உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

ஆசிரியர்: A.W. பிங்க் (1886–1952)
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 2 நிமிடங்கள்

 

What is sin

      மனிதன் பாவம் என்பதற்கு சரியான பதிலை சொல்ல முடியுமா? “தன் பிழைகளை உணருகிறவன் யார்?” (சங்கீதம் 19:12). பாவம் என்பதற்கு ஒரு பெரிய புத்தகம் எழுதினாலும் அறிவிக்கப்படாதவை அநேகம் மீதியாக இருக்கும். தேவனுக்கு எதிராக பாவம் செய்யப்படுகிறதினிமித்தம், தேவனே அதின் இயல்பையும், அதின் பெருமையையும் பூரணமாய் அறிவார். இருந்தாலும், தேவன் நமக்கு கொடுத்துள்ள வெளிச்சத்தின் அடிப்படையில், குறைந்தது ஒரு பகுதியளவிலாவது அதற்கான பதிலை காண்போம்.

உதாரணமாக, (1 யோவான் 3:4) -ல் நாம் படிக்கிறோம்: “பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்;” இந்த மீறுதல் வெளிப்படையான செயல்களில் மட்டுமல்ல என்பது, “தீயநோக்கம் பாவமாம்” (நீதிமொழிகள் 24:9) என்ற வசனத்திலிருந்து தெளிவாகிறது.  "நியாயப்பிரமாணத்தை மீறுதல் பாவம்” என்பதன் பொருள் என்ன? அது தேவனுடைய பரிசுத்த கட்டளையை மிதிப்பதைக் குறிக்கிறது. அது நியாயப்பிரமாணத்தை கொடுத்தவருக்கு விரோதமான செயலாகும். “நியாயப்பிரமாணம் பரிசுத்தமாயும், நீதியாயும், நன்மையாயும் இருக்கிறது” (ரோமர் 7:12) என்பதால், அதனை மீறுவது தேவன் மட்டுமே அளவிடக்கூடிய ஒரு தீமையாகும். அனைத்து பாவமும் நித்தியமான நீதியின் தரத்தை மீறுதலாகும். வெளிப்படையான மீறுதலுக்கு அடிப்படையாக உள்ள உள்ளார்ந்த பகையினை அது வெளிப்படுத்துகிறது. இது கட்டுப்பாட்டை வெறுக்கும் தற்பெருமை மற்றும் சுயஇச்சையின் வெளிப்பாடாகும். அது கட்டுப்பாட்டை ஏற்க மறுக்கும், அதிகாரத்தை ஒப்புக்கொள்ள மறுக்கும், ஆட்சிக்கு கீழ்ப்படிய மறுக்கும், ஆளுமைக்கு விரோதமான எதிர்ப்பை தெரிவிக்கும். நீதியான கட்டளையின் கட்டுப்பாட்டிற்கு விரோதமாக சாத்தான் நம்முடைய ஆதி பெற்றோரான ஆதாம் ஏவாளுக்கு ஒரு போலியான “சுதந்திர” யோசனையை முன்வைத்தான்: “நீங்கள் தேவர்கள் போலாவீர்கள்” (ஆதியாகமம் 3:5) இன்றும் அவன் அதே வாதத்தையும் அதே வலையையும் பயன்படுத்துகிறான். ஒரு கிறிஸ்தவன் இதை எதிர்கொள்வதற்காக, “சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனா?” என்று கேட்க வேண்டும். கிறிஸ்து “நியாயப்பிரமாணத்திற்கு கீழானவராக உண்டாக்கப்பட்டார்” (கலாத்தியர் 4:5), அதற்கு பூரணமாய் அர்ப்பணித்து வாழ்ந்தார், மேலும் நாம் அவருடைய அடிச்சுவடுகளில் நடக்கவேண்டும் என்பதற்கு ஒரு முன் உதாரணமாய் காணப்பட்டார்... அதனால், பாவம் என்பது தவறான செயல்களுக்கு முந்தைய ஒரு உள்ளார்ந்த நிலையாகும். அது தேவனுக்குக் கீழ்ப்படிய மறுக்கும் இருதயத்தின் நிலையாகும். அது தெய்வீக பிரமாணத்தை விலக்கி, அதற்குப் பதிலாக சுய இச்சையையும், சுய விருப்பத்தையும் நிறைவேற்றுவதாகும்.

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.