முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

பாடல் பிறந்த கதை

1. திவ்யக்காளச் சத்தம் கேட்க இயேசு தோன்றும் காலத்தில்
ஆவலாய் அக்காட்சி கண்டானந்திப்பேன்;
மீட்கப்பட்ட தாசர் ஒன்றுகூடி மோட்ச லோகத்தில்
நிற்கும்போது நானும் கூடவே நிற்பேன்.
 
     தாசர் விண்ணில் ஒன்று கூடி (3)
     நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன்.
 
2. நித்திரை செய்த பக்தர் உயிர்த்து வானமேறி ஏகுவார் ;
மீட்பர் மாண்பைக் கண்டு ஆரவாரிப்பேன் ;
விசுவாசிகள் எல்லாரும் விண்ணில் கூடி வாழுவார் ;
அந்த நாளில் நானும் கூட வாழுவேன்.
                                                - தாசர் விண்ணில்
 
3. இயேசு நாதரின் மேன்மை எங்கும் கூறும்படிக்கே
சோர்வில்லாமல் வேலை செய்து ஜீவிப்பேன்;
பின்பு தாசர் ஒன்றுகூடி, தேவ சந்நிதியிலே
நிற்கும்போது நானும் கூடவே நிற்பேன்.
                                               - தாசர் விண்ணில்
 

J.M. பிளாக் தனது ஊரின் வாலிபர் சங்கத் தலைவராகப் பணியாற்றினார்.  பக்தி வளர்ச்சிக்கேதுவான காரியங்களில், வாலிபர்களை வழிநடத்தி வந்தார்.

ஒருமுறை, 14 வயது நிரம்பிய ஒரு வாலிபப் பெண், அழுக்கான ஆடை அணிந்து நிற்பதைக் கண்டார்.  அவளுடைய தகப்பன் ஒரு குடிகாரனென்று அறிந்து, அவளைத் தன் வாலிபர் சங்கத்தில் சேர்த்து, ஞாயிறு பள்ளியில் கலந்துகொள்ளுமாறு அவளை உற்சாகப்படுத்தினார்.  அவளும் இக்கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தாள்.  இவ்வாறு நாட்கள் கடந்தன.

பிளாக் நடத்திய ஞாயிறு பள்ளியில் முதலில் பிள்ளைகளின்  பெயர்களை வாசிப்பார்கள்.  அப்போது ஒவ்வொரு பிள்ளையும், பதிலுக்கு, ஒரு வேத வசனத்தை மனப்பாடமாய் கூறி, அமரும் வழக்கம் இருந்தது.  ஒரு நாள், பிளாக் ஒவ்வொரு பெயராய் வாசித்தபோது,  அந்த வாலிபப்பெண் வரவில்லை,  என்பதை அறிந்து, விசனமடைந்தார். 

அன்று தன் செய்தியில், ''கடைசி நாளில் புத்தங்கள் திறக்கப்படும்.  அப்போது, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள பெயர்கள் வாசிக்கப்படும்.  இவ்வாறு அழைக்கப்படாதவர்கள் பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.  எனவே, உங்கள் பெயர் வாசிக்கப்படுமா?  அப்போது சந்தோஷமாய் பதில் கூறுவீர்களா?''  என்று சவால் விடுத்தார்.  பின்னர் ஜெபத்திலும், ''இப்படிப்பட்ட பாக்கியத்தை, எங்கள் ஒவ்வொருவருக்கும் அருளும்'' என்று கூறினார், அதன்பின், முடிவுப்பாடலைப் பாட, பாடல் புத்தகத்தில் இந்த செய்திக்கு ஏற்ற பாடலைத் தேடினார்.  ஒன்றும் கிடைக்கவில்லை.

இக்குறையும், அந்தப் பெண்ணின் நிலையும் தன் உள்ளத்தில் மிகுந்த பாரமாக அழுத்த, அதையே சிந்தித்தவராக வீடு திரும்பினார்.  வீட்டில் நுழைந்தவுடன், தன் மனைவியிடம் கூட ஒரு வார்த்தையும் பேசாமல், தன் அறைக்குச் சென்று, இப்பாடலின் முதல் சரணத்தை, மடமடவென்று எழுதினார்.  மீதி இரண்டு சரணங்களும் அடுத்த 15 நிமிடங்களில் உருவாயின.  பின்னர், தனது பியானோ இசைக்கருவியில் உட்கார்ந்தவுடன், இப்போது நாம் பாடுகிற அதே ராகத்தை, புதிதாக, அப்பொழுதே அமைத்து முடித்தார்.  நித்திய ராஜ்ஜியத்தில், நமது பங்கு என்ன என்று, நம்மை இப்பாடல் சிந்திக்கத் தூண்டுகிறது.

கட்டுரைகள்
More articles ...
More articles ...
More articles ...
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
ஜூலை 24, 2026
வியாதி என்ற முக்கியமான விஷயத்தைப் பற்றி நாம் இப்போது சிந்திக்கப்போகிறோம். இதிலிருந்து யாராலும்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்படும் சர்தை சபையானது, வெளியில் உயிரோடிருப்பதாகப் பெயர்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
சார்லஸ் ஸ்பர்ஜன் அவர்கள், சங்கீதம் 110:3-ஐ அடிப்படையாகக் கொண்டு முழங்கிய இந்த உன்னதமான பிரசங்கம்,...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
சுவிசேஷப் பணி என்பது மனிதத் திட்டங்களாலோ அல்லது நிறுவனங்களின் பலத்தினாலோ நடைபெறுவது அல்ல; அது...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
நாம் எவ்வளவு பிரயாசப்பட்டாவது பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய காரியம் இது. இந்தப்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
மே 09, 2026
இன்று அநேக பெற்றோர்கள் குழந்தைகளின் மீது மிகவும் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத்...

தெடர்ந்து வாசிக்க ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.