கியன், எதற்கும் உதவாதவன் என்று உன்னை நீயே அழைத்துக்கொள்வது  மிக சுலபமானது தான். நீ அப்படிப்பட்டவன் என்ற உணர்வு உனக்கு உள்ளதா? அப்போஸ்தலனாகிய பவுல் அவ்விதம் சொன்னார். “பாவிகளில் பிரதான பாவி நான்” (1திமோத்தேயு  1:5) மேலும், அப்படிப்பட்ட சிந்தை உன்னில் இல்லை என்றாலும், வேறு யாராவது தங்கள் பாவங்களை முறையிட்டு, தங்கள் பலவீனங்களை தேவனிடம் ஒப்புக்கொண்டு, "ஐயோ, நான் நிர்ப்பந்தமான மனுஷன் நான்!" (ரோமர் 7:24) என்று புலம்பும் கிறிஸ்தவர்ககள் மத்தியில் நான் எல்லாரையும் காட்டிலும் உயர்ந்தவன் என்று சொன்னால், எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி தேவனுக்கு அந்நியனாக இருக்கிராய் என்பதை மறந்து விடாதே! உண்மையான தேவபக்திக்கும், மனிதனால் உண்டான மதத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான்: ஒன்று புறம்பானது, மற்றொன்று உள்ளானது. இயேசுகிறிஸ்து பரிசேயர்களிடம் இவ்விதம் சொன்னார். “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது." (மத்தேயு 23:25). உலக பிரகாரமான மதம் என்பது சடங்குகளைப் பின்பற்றுவதாகும். தேவன் இருதயத்தை பார்க்கிறவர் இருதயத்தையே பரிசோதிக்கிறார். தம்முடைய மக்களை நோக்கி தேவன் இவ்விதமாக சொல்கிறார்: "நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன்." (எபிரேயர் 10:16) என்று கூறினார்.

"கர்த்தாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே.” (ஏசாயா 26:12) மனிதனின் ஆணவத்தை அவமானபடுத்தக் கூடிய வார்த்தை இது. மனிதனுக்கு தேவையான அனைத்தும் நானே பார்த்துக்கொள்ளுவன் என்ற ஆணவம் உலககெங்கும் உள்ள மனிதனிடத்தில் உள்ளது. லவோதிக்கேயா சபையார் சொல்லுவது: “நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; (வெளிப்படுத்துதல் 3:17) இந்த வசனத்தில் நம்மை தாழ்மைப்படுத்தி  நம்முடைய பெருமையைகளை அடக்கும் காரியம் ஒன்று உண்டு. தேவன் நம் சார்பாக இருந்து நம்முடைய எல்லா பணிகளையும் செய்துள்ளார், எனவே நம்மை நாம் பெருமை பாராட்டிக் கொள்வத்திற்கு ஒன்றிமில்லை. “அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன் போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?” (1 கொரிந்தியர் 4:7) இந்த வசனத்தின்படி பார்த்தால் தேவன் யாரைக்கொண்டு தன்னுடைய பணிகளை செய்கிறார்? தேவனுடைய கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர் முன் குறிக்கப்பட்ட, அல்லது மீட்கப்பட்ட மக்கள்; ஆனால் மனிதக் கண்ணோட்டத்தில், பார்த்தால் அவர்கள் தேவனை ஒருப்போதும் கண்நோக்காதவர்கள் அயோக்கியர்கள் மேலும்,  தேவனுடைய பரிசுத்த கோபத்தை தூண்துவதற்கு கூட தயங்கவில்லை; தங்களுடைய வாழ்வில் படுதோல்வி அடைந்தவர்கள்; துன்மார்க்கமான மற்றும் ஒழுக்கக்கேடான செயல்களைக் கொண்டுள்ளனர். ஆனால், பாவம் பெருகிய இடத்தில், கிருபையும் அதிகமாக பெருகி, அவர்களால் செய்ய முடியாததையும் செய்யும்படி செய்ததது. ஆனால், தேவன் தம் மக்களின் எல்லா வேலைகளையும் அவரே நடப்பிக்கிறார்.

முதலில், தேவன் அவர்களை உயிர்ப்பிக்கிறார்; “மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது’ (யோவான் 6:63). "நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.” (யாக்கோபு 1:18).

இரண்டாவதாக, தேவன் அவர்களுக்கு மனமாற்றத்தை கொடுக்கிறார். "இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்." (அப்போஸ்தலர் 5:31). "அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலைத் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார்" (அப்போஸ்தலர் 11:18), “சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், (2தீமோத்தேயு 2:25).

மூன்றாவதாக, தேவன் அவர்களுக்கு விசுவாசத்தை ஈவாக கொடுக்கிறார்: “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு” (எபேசியர் 2:8). "தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்." (கொலோசெயர் 2:12).

நான்காவதாக, தேவன் அவர்களுக்கு ஆவிக்குரிய தெளிவான புரிதலை கொடுக்கிறார்: "நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்." (1 யோவான் 5:19).

ஐந்தாவது, தேவன் நம்முடைய முயற்சிகளை வெற்றியடையச் செய்கிறார்: “அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.” (1 கொரிந்தியர் 15:10).

ஆறாவது, தேவன் நம்முடைய இரட்சிப்பைப் பாதுகாக்கிறார்: "இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது." (1பேதுரு 1:5).

ஏழாவது, தேவன் நம்மைப் விருக்தியடையச் செய்கிறார்: "என்னாலே உன் கனியுண்டாயிற்று" (ஓசியா 14:8). "ஆவிக்குரிய கனிகள்" அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; ஆகியவை (கலத்தியர். 5:22,23). தேவன் எதற்காக நம்முடைய பட்சத்திலிருந்து நம் பணிகளை நிறைவேற்றுகிறார்? ஏனென்றால் நம்மால் நம்மை மீட்டுக்கொள்ள முடியாது. “சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்.” (ரோமர் 9:29)

முதலாவதாக நாம் பலவீனம் உள்ளவர்க்கள் தேவனுடைய நீதியை நிறைவேற்ற முடியாதவர்களாக இருக்கிறோம். இருப்பினும், நம்மால் செய்ய முடியாத அனைத்தையும், தேவன் தனது இறையாண்மையால் நமக்குள் நடப்பிக்கிறார்.

இரண்டாவதாக, இவையெல்லாம் அவருக்கே கனமும், மகிமையும் உண்டாகும்படி தேவனே செய்தார். "நான் எரிச்சலுள்ள தேவன்” என்று அவரே சொன்னார். அவருடைய மகிமையை அவர் யாருடனும் பகீர்ந்துக் கொள்ளமாட்டார். இவ்விதமாக அவர் நம்முடைய துதியை பெற்றுக் கொள்கிறார். இதில் நாம் பெருமை பாராட்டிக் கொள்ளவதற்கு ஒன்றுமேயில்லை,

மூன்றவதாக! நாம் பெற்றுக்கொண்ட இரட்சிப்பை விருக்தியாக்கவும், பாதுகாக்கவும் தேவன் நம்மிடமே விட்டுவிட்டால் அது ஒருபோதும் பலனளிக்காது, அது மேம்படாமல் மோசமனதாக இருக்கும். தேவன் சீர்படுத்திய எல்லாவற்றையும் மனிதன் சீற்குழைக்கிறான். "தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்." (பிரசங்கி 3:14). ஆனால், என் சார்பாகவே எல்லா பணிகளையும் தேவனே செய்தார் என்று நான் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? முதன்மையான, அவற்றின் முடிவுகளால் சொல்லமுடியும். நீ மறுபிறப்பு அடைந்திருந்தால், உங்களுக்குள் அந்த புதிய குணம் இருக்கும். இந்த புதிய குணம் ஆவிக்குரியது. இந்த சரீர ரீதியான குணம், ஆவிக்குரிய குணத்திற்கு எதிரானது. இந்த இரண்டு குணங்களும் ஒன்றுக்கொன்று விரோதமானது.

ஆகாயால், இவைகளுக்கு கிடையே தொடர்ந்து போராட்டம் உள்ளது. இதுப்போன்ற மோதலைகளை உன் உள்ளத்துக்குள் நீ அனுபவிக்கிறாயா? உன்னுடைய மனந்திரும்புதல் தேவனால் உண்டாயிருந்தால் உன்னை நீயே வெறுப்பாய் உன் மனந்திரும்புதல் ஆவிக்குரியதாய் இருந்தால் தேவன் உன்னை எப்போதோ நரகத்தில் தள்ளியிருக்க வேண்டும். அனால் அப்படி நடக்கவில்லை, என்று நீ ஆச்சரியப்படுவாய். உன்னுடைய மனந்திரும்புதல் கிறிஸ்துவின் ஈவென்றால், ஒவ்வொரு நாளும் தேவனின் அற்புதமான கிருபைக்குப் பதிலாக நீ செய்யும் மோசமான காரியங்களுக்காக நீ வருத்தப்படுவாய். நீ பாவத்தை வெறுபாய். நீ செய்த பல அக்கிரமங்களுக்காக நீ இரகசியமாக தேவனிடம் மனந்திரும்புவாய். இது இரட்சிப்பின் ஆரம்ப நாட்களில் மட்டுமல்ல, இப்போதும் உன்னுடைய மனந்திரும்புதல் இவ்விதமாக இருக்கும். உன் விசுவாசம் தேவனுக்குரியது என்பதற்கான சான்று உலக சம்மந்தமான எதிலும் உன் விசுவாசத்தை வைக்க நீ விரும்பமாட்டாய்.  நீ உன் சுயமரியாதையையும், சுய நீதியையும் வெறுப்பாய், நீ செய்த அனைத்து செயல்களில் பெருமை கொள்ளமாட்டாய், உன் விசுவாசம் “தேவன் தெரிந்துக் கொண்டவர்களின் விசுவாசமென்றால்” (தீத்து 1:1), நீ தேவனை உடையவனாக இருப்பதற்கு கிறிஸ்துவை மட்டுமே அடிப்படையாக கொண்டிருப்பாய். ஒருவேளை உன் விசுவாசம் “தேவன் தெரிந்துக் கொண்டவர்களின் விசுவாசமென்றால், நீ தேவனுடைய வார்த்தையை ஆழமாக விசுவாசித்து, சாமதானத்துடன் ஏற்றுக்கொள்வாய், உன் சொந்த எண்ணங்களை சிலுவையில் அறைந்துவிட்டு, தேவன் சொல்வதையெல்லாம் ஒரு குழந்தையைப் போல ஏற்றுக்கொள்வாய். “கிறிஸ்துவை உடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.” (கலாத்தியர் 5:25),

கிறிஸ்துவின் மீதான உங்கள் அன்பு ஆவியின் ஈவாக இருந்தால் அதற்கு ஆதாரம் நீ தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களிலிருந்து விலகியிருந்து, எப்போதும் தேவனுக்கு பிரியமான காரியங்களைச் செய்வதில் ஈடுபடுத்திகொள்வாய். ஒரு வார்த்தையில் சொன்னால், நீ பணிவுடன் செயல்படுவாய் கிறிஸ்துவுக்குள் உன் அன்பு "புதிய மனிதனின்" அன்பாக இருந்தால், நீ அவருக்காக ஏங்குவாய், மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய ஊறவில் விருப்பம் கொள்வாய். இயேசுகிறிஸ்து உன் மீது வைத்திருக்கும் அன்பு எப்பேர்பட்டதோ அதே வகையான அன்பை நீ கொண்டிருந்தால், கர்த்தருடன் என்றென்றும் இருக்கும்படி, அவர் தம்முடைய மக்களை அழைத்து செல்ல இரண்டாவது முறையாக வரும்போது அவருடைய மகிமையின் தோற்றத்தை காண நீயும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பாய்.

பிரியமான வாசகரே! உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை உண்மையானதா? அல்லது போலியானதா? உங்கள் நம்பிக்கை கிறிஸ்து என்ற பாறையின் மீது கட்டப்பட்டதா? அல்லது மனித தீர்மானங்கள், முயற்சிகள், முடிவுகள் மற்றும் உணர்வு என்ற மணலின் மீது கட்டப்பட்டதா? சுருக்கமாக சொன்னால், உன் இரட்சிப்பு தேவனால் உண்டனாதா? அல்லது மாயமான உன் இருதய தோற்றத்தினால் உண்டானதா? என்பதை ஆராயும் ஞானத்தை தேவன் உனக்கு கிருபையாக தருவாராக, தேவனுடைய கிருபை நம் அனைவரோடும்  இருப்பாராக. ஆமென்.

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.