உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

ஆசிரியர்: D. யஷ்வந்த் குமார்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்

 

Knowing Gods Will Part 3

         சகோதரர் G. பிபு அவர்கள் “தேவனுடைய சித்தத்தை அறிவது எப்படி? என்ற தலைப்பின் கீழ் பலரும் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் உள்ள காரியங்கள் “தேவனுடைய சித்தத்தை அறிதல்” என்ற தலைப்பை இன்னும் ஆழமாகவும் அதை வெவ்வேறு கோணங்களில் படிப்பதற்கு உதவும் என்று எண்ணி, அவற்றை இக்கட்டுரை வடிவில் சேர்க்க முடிவு செய்தேன். இந்த மூன்றாம் பாகத்தில் கேள்வி மற்றும் பதில் வடிவில் இந்த தலைப்பை இன்னும் ஆழமாக பார்ப்போம்.

கேள்வி: 1

பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு இரண்டிலும், நம்முடைய தேவன் பேசும் தேவனாகத் இருக்கிறார். இன்றும் தேவன் நம்மிடம் அப்படித்தான் பேசுகிறார் என்று ஏன் நினைக்கக்கூடாது? வேத வசன ஆதாரத்தை கொண்டு விளக்குங்கள்.

பதில்:

தேவன் நம்மிடம் பேசுகிறார் என்பது தெளிவானது. ஆனால் அவர் எப்படி பேசுகிறார் என்பதுதான் முக்கியமான கேள்வி. வேதத்தின் வடிவில் தேவனின் முழு வெளிப்பாட்டை நமக்கு கொடுக்கப்பட்டது. இந்த பரிசுத்த வேதத்தின் மூலம் தான் தேவன் நம்மிடம் பேசுகிறார். பரிசுத்த ஆவியானவர் வேத சத்தியத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ளவும், அவற்றைப் பயன்படுத்தவும் நமக்கு உதவுவதன் மூலம் நம்மை வழி நடத்துகிறார். வேத வசனத்திற்கு அப்பாற்ப்பட்டு நமக்கு புதிய சங்கதிகளை கொடுப்பதற்காக நேரடியாக நம்மிடம் பேசுகிறார் என்று சொல்வதற்கு எந்த வேத ஆதாரமும் இல்லை.

ஆதாம், ஆபிரகாம், மோசே, நியாயதிபதிகள், தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் மற்றும் பலரிடம் தேவன் பேசினார் என்று வேதத்தில் வாசிக்கிறோமே என்று கேட்பது நியாயமான கேள்வியாக தோன்றாலம். ஆனால் வாசகர்கள் சிந்திக்க வேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால், தேவன் யாரிடம் நேரடியாகப் பேசினார்? குறிப்பாக தேவன் நேரடியாக தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களிடம் பேசினார். உதாரணமாக, தேவன் பார்வோனிடம் கனவு மூலம் பேசினார். ஆனால் அந்த கனவு குறித்த விவரம் பார்வோனுக்கு தெரிவிக்கவில்லை. அந்த கனவை குறித்து அவருக்கு தெரிவித்தது யார்? ஒரு தீர்க்கதரிசி வந்து அந்த கனவை குறித்த விவரத்தை தெரிவித்தார். அதாவது, தேவன் ஒரு தீர்க்கதரிசியின் ஊழியத்தை நிறுவ கனவின் மூலம் பார்வோனிடம் பேசினார், மேலும் தீர்க்கதரிசிக்கு தெரியாமல், அவரது ஈடுபாடு இல்லாமல் தேவன் பார்வோனுக்கு ஏதாவது வெளிப்படுத்துவார் என்று நினைக்க முடியாது. யோசேப்பு சிறையில் இருந்தபோது கூட, தலைமை பானபாத்திரக்காரனும், சுயம்பாகிகளின் தலைவனும் ஒரு கனவு கண்டதாக வாசிக்கிறோம்.

ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் கூட அது தேவனுடைய தீர்க்கதரிசியான யோசேப்பை உயர்த்துவதற்காக தேவனின் செயலாகவே பார்க்கப்பட வேண்டும். புறஜாதி அரசனான நேபுகாத்நேச்சார் ஒரு கனவு கண்டான். அந்த கனவின் மூலம் தேவன் சொல்ல விரும்பிய அனைத்து விஷயங்களையும் அவர் அறிந்தாரா? இல்லை அந்நிய தேசத்தில் தானியேலின் ஊழியத்தை நிலைநிறுத்துவது தேவனின் பணியாக இருந்தது. மற்றும் தேவன் கொர்னேலியுவிடம் பேசினார், ஆனால் பேதுருவின் உதவி இல்லாமல் தேவன் கொர்னேலியுவுக்கு எதையாவது வெளிப்படுத்துகிறார் என்று சொல்ல முடியாது. அவ்விதமாகவே தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் அல்லாத பலருடன் தேவன் பேசிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களுடன் ஏதோ ஒரு வகையில் இணைந்திருப்பதைக் காணலாம். இதைத் தவிர, தேவன் தனது வெளிப்பாட்டைக் கொடுத்ததாக அல்லது தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களுடன் எந்த தொடர்பும் இல்லாத எவரிடமும் தேவன் பேசியதாக ஏதேனும் பதிவுகள் வேதத்தில் உள்ளதா? இல்லை.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், பழைய ஏற்பாட்டிலோ அல்லது புதிய ஏற்பாட்டிலோ தேவன் எல்லோரிடமும் பேசவில்லை. தேவன் தோன்றி எல்லா விசுவாசிகளிடமும் நேரடியாகப் பேசியதாகவும், சொப்பனங்கள் மூலமாகவும், தரிசனங்கள் மூலமாகவும் என்று நாம் வேதத்தில் எங்கும் வாசிக்கவில்லை, ஆகவே, ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் அவர் அன்றாடம் எடுக்க வேண்டிய ஒவ்வொரு முடிவுக்கும், உதாரணமாக, நான் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வேண்டுமா? வேண்டாமா? இந்த வேலை செய்யவேண்டுமா? வேண்டாமா? என்று வேதத்தில் எந்த பகுதியிலும் தேவன் தினமும் பேசியதாகவும், இதுபோன்ற காரியங்களில் வழி நடத்தியதாகவும் இல்லை. வேதத்தில் தேவன் சிலரிடம் பேசினார் என்று வாசிக்கிறோம்.

அந்தச் சிலருக்குக் தேவன் வழங்கிய அந்த வெளிப்பாட்டின் அடிப்படையில் எல்லா விசுவாசிகளும் நடக்க வேண்டும் என்று தேவன் ஆரம்பத்திலிருந்தே போதித்ததற்கு வேதத்தில் தெளிவான சான்றுகள் உள்ளன. “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள். (உபாகமம் 29:29) இந்த வசனத்தில், மறைவானவைகள் கர்த்தருக்கு மட்டுமே சொந்தமானது என்றும், அவற்றை அறிவது நம்முடைய பணி அல்ல, ஆனால் நியாயப்பிரமாணத்தில் வெளிப்படுத்தப்பட்ட காரியங்கள் மட்டுமே நமகுரியது என்றும் கற்பிக்கப்படுகிறது. அவற்றை நாம் கவனமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அவைகளின் படி நாம் வாழுவேண்டும். அவைகளிலிருந்து இடது புரமாவுது அல்லது வலதுபுறமாவது திரும்ப கூடாது. இது விசுவாசிகள் அனைவருக்கும் தேவன் கொடுத்த கட்டளை. ஒவ்வொரு நாளும் நான் உங்களுக்கு புதிய வெளிப்பாடுகளைத் தருவேன் என்று தேவன் விசுவாசிகளுக்கு புதிதான வாக்குறுதி அளித்ததில்லை.

பெற்றோர்களுக்கு தேவன் கொடுத்திருக்கும் பொறுப்பைப் பற்றி வேதத்தில் பார்த்தால், "இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி," (உபாகமம் 6: 6,7)  இந்த வசனத்தில், நீங்கள் தேவனின் முன்னிலையில் காத்திருந்தால், தேவன் உங்களுக்கு புதிய வெளிப்பாடுகளை வழங்குவார், அவற்றை உங்கள் பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும் என்று இல்லாமல் நியாயப்பிரமாணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள காரியங்களை உங்கள் இதயத்தில் வைத்து, அவற்றை உங்கள் பிள்ளைகளுக்கு போதியுங்கள் என்று சொல்லுகிறாரே தவிர, நீங்கள் என்னுடைய முன்னனியில் காத்திருந்தால் தினமும் உங்களுக்கு புதிய வெளிப்பாடுகளை கொடுப்பேன். அந்த முறையையே உங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுங்கள் என்று சொல்லவில்லை.

வேதத்தின் வடிவத்தில் தேவன் நமக்கு வெளிப்படுத்தியவைகளே நமக்கு ஆதாரம். தேவனுடைய சித்தம் அவருடைய வார்த்தையில் முழுமையாகவும் தெளிவாகவும் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது, தேவன் வெளிப்படுத்தியதிற்கு கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்பதை தேவன் தொடக்கத்தில் இருந்தே நமக்குக் கற்பித்த பாதை. ஆகவே, தேவன் ஒவ்வொரு விசுவாசியிடமும் தினந்தோறும் நேரடியாகவோ அல்லது கனவுகள் மூலமாகவோ பேசுவார் என்று நாம் ஏன் நினைக்க வேண்டும்? வேதம் முழுவதும், நாம் பார்க்கும்போது தேவன் அனைவரையும் எவ்விதமாக வழி நடத்தினாரோ, அவ்விதமாகவே உங்களை வழி நடத்துவார். தேவன் தம்முடைய பரிசுத்த வேதத்தின் மூலம் நம்மிடம் பேசுகிறார். தேவன் ஒவ்வொரு விசுவாசியிடமும் நேரடியாகவோ, கனவுகள் மூலமாகவோ தரிசனங்கள் மூலமாகவோ பேசுகிறார் என்பதற்கு வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், பலர் அவ்விதமாக போதிக்கின்றனர். தேவன் வாக்களிக்கவில்லை என்றாலும், அவர்கள் அவ்வாறே செய்கிறார் என்று பலர் போதிக்கின்றனர். தேவன் வாக்குறுதி அளிக்காததைச் செய்கிறவராக சித்தரிக்கப்படுகிறார். புதிய போதனைகளை திருச்சபையில் புகுத்தி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தேவன் அவருடைய வார்த்தையின் மூலம் நம்மிடம் பேசுகிறார். பரிசுத்த ஆவியினவரின் உதவியால் நாம் அதை புரிந்துக் கொள்ள முடியும். அதன் விதிகளை நாம் நம்முடைய வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் பயன்படுத்த வேண்டும். வேதம் தேவனுடைய முழுமையான வெளிப்பாடு. இது நிறைவானதும், நமக்கு போதுமானதும். அதில் முழு விசுவாசத்தோடு இருப்போம். இதைத் தாண்டி புதிய வெளிப்பாடுகளுக்காக நாம் குறிப்பாக காத்திருக்க வேண்டியதில்லை.

கேள்வி: 2

யோவேல் 2:28-30 -ல் வாசிக்கிறோம் "அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்." "அந்நாட்களிலே" என்றால் எந்த நாட்கள்? அந்த நாட்கள் வரும்போது எல்லா குமாரரும், குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்வார்களா? எல்லா மூப்பர்களும் சொப்பனங்களை காண்கிறார்களா? எல்லா வாலிபர்களும் தரிசனங்களைப் பார்பார்களா?

பதில்:

யோவேல் தீர்க்கதரியினால் சொல்லப்பட்ட இந்த தீர்க்கதரிசனம் எந்த நாட்களில் நிறைவேற வேண்டுமோ? அந்த கடைசி நாட்கள் இப்போது தொடங்கியுள்ளன, இப்போது நீங்கள் பார்க்கும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் பரிசுத்த ஆவி ஊற்றபடுதல், அப்போஸ்தலர்கள் நவமான பாஷைகளில் பேசுதல், முதலியன அனைத்தும் அந்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக நடக்கிறது' என்று அப். பேதுரு கூறினார். (அப்போஸ்தலர் 2:16-21) -ல் வாசிக்கிறோம். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் தான் இந்தத் தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேறியதாகக் கருத முடியாது. இது நடக்கவில்லை என்று அந்த தீர்க்கதரிசனத்தை முழுமையாகப் படித்த எவருக்கும் புரியும். ஆனால் இந்த சந்தர்ப்பம் அந்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தின் ஆரம்பம் மட்டுமே. இந்த தீர்க்கதரிசனத்தில் உள்ள சில காரியங்கள் அப்போஸ்தலர்களின் காலத்தில் நிறைவேறியது. “ 17 –வது வசனம், கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; 18 –வது வசனம், என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள். சிலவற்றை இப்போது நிறைவேறுகிறது. 21 –வது வசனம், அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். மற்றும் சிலவற்றை நிறைவேற வேண்டியதாக உள்ளது. 19 –வது வசனம், அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழப் பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். 20 –வது வசனம், கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். இவையெல்லாம் கடைசி நாட்களில் நடக்க வேண்டியதாக உள்ளதென்று யோவேல் தீர்க்கதரிசி தீர்க்கத்தரிசனம் உரைத்ததாகதாக பேதுரு சொல்லுகிறார். கடைசி நாட்கள் என்பது பெந்தெகொஸ்தே நாளில் தொடங்கி இன்றுவரை தொடர்கின்றன. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த தீர்க்கதரிசனத்தில் பெந்தகொஸ்தே நாளில் நிறைவேறிய யோவேல் தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் இந்த நாளில் தேவன் சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் மூலம் பேசுகிறார் என்று சொல்ல முடியாது. இந்த விஷயத்தைப் பற்றிய புதிய ஏற்பாட்டு மற்ற வசனங்களை ஆராய்வதினால், நாம் அறிந்துக்கொள்வது தேவனின் இந்த முறையில் பேசுவது அப்போஸ்தலரின் காலத்திற்கு மட்டும் உட்படுத்தப்பட்டது என்பதையும், அத்தகைய வெளிப்பாடுகள் அதற்கு பிறகு காலத்தில் தேவையில்லை என்பதால், அவை நிறுத்தப்பட்டன என்பது நமக்கு தெளிவுபடுத்துகிறது. எனவே இன்றைய நாட்களில் ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய சித்தத்தை அறிய சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் மூலம் தேவனிடமிருந்து புதிய வெளிப்பாடுகளையும் வழிகாட்டுதல்களையும் பெறுகிறார்கள் என்று கூறுவதற்கு இந்த வசனத்தில் எந்த அடிப்படை ஆதாரமில்லை.

கேள்வி: 3

ரோமர் 8:16, "நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்." என்று இந்த வசனத்தை வாசிக்கும்போது, ​​தேவன் நம்மிடம் பேசமாட்டார் என்று எப்படிச் சொல்ல முடியும்?

பதில்:

சொல்லப்போனால் ஆத்துமா என்னவேன்று சாட்சியாளிக்கிறது? நாம் தேவனின் பிள்ளைகள் என்ற உறுதியை அவர் நமக்கு வழங்குகிறார். அவர் என்னவேன்று சாட்சியாளிக்கிறது? இந்த வசனத்தின் சந்தர்ப்பத்தை நாம் ஆராய்ந்தால், அப். பவுல் எழுதிய நிருபத்தில் 8-ம் அதிகாரம் முதல் வசனத்தில் "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை." என்று தொடங்குகிறார், மேலும் நான்காவது வசனத்தில் விசுவாசிகள் "மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆவியின் படி." மேலும் 13-வது, வசனத்தில்  நீங்கள் "...மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்." என்று கூறுகிறார். இந்த எல்லா வார்த்தைகளின்படியும், ஆவியானவரால் வழி நடத்தப்படுவது அல்லது ஆவியின்படி நடப்பது என்பது ஆவியானவர் நம்மில் உற்பத்தி செய்யும் ஆவியின் கனிகளுக்கு ஏற்ப செயல்களைச் செய்வதாகும். இவ்வாறு ஆவியால் வழி நடத்தப்படுபவர்கள் தேவனுடைய பிள்ளைகள்.

ஆகவே, ஒரு விசுவாசி மாம்சத்தின் கிரியைகளை ஆவியினால் அழித்து, ஆவியின் கனிகளுக்கு இசைவான செயல்களைச் செய்தால், அது அந்த விசுவாசிக்கு என்ன சாட்சியாக இருக்கிறது? அவர்கள் தேவனுக்கு சொந்தமானவர், தேவனின் பிள்ளைகள் என்று அது சாட்சியாளிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் நாம் ஆவியின்படி நடக்க உதவுகிறார், மேலும் "நான் தேவனின் பிள்ளை" என்ற ஆவிக்குரிய உறுதியை நமக்குத் தருகிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மில் ஆவியின் கனிகளை உற்பத்தி செய்வதன் மூலம் அந்த சாட்சியை நமக்கு தருகிறார். "நீங்கள் தேவனுடைய பிள்ளைகள்" என்று அவர் உங்கள் காதில் வந்து சொல்ல மாட்டார், அல்லது அதை உங்கள் கனவிலோ அல்லது தரிசனத்திலோ அதை உங்களுக்கு வெளிப்படுத்த மாட்டார். இந்த காரியத்தில் அவர் அவ்வாறு செய்வதற்கு வாய்ப்பில்லை. ஆவியின்படி நடப்பவர்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள். ஆவியானவரால் வழிநடத்தப் படாதவர்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் அல்ல. நாம் ஆவியானவரால் வழி நடத்தப்படுகிறோம் என்பதற்கான அத்தாட்சியை நம் வாழ்வில் காண முடிந்தால், ஆவியின் கனி என்று தேவனுடைய வார்த்தை எதை சொல்கிறதை நாம் உறுதியாக நம்பினால், அது நம் வாழ்வில் இருக்கிறது, அந்த பணியை நமக்குள் செய்வது பரிசுத்த ஆவியானவர். அவர் நம்மை வழிநடத்துவதால், நாம் தேவனின் பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்பதான உறுதிப்படுத்தவும் ஆதாரமாகவும் கொடுக்கிறார் என்று அப். பவுல் கூறுகிறார். இன்றைய நாட்களில் பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு விசுவாசிகளிடமும் புதிய காரியங்களைப் பேசுவார், சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் மூலம் உங்களுக்கு புதிய வெளிப்பாடுகளை வெளிப்படுத்துவார், மேலும் ஒவ்வொரு நாளும் விசுவாசிகளுக்குத் தேவையான வழிகாட்டுதலைத் தருவார் என்று கூறுவதற்கு இந்த வசனத்தில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.

கேள்வி: 4

யோவான் 16:13 -ல் பார்க்கிறோம், "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் பேசவில்லை & பெசுவதில்லென்றால், வெளிப்பாடுகள் இல்லாவிட்டால் வரப்போகிற காரியங்களை குறித்து அவர் எப்படி நமக்குச் போதிக்க முடியும்?

பதில்:

இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களிடம் யோவான் 14:26 -ல் சொன்னார், "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்." ஆனால் இயேசு கிறிஸ்து அப்போஸ்தலருக்குக் கற்பித்த விஷயங்களை நினைவுகூருவது மட்டுமல்லாமல், (யோவான் 16:12) -ல் "இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்." ஆனால் பரிசுத்த ஆவியானவர் வரும்போது அவற்றை உங்களுக்கு வெளிப்படுத்துவேன் என்று கூறுகிறார். அவ்வாறு அவர் வெளிப்படுத்தும் காரியங்கள் கிறிஸ்துவைப் பற்றிய காரியங்கள். அவை தேவனால் அப்போஸ்தலர்களுக்கு முழுமையாக வெளிப்படுத்தப்பட்டன. தேவன் அவற்றை புதிய ஏற்பாட்டில் புத்தக வடிவத்தில் பதிவு செய்துள்ளார். உதாரணமாக, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் வரவிருக்கும் காரியங்களும் கிறிஸ்துவுடன் தொடர்புடையவை. இன்றைய நாட்களில் நான் எந்த பெண்ணை அல்லது ஆண்னை திருமணம் செய்ய வேண்டும்? நான் என்ன வேலை செய்ய வேண்டும்? என்று ஒவ்வொரு விசுவாசிக்கும் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துகிறார் என்று சொல்லுவதல்ல. அது நிச்சயமாக சத்தியத்திற்கு வழி நடத்தப்பட வேண்டிய வார்த்தைகளின் சாராம்சம்.

ஒருவேளை தேவன் அப்போஸ்தலர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடுகளை தேவன் இன்னும் கொடுக்கிறார் என்று யாராவது சொன்னால், அப்போஸ்தலர்களுக்குக் தேவன் வழங்கிய 27 புத்தகங்களின் வெளிப்பாடுகளைப் போலவே புதிய வெளிப்பாடுகளும் முக்கியம். அவைகளையும் வேதத்தில் சேர்க்கப்பட வேண்டும். அதைச் செய்யக்கூடாது என்று சொல்லும் அதிகாரம் திருச்சபைக்கு இல்லை. இயேசு கிறிஸ்துவின் எந்தவொரு வெளிப்பாடும் உலகளாவிய திருச்சபையின் ஆத்மீக நலனுக்காக எழுதப்பட்டு வேதத்தில் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், இந்தக் காரியங்களை தேவன் தங்களுக்கு வெளிப்படுத்தினார் என்று இன்று அநேகர் சாட்சி கொடுக்கிறார்கள். ஆனால் இன்றைய நவீன சில போதகர்கள் ஜோதிடகாரான் கூறிவது போல் ஏதாவது ஒரு கட்டத்தில் இது நிறைவேறும் இந்த காரியங்களை தேவன் எங்களுக்கு வெளிப்படுத்தியதாக கூறுகிறார்கள். அவை நிறைவேறிய பிறகு, அவர்கள் தேவன் அதை எங்களுக்கு முன்பே அதை வெளிப்படுத்தியதாக சொல்லி பெருமை பாராட்டுவார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் இப்படிப்பட்ட காரியங்களை உங்களுக்கு வெளிப்படுத்துவார் என்று இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் வாக்குறுதி அளிக்கிறாரா? இல்லை இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியின் மூலம் எதை நமக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று நினைத்தாரோ, அந்த எல்லாக் காரியங்களை தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் மூலம் வேதத்தின் 66 புத்தகங்களின் வடிவத்தில் இணைத்து கொடுத்தார். அதுவே நமக்கு போதுமானது.

கேள்வி: 5

(1 கொரிந்தியர் 2:10) வசனத்தில் "நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்." இந்த வசனத்தில் ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்துவார் என்று சொல்லப்பட்டிருக்கிறதே, ஆனால் நீங்கள் வெளிப்படுத்த மாட்டார் என்று சொல்கிறீர்களா?

பதில்:

இந்த வசனத்தின் சந்தர்ப்பத்தை நாம் கருத்தில் கொள்வோம். "அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே." இந்த வசனத்தில் அப். பவுல் தேவனுடைய ஞானத்தை குறித்து பேசுகிறார். சொல்லப்போனால் இதைக்குறித்து முதல் அதிகாரத்திலே பேசுகிறார். அது எப்பேர்ப்பட்ட ஞானம் என்பதை (1 கொரிந்தியர் 1:18) வசனத்தில் சொல்லுகிறார். “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.” இயேசு கிறிஸ்துவைப் பற்றி தேவன் வேதத்தில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தாலும், அவருடைய மேன்மைத்துவம் அடையாளம் காணத் தேவையான அனைத்து விஷயங்களும், தேவனுடைய வார்த்தையில் தெளிவாக வெளிப்படுத்தப் பட்டிருந்தாலும், உலக ஞானிகளால் அதைக் காண முடியவில்லை. உலக ரீதியான பலரது நிலையும் இதுதான். அறிவார்ந்த நிலையில் இயேசு கிறிஸ்து யார் என்று அறிந்திருந்தாலும், நாம் (விசுவாசிகள்) இயேசு கிறிஸ்துவில் காணக்கூடிய இரட்சிப்பு, மகிமை மற்றும் நித்திய வாழ்வின் ஆசீர்வாதத்தை ஏன் உலகில் உள்ளவர்களால் பார்க்க முடியவில்லை? இவைகளை அவர்கள் ஏன் அதை பைத்தியமாக காண்கிறார்கள்?

காரணம் என்ன என்பதை அடுத்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. 9 –வது வசனத்தில் எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; 10 –வது வசனத்தில் நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்."

தேவன் தம்முடைய ஆவியின் மூலம் அவற்றை நமக்கு வெளிப்படுத்தினார். 'அவைகளை' என்றால் என்ன? தேவனுடைய வார்த்தையில் இருக்கும் காரியங்களை வாசிக்கும் பலரின் கண்கள் அவற்றைக் காணவில்லை, அவர்களின் காதுகள் கேட்கவில்லை, அவர்களினால் இருதயத்தில் தோன்றவுமில்லை. ஆனால் அந்த காரியங்கள் நமக்கு ஏன் புரியும் படியாக தோன்றுகின்றன? இயேசுகிறிஸ்துவிடம் நம் வாழ்வை முழுவதுமாக ஒப்புக்கொடுக்கவும், இயேசு கிறிஸ்துவில் இருக்கும் இரட்சிப்பை நாம் மட்டும் காணக்கூடியவர்களாக இருக்கிறோம் அது ஏன்?

தேவன் தம்முடைய ஆவியால் நம்மில் செயல்படுவதாலும், நம் மனக்கண்களைத் திறந்து மீண்டும் பிறப்பதன் (மறுபிறப்பு அடைவதின்) மூலம் அவற்றை நம்மால் காண முடிகிறது.

உலக ரீதியான மனிதனால் தேவனுடைய காரியங்களை உணர முடியாது, ஆனால் கிறிஸ்துவுடன் ஏழுப்பட்ட நாம் தேவனுடைய ராஜ்யத்தின் காரியங்களில் உணர்வடைய முடிகிறது. அதன் மகிமையையும் காண முடிகிறது. அவருடைய இரட்சிப்பை அனுபவபூர்வமாக அறிந்து கொள்ளலாம்.

"14 வது வசனத்தில் “ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.”

இந்த சந்தர்ப்பத்தில் தேவனுடைய ஞானம் என்று வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட காரியங்களைக் குறிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் தெளிவாகச் சொல்வதென்றால், சுவிசேஷ காரியத்தில் தவிர, தினசரி புதிய காரியங்களை வெளிப்படுத்துவதன் மூலம் தேவன் நம்மை வழி நடத்துகிறார் என்று சொல்லுவதற்கு இந்தப் வசனத்தில் எந்த அடிப்படையும் இல்லை.

கேள்வி: 6

(1 கொரிந்தியர் 14: 29, 30) "தீர்க்கதரிசிகள் இரண்டு பேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள். அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன்." இந்த வசனத்தில் தேவன் வெளிப்படுத்துகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்று தேவன் நமக்கு புதிய காரியங்களை வெளிப்படுத்த மாட்டார் என்று எப்படி சொல்ல முடியும்?

பதில்:

தீர்க்கதரிசன வரத்திற்கும், மொழி வாரத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் காட்ட எழுதப்பட்ட அத்தியாயம் இது. தீர்க்கதரிசனம் சொல்வது திருச்சபைக்கு பக்திவிருத்தியை கொண்டுவரும் ஆனால், மொழிகளை விளக்கும் விஷயத்தில், மொழிகளை வியாக்கியானம் செய்பவர்கள் இல்லாவிட்டால் பக்திவிருத்தி உண்டாகாது என்று அப். பவுல் போதிக்கிறார், தீர்க்கதரிசனம் என்பது எதிர்காலத்தில் என்ன நடப்பதை அறிவிப்பது என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தீர்க்கதரிசனம் என்பது ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட காரியங்களைக் கற்பிப்பதும் அறிவிப்பதும் ஆகும்.

திருச்சபையில் பிரசங்க ஊழியத்தை தேவன் நியமித்தார், அதே ஊழியத்தை தீர்க்கதரிசிகளும் செய்தார்கள். இந்த சந்தர்ப்பத்தை தான் அப். பவுல் பேசுகிறார்.

'வெளிப்பாடு' என்பது புதிய காரியங்களை வெளிப்படுத்துவது என்று புரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட விஷயங்களைச் சரியாகவும் ஆழமாகவும் புரிந்துகொண்டு, இதுவரை காணாததைக் கண்டு புரிந்து கொள்ள முடியும் என்ற பொருளில் இந்த வார்த்தைகளை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கான கிரேக்க வார்த்தைக்கு “மூடியதை திறப்பது, திறந்து போதிப்பது” என்ற இந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டு தேவன் ஒவ்வொரு நாளும் நாம் அனைவரோடும் புதிய காரியங்களை வெளிப்படுத்துவார் என்று சொல்ல முடியாது.

கேள்வி: 7

(யோவான் 14:12) "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்." பெரிய கிரியைகள் என்றால் பெரிய வெளிப்பாடுகள் என்று அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள கூடாதா?

பதில்:

"இயேசுவின் சீடர்கள் தம்மை விட பெரிய கிரியைகளை செய்வார்கள்" என்ற அவருடைய வார்த்தைகளை சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும், அப்போஸ்தலர்கள் காலத்திலிருந்து இன்றுவரை, கர்த்தராகிய இயேசு செய்த கிரியைகளை விட பெரிய கிரியைகளை யாரும் செய்யவில்லை "இயேசு கிறிஸ்து தண்ணீரின் மீது நடந்ததுப்போல காற்றின் மீது நடந்தவர்களும், தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியதை போல திராட்சை ரசத்தை தண்ணீராக மாற்றியவர்கள் யாரும் இல்லை, அதைப்போல இயேசுகிறிஸ்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததுப்போல பத்தாயிரம் பேருக்கு உணவளித்தவர்கள் வரலாற்றில் யாருமில்லை.

சிலர் பேதுருவின் நிழலால் பலர் குணமடைந்தனர் என்றும், சிலர் அப். பவுலின் உருமால்களை அதாவது அவர் பயன்படுத்திய கைக்குட்டையை தொட்டதன் மூலம் குணமடைந்தனர் என்றும் கூறுவார்கள். இயேசுகிறிஸ்துவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டு குணமடைந்தவர்களைப் பற்றி சுவிசேஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது அல்லவா! அதுமட்டுமின்றி, பல கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளவர்களைக் கூட தொடாமலும், பார்க்காமலும் அவர் குணப்படுத்திய நிகழ்வுகளும் உண்டு. எனவே எந்த அப்போஸ்தலரும் இயேசு கிறிஸ்துவை விட மகத்துவத்திலும், மேன்மையிலும் மாபெரும் காரியத்தை செய்யவில்லை.

கர்த்தராகிய இயேசுவின் இந்த வார்த்தைகள் அப்போஸ்தலர்களின் விஷயத்தில் எவ்வாறு நிறைவேறியது? மகத்துவம் என்பது தரத்தில் இல்லை, அளவிலேயே உள்ளது, அதாவது பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விட திரளான மக்களுக்கும் சுவிசேஷ ஊழியம் செய்வதால், கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள் நிறைவேறின. இயேசு கிறிஸ்துவின் ஊழியம் ஏறக்குறைய யூதேயா மற்றும் கலிலேயா பகுதியில் மட்டுமே நடந்தது. சமாரியாவுக்குப் போனார் என்றும் வாசிக்கிறோம். ஆனால் இயேசு கிறிஸ்து சிலுவையில் யூதர்களுக்கும் புறஜாதி மக்களுக்கும் இடையிலான சுவரை தகர்த்த பிறகு, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அப்போஸ்தலர்கள் உலகம் முழுவதும் அறிவித்தனர். இவ்வாறு எண்ணிக்கையிலும் அளவிலும் மட்டுமே சீஷர்கள் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள், ஆனால் தரத்தில் & செயல்பாட்டில் பெரிய காரியங்களை யாரும் செய்யவில்லை செய்யவும் முடியாது.

பெரிய கிரியைகள் என்பது பெரிய வெளிப்பாடுகள் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தைகளை நாம் எடுக்க விரும்பினால், இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தியதை விட பெரிய காரியங்களை அப்போஸ்தலர்களுக்கும் நமக்கும் தேவன் வெளிப்படுத்துவார் என்று நாம் நினைக்க வேண்டுமா? அவர் பரலோக காரியங்களைப் பேசுகிறார் என்றால், அதைவிட மேலான மற்றொரு பரலோகத்தைப் பற்றி பேச வேண்டுமா? இல்லைவே இல்லை! எனவே இந்த வசனத்தில் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் அனைத்து விசுவாசிகளுக்கு தேவன் புதிய வெளிப்பாடுகளை கொடுப்பதற்கான எந்தவித தொடர்பும் இல்லை.

கேள்வி: 8

வேதம் முழுமையானதும் மற்றும் போதுமானதும் என்று சொல்லுகிறோம். ஆனால் வேதத்தில் ராக்கெட் அறிவியலோ கணினி தொழில்நுட்பமோ இல்லை. அப்படியானால் வேதம் முழுமையுள்ளது என்று எப்படி சொல்ல முடியும்?

பதில்:

இந்த காரியத்தை திசை திருப்பி தவறான வழியில் நடத்துவதற்காக பலர் எழுப்பும் கேள்வி இது. பரிசுத்த வேதம் கூறுகிறது. "வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16,17) இதன் அர்த்தம் எந்த ஒரு நல்ல பணியையும் செய்வதற்கும், அந்த காரியத்தை ஏற்ற எல்ல முடிவுகளை எடுக்க வேதம் நமக்கு போதுமானது என்று அர்த்தத்தை தருகிறது. ஆனால் இது போதாதது வேறு ஏதாவது தேவை, தேவன் மற்றும் இரட்சிப்பு தொடர்பான காரியங்களுக்கு மட்டுமே! தேவனுடைய வார்த்தை வரையறுக்கப்பட்டுள்ளது, மற்ற அனைத்தும் பரிசுத்த ஆவியானவரால் வெளிப்படுத்தப்படுகின்றன வேதத்தில் ராக்கெட் அறிவியல், கணினி தொழில்நுட்பம் இல்லை என்று சிலர் இதுபோன்ற எடுத்துக்காட்டுகளைத் தருகிறார்கள். எனவே வேதம் முழுமையடையாதது, அதில் எல்லாமே இல்லை. என்று வாதத்திற்காக, வேதத்தில் கணினி அல்லது ராக்கெட் தொழிற்நுட்பம் இல்லை என்று சொல்லலாம். பரிசுத்த ஆவியானவர் அவற்றை மனிதனுக்கு வெளிப்படுத்தினாரா? எவராலும் எதையும் உருவாக்கவும், கண்டுபிடிக்கவும் முடியும் என்பது தேவன் கொடுத்த ஞானத்தால் தான். அது நாத்திகர்களாக இருந்தாலும் சரி, ஆத்திகர்களாக இருந்தாலும் சரி. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அது இவ்வுலகிற்குரியது, இவ்வுலகில் மட்டுமே பயன்படக்கூடிய அறிவு. இது வெளிப்பாடு அல்ல, வெளிப்பாடு. 'என்னுடைய ஒவ்வொரு முடிவுக்கும் வேதம் போதுமானது' என்று நாம் கூறும்போது, ​​நாம் தார்மீக மற்றும் ஆன்மீக காரியங்களைப் பற்றி பேசுகிறோம். இதுபோன்ற காரியங்களில் ஒவ்வொரு முடிவையும் எடுக்க வேதம் நமக்கு போதுமானது. மேலும், இந்த உலக ரீதியான அறிவு தொடர்பான அனைத்து காரியங்களும் வேதத்தில் இருப்பதாகக் கூறப்படவில்லை.

கேள்வி: 9

தேவன் வேதத்தின் மூலம் மட்டுமே பேசுகிறார் என்று சொல்லுவது, ​​நாம் தேவனின் வல்லமையை மட்டுப்படுத்துவதாக ஆகிறது அல்லவா? இதன் மூலம் மட்டுமே அவர் பேசுகிறார் என்று கூறுவது தேவனை ஒரு பெட்டியில் வைப்பது போன்றதாக ஆகும் அல்லவா? அவர் எதன் மூலமாக & எப்படி வேண்டுமானாலும் பேசலாம், இல்லையா?

பதில்:

தேவன் வேறு மூலம் பேச முடியாது என்று நாங்கள் கூறவில்லை. இதை விளங்கிக்கொள்ள ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் அறிய முயற்சிப்போம். இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே இரட்சிப்பு என்று வேதம் சொல்வது. தேவனை ஒரு பெட்டியில் வைப்பது போலவா? தேவனால் வேறு வழியில் நம்மை இரட்சிக்க முடியாதா? ஆனால் இயேசு கிறிஸ்து மட்டுமே ஒரே வழி என்று தேவனுடைய வார்த்தை தெளிவாகக் கூறுவது போல, நீங்கள் நடக்க வேண்டிய பாதை இந்த தேவனுடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்ட பாதை. இரண்டையும் ஏற்றுக்கொள்வதில் நமக்கு என்ன சிக்கல் இருக்கிறது. இயேசு கிறிஸ்து மட்டுமே ஒரே வழி என்பதால், அவர் மூலமாக மட்டுமே நாம் தேவனிடம் வருவோம், இதுவே பாதை என்று வேதம் நமக்கு சொல்லும் பாதையில் நடப்போம். இவ்விதமாக தேவன் நமக்கு ஒரு வரம்பை நிர்ணயித்திருந்தால், அதன் மூலமாக தேவ வார்த்தைகளின் படி வாழ்வதன் மூலம் தேவ வெளிப்பாடு மற்றும் நான் அவருடைய சித்தத்தின்படி வாழவேண்டும் என்று தேவனே நிர்ணயித்திருந்தால், தேவனை ஒரு பெட்டியில் வைப்பதாக எப்படி சொல்ல முடியும். அந்த வரம்பை தேவன் நமக்குக் காட்டியுள்ளார் மற்றும் தேவன் பேசுகிறாரா? அல்லது வேறு யாராவது பேசுகிறாரா? என்பதை தீர்மானிக்கவும், அங்கீகரிக்கவும் தேவன் விதித்துள்ள பாதையே நமக்கு ஒரு மார்கமாக இருக்கும் போது, தேவனை ஒரு பெட்டியில் வைப்பதுப் போல் எப்படி ஆகும்?

கேள்வி: 10

(நீதிமொழிகள் 3: 5,6) "உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்." என்னுடைய எல்லா நடத்தையிலும் அவருடைய அதிகாரத்திற்கு நான் எப்படி அடிபணிவது?

பதில்:

ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும், ஒவ்வொரு பெரிய விஷயத்திற்கும் நாம் தேவனைச் சார்ந்திருக்க வேண்டும். ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் தேவன் நம்மை வழி நடத்துகிறார். ஆனால் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் தேவன் நம்மிடம் பேசுகிறாரா? என்பதே உண்மையான கேள்வி. (நீதிமொழிகள் 19:21) "மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்." என் எண்ணங்கள் என்னவாக இருந்தாலும், தேவன் அவருடைய திட்டங்களை நிறைவேற்றுவார். அவரால் எப்படியும் செய்ய முடியும், இதைப் பற்றி நான் அவரிடம் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இந்த வசனம் எனது பொறுப்பு பற்றி கூறுவது என்னவென்றால், எனது எல்லா நடத்தையிலும் "அவருடைய அதிகாரத்தை ஒப்புக்கொள்வது". அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவது என்பதும் அவருடைய அதிகாரத்தை அங்கீகரிப்பதாகும். வேத வார்த்தையின் வடிவில் தேவன் நமக்கு அருளியிருக்கும் வெளிப்பாட்டின் படி நாம் வாழ்ந்தால், அவர் என் பாதைகளை நேராக்குவார். எனவே சிறிய விஷயங்களில் கூட நமக்கு தேவனின் உதவி தேவை, ஆனால் ஒவ்வொரு அடியிலும் உங்கள் அடுத்த அடியை எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்க கூடாது என்பதை தேவன் உங்களுக்கு ஒரு குரல் வழியாக சொல்லமாட்டார்.

கேள்வி: 11

ஒரு மெல்லிய குரல் என்னை வழி நடத்துகிறது என்று பெரிய பெரிய தேவனுடைய ஊழியர்கள் கூறுகிறார்கள். அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்:

இந்தக் கருத்தைப் புரிந்துக் கொள்ளவதற்கு ஒரு சிறிய உதாரணத்தை சொல்கிறேன். ஒரு நபர் அமெரிக்கா செல்வது தேவனுடைய சித்தமா? அல்லது சித்தமில்லையா? என்பதை அறிய ஜெபிக்கும்போது (ஏசாயா 11:14) வசனம் தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்தியதாம். "அவர்கள் இருவரும் ஏகமாய்க் கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து," இந்த வசனம் (ஆங்கிலத்தில் இறக்கைகளில் ஏறுங்கள்) என்ற வார்த்தையின்படி, தான் விமானம் ஏற வேண்டும் என்பது தேவனின் சித்தமாக உணர்ந்தார், மேலும் "மேற்கு நோக்கி" என்ற வார்த்தையின் படி அவர் அமெரிக்கா செல்ல வேண்டும். என்பதாக முடிவு செய்துவிட்டார். வேதத்தை வாசிக்க இது சரியான முறையா? ஒவ்வொரு நாளும் இந்த நபரை வழி நடத்தும் அந்த மெல்லிய குரல், ஏன் ஒருமுறை கூட 'நீ வேதத்தை வாசிக்கும் முறை தவறானது என்று சொல்லவில்லை' இதிலிருந்து நாம் புரிந்துக்கொள்வது என்ன? இந்த மெல்லிய குரல் தேவையான வழிகாட்டுதலை நமக்கு தருவதில்லை. அந்தக் குரல் பொதுவான முடிவுகளின் விஷயங்களில் மட்டுமே கேட்கப்படுகிறது மற்றும் வழிநடத்தப்படுகிறது, ஆனால் மிக முக்கியமான விஷயங்களில் எடுத்துக்காட்டு வேதத்தை எவ்வாறு வாசிப்பது? வேதத்தை எவ்வாறு புரிந்துகொள்வது? அவர்கள் தவறு செய்தாலும், ஏன் அந்த மெல்லிய குரல் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலைத் தரவில்லை? அப்படியானால், அது உண்மையான தேவனின் குரலா? அல்லது தேவனின் ஆசீர்வாதமா? என்று நாம் கேள்வி கேட்க வேண்டும்.

ஏனென்றால், ஆத்மீக விஷயங்களில் உங்களுக்கு உதவாத அந்த மெல்லிய குரலைக் கேட்டு, 'நான் தேவனின் சித்தத்தின் படி செய்கிறேன், நான் தேவனின் வழிகாட்டுதலில் இருக்கிறேன்' என்று அது உங்களை ஏமாற்றும் குரல்.

பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கொடுக்கும் வழி நடத்துதலுக்குப் பதிலாக சாத்தான் அறிமுகப்படுத்திய மற்றொரு மாற்று இது. அந்தக் குரலின் விசயத்தில் கவனமாக இருங்கள். ஏதோ கேட்டது, அது தேவனின் குரல். இன்றைய நவீன பெரிய போதகர்கள் கூட கேட்டதால், அது சரியானது என்று நினைக்காதீர்கள். இது மிகவும் ஆபத்தான குரல். அந்த குரல் உண்மையான ஆத்மீக காரியங்களில் யாருக்கும் உதவவோ அல்லது வழிகாட்டவோ இல்லை. அது எத்தகைய தேவையை இது பூர்த்தி செய்யாது. தேவையில்லாத அல்லது முக்கியமில்லாத காரியங்களை மட்டுமே சொல்லும் குரல் அது.

கேள்வி: 12

1 கொரிந்தியர் 12 –ம் அதிகாரத்தில் உள்ள ஆவியின் வரங்களைப் பற்றி பேசுகையில், தேவன் தீர்க்கதரிசனத்தின் மூலம் புதிய வெளிப்பாடுகளை வழங்க விரும்பவில்லை என்றால், அவர் ஏன் சபைக்கு அத்தகைய வரத்தை வழங்கினார்? மேலும் (1 கொரிந்தியர் 14:39) வசனம் சொல்லுகிறது, "இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்." என்கிற இந்த வார்த்தைகளை எவ்வாறு புரிந்துகொள்வது?

பதில்:

தீர்க்கதரிசனம் என்ற வார்த்தையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். தீர்க்கதரிசனம் சொல்வது என்றால், மக்கள் முன் நின்று, தேவனுடைய வார்த்தைகளைக் கேட்பவர்கள் அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துக் கொள்ளும்படி அறிவிப்பதும், தெரிவிப்பதும் ஆகும். அது இன்றும் உள்ளது. ஆனால் வேதத்தில் இல்லாத புதிய வெளிப்பாடுகள் என்ற அர்த்தத்தில், தீர்க்கதரிசிகளுக்கும் அப்போஸ்தலர்களுக்கும் கொடுக்கப்பட்டது என்ற அர்த்தத்தில் தீர்க்கதரிசனம் இப்போது தொடரவில்லை என்று மட்டுமே சொல்கிறோம். (வெளிப்படுத்தல் 19:10) “அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.”

ஆகவே, இயேசுவைக் குறித்துச் சாட்சியாளிக்கிறவர்களும், அவரை குறித்து பிரசங்கிக்கிரவர்களும் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள். இந்த அர்த்தத்தில் இன்றும் தீர்க்கதரிசன வரம் என்னிடம் உள்ளது என்று சொல்வதில் எந்தப் தயக்கமும், பிரச்சினையும் இல்லை, ஆனால் இந்த வசனங்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் எனக்குத் தேவையான வழிகாட்டுதலை தேவன் எனக்கு வழங்குவார் என்று சொல்வது உண்மையில்லை.

கேள்வி: 13

(1 தெசலோனிக்கேயர் 5: 19,20,21) “ஆவியை அவித்துப்போடாதிருங்கள். தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.” என்று தீர்க்கதரிசனத்தின் மூலம் தேவன் இன்று நம்மிடம் பேசவில்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

பதில்:

"ஆவியை அவித்துப்போடுதல்" என்பது நாம் எப்போது செய்வோம், அவருடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்ட தேவனின் கட்டளைகளுக்கு எதிராகச் செயல்படும் போது நாம் செய்வதும். அதைச் செய்யும் ஒவ்வொரு முறையும், விசுவாசி ஆத்துமாவைத் தணிக்கும் வேலையையும், ஆவியை துக்கப்படுத்தும் பணியைச் செய்கிறான். தேவன் என்னிடமோ அல்லது என் மூலமாகவோ பேசுகிறார் என்றால், 'நீங்கள் அவரைத் தடுக்க முயற்சிக்காதீர்கள்' என்று இந்த வசனம் கூறவில்லை. மற்றபடி தீர்க்கதரிசனம் என்ற வார்த்தையை எந்த அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை முன் பார்த்த கேள்வி - பதிலில் பார்த்தோம்.

கேள்வி: 14

ஆகார், காயீன் போன்ற சாதாரண மனிதர்களிடமும் தேவன் பேசவில்லையா?

பதில்:

ஆகாருக்கும் ஆபிரகாமுக்கும் தொடர்பு இருந்ததால். தீர்க்கதரிசியான ஆபிரகாமின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. காயீனின் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் தீர்க்கதரிசியான ஆதாமின் குடும்பத்துடன் தொடர்புடையது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் போது கிழக்கு தேசத்து ஞானிகளுக்கும் ஆடுகளுக்கும் வெளிப்படுத்தப்பட்ட வெளிப்பாடுகளை மரியாளின் மூலம் அப்போஸ்தலர்களுக்கு தெரிவிக்கவும், அது அப்போஸ்தலரின் அதிகாரத்தால் உறுதிப்படுத்தவும் தேவன் அனுமதித்தார். எனவே தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களால் உறுதிப்படுத்தப்படாத எந்த ஒரு வெளிப்பாடும் எந்த காலத்திலும் வழங்கப்படவில்லை.

கேள்வி: 15

(எபேசியர் 4:13,14) "பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்." இன்றும் தீர்க்கதரிசிகளும், அப்போஸ்தலர்களும் இருந்தால், அவர்கள் தேவனின் வெளிப்பாடுகளைப் பெறுவார்கள். இல்லை என்றால், இந்த நாட்களில் சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் மூலம் நாம் தேவனிடமிருந்து வெளிப்பாடுகளைப் பெறுகிறோம் என்று கூறுபவர்கள் அனைவரும் பொய்யர்களா?

பதில்:

மேய்ப்பர்கள் மற்றும் சுவிசேஷகர்களைத் தவிர, தேவன் அப்போஸ்தலர்களையும் தீர்க்கதரிசிகளையும் கொண்டு சபைக்கு வழங்கினார். எவ்விதமாக வழங்கினார் என்றால்? (எபேசியர் 2:20) "அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;" பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகளின் ஊழியத்தைப் பற்றி வாசிக்கிறோம், புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்களின் ஊழியத்தைப் பற்றி வாசிக்கிறோம். அவர்களின் ஊழியத்தின் அடிப்படையில் திருச்சபை கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்போது போதகர்கள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரசங்கிகள் அந்த அடித்தளத்தில் திருச்சபையை கட்டுகிறார்கள். எப்படி சத்திய போதனையின் அடிப்படையே அதுதான். இன்று திருச்சபையில் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் இருக்கிறார்களா? உள்ளன வேத வசனத்தின் வடிவில் உள்ளது. இந்த வேத புத்தகம் தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் அடிப்படை ஊழியத்தின் மூலம் நமக்கு வழங்கப்பட்டது. எப்பொழுதும் திருச்சபையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே வேதம் தான் அடித்தளம்.

லாசரு - செல்வந்தன் கதையில் லூக்கா 16:27 "அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.” அப்போது மோசேயும் தீர்க்கதரிசிகளும் இருந்தார்களா? இல்லை முதலில், மோசேயும் தீர்க்கதரிசிகளும் ஒரே நேரத்தில் பூமியில் வாழவில்லை. எனவே அந்த இடத்தில் அவர் வேதத்தை குறிப்பிடுகிறார்.

மேலும் 2 தெசலோனிக்கேயர் 2:15 - "ஆகையால், சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, வார்த்தையினாலாவது நிருபத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்." அப்போஸ்தலர்கள் வாய்மொழியாக எதைப் பிரசங்கித்தாலும், அவர்கள் நிருபங்களில் எழுதினார்கள். ஒருவேளை அவர்கள் 2000 வருடங்கள் வாழ்ந்து இன்று நம்மிடையே இருந்தால் என்ன போதிப்பார்கள்? வேதத்தில் உள்ளதைப் போலவே அவர்களும் போதிபார்கள். அவர்கள் புதிதாக எதையும் போதித்திருக்க மாட்டார்கள். தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் நம்மோடு இருந்ததைப் போலவே, இன்றும் திருச்சபைக்குக் போதித்துக் கொண்டிருப்பது போலவே, அதே வெளிப்பாடுதான் எழுத்துக்களுக்கு முன் நம்மோடு இருந்தது.

2 பேதுரு 3:3 "பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன். முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து,"

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.