விமர்சனத்திற்கு பதில்

ஆசிரியர்: K. வித்யாசாகர்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 10 நிமிடங்கள்

"கால்வினிசம்" என்று கேலியாக அழைக்கப்படும் "தேவனின் இறையாண்மையை" (தேவனின் சர்வ வல்லமையை) உயர்த்தும் வேதப்பூர்வமான கோட்பாட்டை சில குழுவினர் ஒரு தவறான புரிதலோடு மீண்டும் மீண்டும் அதை குற்றம் சாட்டுவதை நான் கவனித்தேன். தொடர்ந்து வாசிக்க...

 

Who makes God the cause of sin

     "கால்வினிசம்" என்று கேலியாக அழைக்கப்படும் "தேவனின் இறையாண்மையை" (தேவனின் சர்வ வல்லமையை) உயர்த்தும் வேதப்பூர்வமான கோட்பாட்டை சில குழுவினர் ஒரு தவறான புரிதலோடு மீண்டும் மீண்டும் அதை குற்றம் சாட்டுவதை நான் கவனித்தேன். வேதம் போதிக்கும் கோட்பாடுகளுக்கு எதிராக சில குழுக்கள் தவறான புரிதலோடு குற்றச்சாட்டுகளை முன்வைப்பது திருச்சபைக்கு புதிதல்ல. உதாரணமாக, “ஜென்மபாவம்” என்ற உபதேசத்திலும் "பிறக்கும் பிள்ளைகள் பாவ சுபாவத்தோடு பிறப்பதும், அவர்களை பாவ சுபாவத்தொடு பிறக்க வைப்பவர் யார்? எனவே அதற்கு தேவன் தான் பொறுப்பு" என்ற தவறான புரிதலோடு இந்த கோட்பாட்டை பிரசங்கிப்பவர்களை விமர்சிக்கிறார்கள்.

இனி நாம் தலைப்புக்குள் வருவோம், தேவனின் இறையாண்மையில் நம்பிக்கை கொண்டவர்கள் இந்த படைப்பில் உள்ள அனைத்தும் தேவனின் விருப்பப்படியே செய்யப்படுகின்றன என்று போதிக்கிறார்கள். அந்த போதனையை நிரூபிக்கும் சில வசன பகுதிகளைப் பாருங்கள்.

(எபேசியர் 1:12) “தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிறார்.”

(தானியேல் 4:35) “அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்;”

(நீதிமொழிகள் 19:21) “மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.”

(நீதிமொழிகள் 21:1) “ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.”

(நீதிமொழிகள் 20:24) “கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி?”

(புலம்பல் 3:37,38) “ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?”

(ரோமர் 11:36) “சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.”

(சங்கீதம் 115:3) “நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.”

(ஏசாயா 45:7) “ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்துத் தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.”

(சங்கீதம் 119:91) “உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள்வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும்.”

இந்த வசனங்கள் அனைத்தும் தேவனின் இறையாண்மைக்கு தெளிவான சான்றுகள். ஆனால் சிலர், "இந்த வசனங்களை அடிப்படையாகக் கொண்ட போதனையை தேவன் மனிதர்களின் பாவத்தைத் தீர்மானிக்கிறார். என்றும், அதன் அடிப்படையாகவே தேவன் பாவத்திற்கு காரணர் என்றும், இதனால் “கால்வினிசம்” என்ற கோட்பாடு தேவனை பாவத்தின் காரணராக காட்டுகிறது" என்று வாதிடுகின்றனர். “பரிசுத்த வேதாகமம்” தேவன் இறையாண்மையுள்ளவர் என்றும், அவர் பரிசுத்தமானவர் என்றும் சொல்வதால், அவற்றை அவ்வாறே எடுத்துக் கொள்ளாமல், மனித தர்க்கத்துடன் இரண்டையும் சமநிலைப்படுத்த முயன்றால், இதுபோன்ற தவறான புரிதல்கள் நடக்கும்.

ஏனென்றால் மனித தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட பல விஷயங்களை வேதத்தில் நாம் காண்கிறோம். உதாரணமாக; திரித்துவக் கோட்பாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். வேதாகமம் தேவன் ஒருவரே என்று போதித்து. பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூன்று நபர்களும் சமமாக உள்ளதை கற்பிப்பதன் மூலம் அந்த தெய்வீகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த அம்சத்தை மனித தர்க்கத்தால் (நம்முடைய வரையறுக்கப்பட்ட அறிவால்) இந்த விஷயத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. அதனால்தான் சிலர் இந்த திரித்துவக் கோட்பாட்டைத் தவறாகப் புரிந்துகொண்டு, ஒரே தேவனுக்குள் மூன்று பகுதிகள், அல்லது ஒரே தேவன் மூன்று வடிவங்களில் அல்லது மூன்று தேவர்கள் என்ற போதனைகளை திருச்சபையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

“கால்வினிச” கோட்பாட்டை எதிர்க்கும் சில குழுக்கள், சொல்லும் விதமாக மனிதன் தேவனின் நிர்ணயம் இல்லாமல் தன் சொந்த விருப்பப்படி பாவம் செய்கிறான் என்று வைத்துக்கொண்டாலும், அவர்களும் பாவத்தின் காரணராக தேவனையே காட்டுகிறார்கள். அது எப்படி என்று பாருங்கள்.

மனிதனுக்கு சுதந்திரம் (Free Will) கொடுத்தது யார்? தேவன் அல்லவா! மனிதன் தனக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தின் மூலம் பாவம் செய்வான் (கட்டளையை மீறுவான்) என்பதை அவர் முன்கூட்டியே அறிந்திருக்கிறார்! அதெல்லாம் தெரிந்தும் கூட, மனிதனுக்கு அந்த சுதந்திரத்தை (free will) கொடுத்தார் என்றால், மனிதன் பாவம் செய்யும் வாய்ப்பை கொடுத்தது யார்? இதன் படி மனிதனுக்கு சுதந்திரம் தந்த தேவன்தான் இந்த படைப்பில் மனிதன் பாவத்தை செய்ய காரணராய் இருக்கிறார்.

மனித உரிமைகளை மதிக்கும் அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் உள்ள நாடுகளில் கூட, ஒருவர் குற்றம் செய்யப் போவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தால், அந்த நபரை தடுத்து அவர்கள் அவனைக் காவலில் வைப்பார்கள். தேவன் ஏன் அவ்வாறு செய்யவில்லை? மேலும், இந்த சுதந்திரக் கோட்பாடு மிகவும் கேலிக்குரியது, அது எப்படியென்றால் இதில் தேவன் ஒரு மனிதனுக்குக் கொடுத்த சுதந்திரத்தைத் தக்கவைக்க மற்றொருவரின் சுதந்திரத்தை பறிக்கிறார். உதாரணமாக; ஒரு மனிதன் இன்னொருவனை கொல்லுவதற்கு முற்ப்படுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அங்கே கொல்ல வருபவன் சுதந்திரமானவன், அதினால் தேவன் அவனைத் தடுபதில்லை. ஆனால் கொல்லப்படும் நபருக்கும் சுதந்திரம் இருக்கிறது அந்த சுதந்திரத்தின் அடிப்படையில் அவன் வாழ விரும்புகிறான். ஆனால் அது அவனால் முடியவில்லை. இந்த செயல் ஒருவருடைய சுதந்திரத்தை தக்க வைப்பதற்காக இன்னொருவரின் சுதந்திரத்தைத் பறிப்பது இல்லையா?

ஒருவேளை தேவனின் நிர்ணயம் இல்லாமல் இந்தப் படைப்பில் பாவம் நுழைந்து ஆட்சி செய்யமுடியும் என்று யாராவது நினைத்தால், அவர்கள் பாவத்தை விட தேவன் வல்லமை குறைந்தவர் என்று அறிவிப்பதாக இருக்கும். ஏனென்றால்,

1) தேவனின் சர்வ வல்லமையைக் கடந்து பாவம் இந்த உலகில் நுழைந்தது. ஆதாம் ஏவாள் மற்றும் அனைத்து மனித குலத்தையும் தேவனிடமிருந்து தூரப்படுத்தியது. இந்த படைப்பில் தேவனை மிஞ்சுவது எதுவாக இருந்தாலும், அது தேவனை விட சக்தி வாய்ந்தாக இருக்கும். ஆனால் அது சாத்தியமற்றது என்று வேதாகமம் கூறுகிறது, “நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.” (ஆதியாகமம் 17:1), “இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.” (ரோமர் 9:5), “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.” (வெளிப்படுத்துதல் 4:8), “அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.” (வெளிப்படுத்துதல் 19:15), “உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள்வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும்.” (சங்கீதம் 119:91).

2) ஆதாமுக்குள்ளும், ஏவாளுக்குள்ளும் பாவம் தேவனுடைய விருப்பத்திற்கு மாறாக நுழைந்தாலும், அது மனிதகுலம் முழுவதும் பரவியிருந்தாலும், தேவனால் அதைத் தடுக்க முடியவில்லை. இதன்படி அவரது படைப்பில் தனக்கு சித்தமில்லாத காரியம் நடக்கும் போது அதை தடுக்க இயலாதவர். தீர்ப்பு நாளில் பாவத்தை உலகத்திலிருந்து நீக்க நினைத்தாலும், அதுவரை உள்ள அந்த பாவத்தின் விளைவுகள் என்னவாகும்?

தேவனை பாவத்தை விட சக்தியற்றவராக மாற்றும் பரிதாபகரமான போதனையை நாங்கள் நம்பவில்லை, தேவனை இயலாமைக்குள் உள்ளாக்கும் மோசமான போதனைனையை நாங்கள் நம்புவதில்லை, வேத வாக்கியத்தின்படி தேவன் இறையாண்மையுள்ளவர் என்றும், சர்வ வல்லமையுள்ளவர் என்றும், நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அவருடைய இரகசிய சித்தம் எதுவோ, அது பாவம் உலகில் இருக்க அனுமதித்தது என்றும் நாங்கள் விசுவாசித்து போதிக்கிறோம். எல்லையற்ற தேவனில் அவருடைய சித்தம் என்ன என்பதை ஒரு எல்லைக்குட்பட்ட நம்மால் சொல்ல முடியாது, ஏனென்றால்;

  1. நாம் எல்லைக்கு உட்பட்டவர்கள்.
  2. வேத வசனம் அதை இரகசியமாக வைத்திருக்கிறது, அதை நமக்கு விளக்கவில்லை.

(உபாகமம் 29:29) “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின் படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.” அதனால்தான் யோபு கூறுகிறார், "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.” (யோபு 42:2). “அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளை எல்லாம் செய்வேன்.” (ஏசாயா 46:10)

இதில் வியப்பு என்னவென்றால், (Free Will) என்ற கோட்பாட்டை விசுவாசிப்பவர்கள், தேவனின் எதிர்காலத்து ஞானத்தைக் குறித்து அதிகமாக பேசுவார்கள். அவருடைய திறனால் அனைத்தையும் பார்த்தார் என்பார்கள். சொல்லப்போனால் தேவன் சிருஷ்டியை உருவாக்கும் முன்பே மனிதனுடைய வீழ்ச்சியை, பார்த்தாரா? என்று அவர்களிடம் கேட்டால் அதற்கு அவர்கள் பார்த்தார் என்பார்கள். அந்த வீழ்ச்சிக்கு தேவன் அனுமதித்தாரா? என்று கேட்டால் ஆம்! அனுமதித்தார் என்பார்கள். தேவன் நோக்கம் இல்லாமல் எதையும் செய்வதில்லை. அந்த நோக்கம் அவருக்கு அவ்வப்போது தோன்றுமா? அல்லது அது நித்திய சித்தமா? முஸ்லீம் பிரிவை சார்ந்த கடவுளைப் போல தேவனுக்கு அவ்வப்போது சிறந்த யோசனைகள் வந்திருக்குமா? நாங்கள் இதுப்போன்றவைகளை நம்பவதில்லை.

எனவே, தொலைநோக்கு ஞானம் என்பது அவர்கள் சொல்வது போல், நேரத்திற்கு முன்பே நடக்கப்போகும் ஒன்றை அறிவது அல்ல, அது உண்மையாக இருந்தால், அவருக்கு முன்பே தெரியாத விஷயங்களை அவர் "அறிகிறார்" என்று அர்த்தம். இப்படியிருக்க அவர் எப்படி எல்லாவற்றையும் அறிந்தவராக இருக்க முடியும்? எதிர்காலத்தை அறிந்து கற்றுக்கொள்பவர் அறிந்துக்கொள்பவர் ஆவர். எனவே அவரது எதிர்கால அறிவு என்பது அவரது முடிவு & விருப்பம் மட்டுமே, அவருடைய முடிவில்லாமல் எதுவும் எதிர்கால அறிவில் அவருக்குப் புதிதல்ல. தேவனைக் குறித்து இந்த வார்த்தையை பயன்படுத்திய முன்னறிவிப்பு என்ற சொல் தான் நாம் புரிந்து கொள்ளவேண்டும். இதை நான் வார்த்தை ஜாலத்தோடு பயன்படுத்தி சொல்லவில்லை. தேவன் அனைத்தையும் அறிந்தவர், அனைத்தையும் தீர்மானிப்பவர் என்று வேத வசனம் கூறுகிறது, எனவே அதன் அடிப்படையில் இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன்.

இதேபோல் பெயரிடப்பட்ட கிரேக்க அகராதிகள் லெக்சிகன்கள், UBS ஆகியவையும் (அப்போஸ்தலர் 2:23), “தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும்” (1 பேதுரு 1:1,2) “பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே,” என்ற இந்த இரண்டு வசனங்களிலும் “முன்னறிவிப்பு” (προγνώσει) என்ற சொல்லுக்கு முன்னறிவிப்பு என்று பொருள் தருகிறது, மேலும் புதிய ஏற்பாட்டு கிரேக்க அறிஞர்கள் இதுவே சரியான பொருள் என்பதை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

இப்படி எல்லாம் அவருடைய முடிவு & அனுமதியின்படியே நடக்கும். ஆயினும் வேத வசனத்தின் படி தேவன் பாவத்தின் காரணர் அல்ல. ஏனென்றால், அவர் பரிசுத்தர் என்பதை வேதம் மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது. “நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்” (லேவியராகமம் 11:44), “உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது, அவர் பரிசுத்தமுள்ளவர், நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர்.” (சங்கீதம் 99:3,5,9). அதோடுக்கூட அவர் இறையாண்மையுடன் எல்லாவற்றையும் விதித்தவர் என்றும், அவருடைய சித்தத்தின்படி தனது படைப்பில் அனைத்தையும் (பாவம் உட்பட) அனுமதித்தவர் என்றும், அது நமக்குச் சொல்கிறது. “தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு,” (எபேசியர் 1:12), “அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.” (தானியேல் 4:35) உதாரணமாக; நான் மேலே விளக்கியது போல் சாத்தான் அவரது அனுமதியின்றி ஏதேன் தோட்டத்தில் நுழைந்தால், அவருடைய சிருஷ்டியில் அவருடைய அனுமதியின்றி நுழையக்கூடிய சாத்தானே அவரை விட வலிமை மிகுந்தவனாக இருப்பான். எனவே இந்த இரண்டையும் மனித தர்க்கத்துடன் சமநிலைப்படுத்த முடியாது. நீங்கள் சமநிலைப்படுத்த முயற்சித்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த உதாரணத்தைப் பாருங்கள்.

(சங்கீதம் 5:4-6) “நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர். பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப் பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்.”

இந்த வசனத்தில், அவருடைய பரிசுத்த பிரசன்னத்தில் பாவிகள் நிற்க முடியாது என்றும், பொய்யர்களும் கபடக்காரர்களும் அவருக்கு அருவருப்பானவர்கள் என்றும் சங்கீதக்காரன் கூறுகிறார். இப்போது மற்றொரு வசனத்தைப் பாருங்கள்.

(1 இராஜாக்கள் 22:19-23) “அப்பொழுது அவன் (மீகா) சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவர் வலது பக்கத்திலும் அவர் இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன். அப்பொழுது கர்த்தர்: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள். அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது. எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார். ஆதலால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.”

இந்த சந்தர்ப்பத்தில், தேவனிடமிருந்து அவரது அனுமதியுடன் ஆகாபை பொய் சொல்லவும் பாசாங்குத்தனமாக கொல்லவும் ஒரு ஆவி அவரது தீர்க்கதரிசிகள் மூலம் வந்ததாக எழுதப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட படி சங்கீத புத்தகத்தில் அக்கிரமக்காராரும், பொய் பேசுகிறவர்களையும், இரத்தப் பிரியனையும், சூதுள்ள மனுஷனையும் அருவருக்கிறார். சவுலின் விஷயத்திலும் இதே போன்ற வார்த்தைகளை நாம் காண்கிறோம். (1 சாமுவேல் 16:14). இந்தச் சூழ்நிலைகளை மனித தர்க்கத்துடன் நாம் எவ்வாறு சமநிலை செய்வது, மேலே நாம் பார்த்தபடி “நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; என்ற வார்த்தைகளுடன் இணைவது எப்படி? ஏனென்றால், அவர் வெறுக்கும் பொய்யர்களையும் பாசாங்குத்தனமான கொலைகாரர்களையும் அவருடைய சித்தத்தை நிறைவேற்ற பயன்படுத்துகிறாரா? அவ்வாறு அனுமதிக்கப்படும் போது அவர்களின் பொய்களிலும், அக்கரமத்திலும் அவர் பங்குள்ளவர் தானே? நாங்களோ! வேத வசனம் சொல்லும்படி எல்லாமே (சாத்தானும் கூட) அவருடைய சர்வ வல்லமை மற்றும் இறையாண்மையின் எல்லைக்குள் இயங்குகிறது. என்று விசுவாசிப்பதினால் இங்கு நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

(சங்கீதம் 119:91) “உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள்வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும்.”

  1. வேத வசனம் சொல்லுவதுப் போல் பொய் பேசுபவர்களையும், மாய்மாலக்காரர்களையும் வெறுக்கிறார். ஏனென்றால் தேவன் பரிசுத்தமானவர்.
  2. அப்படிப் பட்டவர்களையும் தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்ற அனுமதித்து பயன்படுத்திகொள்கிறார். ஆனாலும் அவர்களுடைய பொய்களுக்கும் பாசாங்குத்தனத்திற்கும் தேவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

யோபுவை சோதிக்கும் போது சாத்தான் தேவனின் அனுமதியுடனே யோபுவிடம் சென்றானா? அல்லது நாம் உறவினர் வீட்டுக்கு செல்வதைப் போல் அவ்வப்போது பரலோகம் செல்கிறானா?

அதேபோல், ஒவ்வொரு மனிதனின் பிறப்பும் இறப்பும் தேவனின் கைகளில் இருப்பதாக வேதம் போதிக்கிறது. இதை கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, இறை நம்பிக்கையுள்ளவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை இது. எனவே ஒரு மனிதன் இவ்வுலகில் இறக்க வேண்டுமானால் அவன் இறப்பதை தேவன் முடிவு செய்திருக்க வேண்டும்.

(வெளிப்படுத்துதல் 1:18) “நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.”

(சங்கீதம் 90:3) “நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறீர்.”

(1 சாமுவேல் 2:6) “கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.”

(சங்கீதம் 139:16) “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.”

வேதம் சொல்லும் இந்த சத்தியத்தை மனதில் கொண்டு உலகில் நடக்கும் மனித மரணங்களைப் பார்ப்போம். ஒவ்வொரு நாளும் பலர் (குழந்தைகள் உட்பட) பெரியவர்களும் கொலை செய்யப்படுகிறார்கள். மற்றவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், அப்படியானால் அனைவரின் மரணத்தையும் தீர்மானிக்கும் தேவன் கொலைகாரன் ஆவாரா? ஆனைத்துமே தேவனால் தீர்மானிக்கப்பட்டால், இந்த படைப்பில் நடக்கும் பாவத்திற்கும் அவரே பொறுப்பாளி என்பதும் "தேவனின் இறையாண்மை" என்று வியாக்கியானம் செய்பவர்களின் கருத்துப்படியும் இந்த சந்தர்ப்பத்தின்படியும் தேவனே கொலைகாரனாக இருக்க வேண்டும். (வெளிப்படுத்துதல் 21:8) “பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.” ஆனால் வேத வாக்கியங்களின் படி, அந்த கொலைகளை செய்தவர்களும், மற்றும் தற்கொலை செய்துக் கொள்பவர்களும் தான் பொறுப்பு மேலும் தேவனின் முன்பாக குற்றவாளிகளாக நிற்கிறார்கள். ஏனென்றால், மனிதன் பாவம் செய்வதின் பின்னணியில் அவனுக்கென்று ஒரு உள்நோக்கம் உண்டு. அதனால் அவன் செய்யும் காரியத்திற்கு அவனே பொறுப்பு.

உதாரணமாக; இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் மரணம் தேவனின் நிர்ணயம். “தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.” (அப் 2:23). ஆயினும், அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத்தும், மற்றும் அவருடன் கூட்டுச் சேர்ந்த யூதர்களும் அவருடைய மரணத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் அவ்வாறு செய்வதற்குப் பின்னால் அவர்களுக்கென்று ஒரு உள்நோக்கம் என்னவென்றால், (பொருளாசை & பகை) இருந்தது. (லூக்கா 6:16), (வெளி. 1:18), (1 தெசலோனிக்கேயர் 2:15,16). பழைய ஏற்பாட்டு யோசேப்பின் விஷயத்தில் கூட அவன் எகிப்துக்குப் போவது தேவனின் நிர்ணயம். “நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.” மேலும் இவ்வசனங்கள் இந்த சந்தர்ப்பத்தை விளக்குகிறது. (ஆதியாகமம் 50:20), (சங்கீதம் 105:15). ஆனால் அவரை எகிப்துக்கு அடிமையாக விற்ற சகோதரர்கள் அதில் குற்றவாளிகள். ஏனென்றால், அவர்கள் தங்களில் உண்டான பொறாமையின் காரணமாக அவ்வாறு செய்தார்கள். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் செய்யும் பாவத்திற்கு அவர்களின் சொந்த "நோக்கம்" உள்ளது, எனவேதான் அந்த பாவத்திற்கு அவர்களே பொறுப்பு. இதில் எந்த அநீதியும் இல்லை.

ஆனால் நான் தொடக்கத்தில் கூறியது போல், தேவனின் இறையாண்மையும் மற்றும் மனித பொறுப்பும் இதைப் பற்றிய போதனையை நமக்கிருக்கும் குறிகிய அறிவும் மற்றும் மனித தர்க்கத்தால் அதை "முற்றிலும்" புரிந்து கொள்ளமுடியாது. ஆனால் இது வேதம் சொல்லுகிற சத்தியம் எனவே தான் விசுவாசிக்க வேண்டும். ஒருவேளை இதை விசுவாசிக்காதவர்கள் கிறிஸ்தவராக இருக்க முடியாது.

அதனால் தான் நாங்கள் இந்த விஷயத்தில் தேவனுடைய வார்த்தை எந்த அளவிற்கு சொல்லுகிறதோ! அவைகளை மட்டும் எடுத்து சத்தியத்தை அறிந்துக்கொள்ள விமர்சிப்பவர்களுக்கு அழைப்புக் கொடுத்தால் அவர்களில் சிலர் “சசேமிரா”, “ஜான்பைபர்” அப்படி சொன்னார், ஜான் கால்வின் இப்படி சொன்னார் என்று தங்களின் வாதங்களை காரணம் காட்டி நாங்கள் தேவனை பாவத்தின் காரனாராக காட்டுகிறோம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர்களின் (Free Will) சுயசித்த கோட்பாடின் மூலம் தேவனை பாவத்தின் காரணராகவும், கொலைகாரனாகவும் காட்டுவது அவர்களே! நாங்கள் அல்ல.

தேவனின் இறையாண்மை மற்றும் மனித பொறுப்பு பற்றிய கூடுதல் விளக்கத்திற்கு, கீழே உள்ள இணைப்பில் பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகளைப் வாசிக்கவும்.

சர்வவல்லமையுள்ள தேவனின் இறையாண்மை (ஆர்தர் டபிள்யூ பிங்க்)

படைப்பில் தேவனின் இறையாண்மை

தேவனின் இறையாண்மை மற்றும் பிரார்த்தனை

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.