உங்களுடைய ஆத்துமா நித்தியத்திற்கும் இருக்கப்போகிறது. என்னென்றும் அழியாமல் வாழப்போகிறது. இந்த உலகம் நிலையாகவும், அழகாகவும், நேர்த்தியாகவும் இருந்தாலும் இவ்வுலகத்தில் உள்ள அனைத்தும் ஒருநாள் நிச்சயம் அழியப்போகிறது. தொடர்ந்து வாசிக்க...
உங்களுடைய ஆத்துமா நித்தியத்திற்கும் இருக்கப்போகிறது. என்னென்றும் அழியாமல் வாழப்போகிறது. இந்த உலகம் நிலையாகவும், அழகாகவும், நேர்த்தியாகவும் இருந்தாலும் இவ்வுலகத்தில் உள்ள அனைத்தும் ஒருநாள் நிச்சயம் அழியப்போகிறது. ஒருநாள் இந்த உலகத்துக்கு முடிவு வரப்போகிறது. அப்பொழுது வானங்கள் மடமடவென்று அகன்றுபோம், பூதங்கள் அழிந்துபோம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துப்போம். (2 பேதுரு 3:10). நாட்டை ஆளுகிறவர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், கட்டிடகலை நிபுணர்கள், இவர்களின் படைப்புகள் அனைத்தும் கொஞ்சகாலத்திற்குதான் இருக்கும்.
ஆனால், உங்களின் ஆத்துமாவோ என்றென்றைக்கும் வாழக்கூடியது. இனிகாலம் செல்லாது. (வெளிப்படுத்தல் 10:6) என்று தேவதூதன் அறிவிக்கும் நாள் வரப்போகிறது. நான் சொல்வதை புரிந்துக்கொள்ள முயற்சிசெய்யும்படி உங்களை வேண்டுகிறேன். நமது வாழ்க்கை அனைத்தும் ஆத்துமாவுக்கே வாழ அது தகுதியானது. நீங்கள் எல்லா முக்கியத்துவமும் கொடுப்பதற்கு ஆத்துமாவே முதன்மையானது. உங்கள் ஆத்துமாவுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த இடமும் எந்த வேலையும் உங்களுக்கு நல்லதல்ல. உங்கள் ஆத்துமாவை குறித்து குறைவான மதிப்புகளை ஏற்படுத்தும் எந்த நண்பனும் எந்த உறவுகளும் நம்பதகுந்தது அல்ல. உங்களுக்கோ, உங்கள் உடைமைகளுக்கோ, உங்கள் பண்புகளுக்கோ தீங்கு ஏற்படுத்துகிறவன் உங்களுக்கு தற்காலிகமான சேதத்தையே ஏற்படுத்துகிறான். உங்கள் ஆத்துமாவிற்கு சேதத்தை ஏற்படுத்துகிறவனே உங்களின் உண்மையான எதிரி.
இந்த உலகத்தில் நீங்கள் ஏன் பிறந்திருக்கிறீர்கள் என்பதை ஒரு நிமிடம் சிந்தியுங்கள். சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும், சரீர தேவைகளை நிறைவேற்றுவதற்கும் மட்டுமே நீங்கள் பிறக்கவில்லை. உடை உடுத்துவதற்கும், அதின் ஆசைகளின் பிறகே செல்வதற்கும் நீங்கள் பிறக்கவில்லை. வேலைசெய்வதற்கும், உறங்குவதற்கும், சிரிப்பதற்கும, பேசுவதற்கும், உங்களை மகிழ்விப்பதற்கும், எதை குறித்தும் சிந்திக்காமல் இருப்பதற்கும் நீங்கள் இங்கே பிறக்கவில்லை. இவற்றையெல்லாம் காட்டிலும் சிறப்பான நோக்கத்திற்காக நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் இந்த உலகத்தில் நீங்கள் நித்தியத்திற்கு ஆயத்தமாக வைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் சரீரம் உங்கள் அழியாத ஆத்துமா வாழ்வதற்கான இருப்பிடம் மட்டுமே. அநேக படைப்புயிர்களை போல் நமது சரீரமும் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுகிறதாய் இருக்கவேண்டும். உங்கள் சரீரத்தை ஆத்துமாவிற்கு அடிமையாக்குங்கள். அதற்கு பதிலாக உங்கள் சரீரத்திற்கு ஆத்துமாவை அடிமையாக்கி விடாதீர்கள்.
வாலிபனே, தேவன் மனிதர்களுடைய மதிப்பை பார்த்து பாரபட்சமோ, மரியாதையோ தருகிறவர் அல்ல அவர் மனிதனின் பாரம்பாரியத்தை பார்த்தோ, செல்வத்தை பார்த்தோ, தரத்தை பார்த்தோ, நிலைமையை பார்த்தோ அவர்களை மதிப்பிடுபவர் அல்ல. அவர் மனித கண்களை கொண்டு எதையும் பார்ப்பதில்லை. அலங்கார மாளிகையில் வாழும் பணக்கார பாவியின் மரணத்தைப் பார்க்கிலும் சேரியில் வாழும் ஏழை பரிசுத்தவானின் மரணம் கர்த்தரின் பார்வையில் சிறந்தது. கடவுள் ஒருபோதும் பணக்காரர்களையோ, படித்தவர்களையோ, அழகானவர்களையோ, இதுபோன்ற எந்த காரியங்களையும் பார்ப்பவரல்ல. கடவுள் பார்க்கின்ற ஒரேயொரு காரியம் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட அழியாத ஆத்துமா. ஒரே விதமான அளவிலே, ஒரே விதமான பரிட்சையிலே, ஒரே விதமான நிபந்தனையிலே அளவிடப்போகிறார். அந்த அளவு அவர்களின் ஆத்துமாவின் நிலை என்ன என்பதே.
இதை மறந்துவிடாதீர்கள் காலையும், மாலையும், இரவும் உங்கள் ஆத்துமாவை பற்றிய ஆர்வமே இருக்கட்டும். ஒவ்வொரு நாள் காலை எழுந்தவுடன் உங்கள் ஆத்துமாவின் முன்னேற்றத்திற்கு விருப்பப்படுங்கள். இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு உங்கள் ஆத்துமா உண்மையிலேயே வளர்ந்ததா? என்று உங்களையே ஆராய்ச்சி செய்து பாருங்கள். வயதான ஜியூக்ஸ் என்ற ஓவியரை ஞாபகப்படுத்தி கொள்ளுங்கள. ஏன் இவ்வளவு கஷ்டத்துடனும் வலிகளுடனும் ஒவ்வொரு ஓவியத்தையும் வரைகறீர்கள்? என்று மனிதர்கள் கேட்கும்போது அவர் சொல்லும் எளிமையான பதில் எனது ஓவியங்கள் நித்தியத்திற்கும் அழியாமல் இருக்கவேண்டும் என்பதே.
இந்த மனிதனை போன்று இருக்க வெட்கப்படாதீர்கள். உங்கள் மனக்கண்களுக்கு முன்பாக உங்கள் அழியாத ஆத்துமாவை நிறுத்தி கொள்ளுங்கள். யாரேனும் நீங்கள் ஏன் இப்படி வாழ்கிறீர்கள் என்று கேட்டால் உங்கள் ஆவியிலிருந்து பதில் சொல்லுங்கள். நான் என் ஆத்துமாவுக்காக இப்படி வாழ்கிறேன் என்று என்னை நம்புங்கள் மனிதன் தனது ஆத்துமாவுக்கு மட்டுமே கவலைப்படும் நாள் வெகு சீக்கிரத்தில் வரப்போகிறது. அப்போது அவர்களுக்கு ஒரு கேள்வி மட்டுமே மிக முக்கியமாக கேட்கப்படும் அது "உனது ஆத்துமா அழிவுக்கு போய்விட்டதா? அல்லது இரட்சிக்கப்பட்டுள்ளதா?"